கிச்சனில் பிரச்சனை செய்த ராதிகா..வேண்டுகோள் வைத்த ஈஸ்வரி..கோபி எடுத்த முடிவு..பரபரப்பான தருணம்
சென்னை: பாக்யாவிடம் கோபிக்காக காபி போட்டு கொடுக்கும்படி ஈஸ்வரி வேண்டுகோள் வைக்கிறார்.
பாக்கியா என்னால் அந்த வேலையெல்லாம் செய்ய முடியாது என்று பதிலடி கொடுக்கிறார்.
கிச்சனில் கோபிக்காக காபி போட்டு ராதிகா மீண்டும் பிரச்சனை செய்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 2ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் பாக்யாவிடம் ஈஸ்வரி தயங்கி தயங்கி தனக்கு இன்னொரு காபி வேண்டும் என்று கேட்க, இப்பதானே காபி குடித்தீங்க, உடனே நீங்க குடிக்க மாட்டீங்களே என்று கேட்க, அது கோபிக்கு தான் என்று சொல்ல, அதுவெல்லாம் என்னால் முடியாது. நீங்க இந்த வீட்டில் இருக்க சொன்னிங்கன்னு தான் நான் இருக்கிறேன். ஆனால் அவருக்கு மீண்டும் என்னால் வேலை செய்ய முடியாது என்று கூறி விடுகிறார்.

அடுத்ததாக செல்வியிடம் காபி கூட சொல்ல செல்வியும் என்னால் முடியாது என்று சொல்ல, அதைத் தொடர்ந்து இனியாவிடமும் ஈஸ்வரி காப்பி போட சொல்ல, எனக்கு குடிக்க மட்டும் தான் தெரியும் காபி போட தெரியாது என்று இனியாவும் சொல்லிவிட இனி நானே போட்டுக் கொள்கிறேன் என்று காபியை போட்டு இனியாவிடம் கொடுத்து அனுப்புகிறார்.
அதே நேரத்தில் ரூமில் காபிக்காக கோபி காத்துக் கொண்டிருக்க, ராதிகா ராத்திரி சரியாக தூக்கம் இல்லாததால் காலையில் தூங்கிவிட்டேன் என்று கோபி இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம் அங்கு சந்தோஷமாக இருக்கலாம் என சொல்ல, அது எல்லாம் முடியாது என்று ராதிகா சொல்லிவிட, மயூவிடம் போன் போட்டு பேசு என்று கோபி சொல்ல, ராதிகா ஃபோனை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது வெளியே கதவு தட்டப்படுகிறது, திறந்து பார்க்கும் ராதிகா இனியா காபி கப் உடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். பிறகு இனியா கோபிக்கு காபியை கொண்டு கொடுக்க அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்ட கோபி இனியாவிடம் பேச முயற்சி செய்கிறார். ஆனால் வேலை இருக்கிறது என்று இனியா கிளம்பி விடுகிறார். அந்த காபியை கோபி குடிக்க போகும்போது ராதிகா தட்டி விடுகிறார்.

இங்க நாம ரெண்டு பேரு இருக்கோம். உங்களுக்கு மட்டும் காபி கொடுத்து உங்களை அவங்க பக்கமாக திருப்ப பாக்குறாங்க, இனி இப்படியே போனா நீங்க கீழே போய் அவங்க கூட உட்கார்ந்து சாப்பிடுவீங்க. அப்போ என்னோட நிலைமை என்னாகும்? என்று ராதிகா திட்டிக்கொண்டு நான் உங்களுக்கு காபி போட்டு வருகிறேன் என்று கிச்சனுக்கு வருகிறார்.
கிச்சனில் பால் பாத்திரம் எங்கே இருக்கு என்று கேட்க யாருமே பதில் சொல்லாமல் இருக்க செல்வியை அதட்டி பேசுகிறார். செல்வி அதற்கு திட்டி விடுகிறார். பிறகு பால் பாக்கெட் எடுக்கும் ராதிகாவை ஈஸ்வரி திட்டுகிறார். இது எங்களுக்காக வாங்கி வைத்தது. இங்கு யாரும் வந்து இதெல்லாம் எடுக்கக்கூடாது என்று திட்ட, பிறகு பிளாக் காபி போட்டு கொண்டு ராதிகா கோபிக்கு கொடுக்கிறார்.
கோபி அதிர்ச்சியாகி அதை குடிக்க முடியாமல் திணறுகிறார்.ராதிகா அதை குடிக்க முடியாமல் கீழே ஊற்றி விடுகிறார். ஆனால் கோபி அப்படி செய்யக்கூடாது என்று ராதிகா மிரட்டுகிறார். பிறகு கோபி பாத்ரூமில் காபியை துப்பி விட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார். நல்ல காபி வந்தது அதையும் குடிக்க விடாமல் பண்ணிட்டு எப்படி என்ன கொடுமைப்படுத்த வைக்கிறார். நான் இந்த கல்யாணமே பண்ணி இருக்க கூடாது என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications