செழியனை திட்டும் கோபி..கலாய்க்கும் எழில்.. வீட்டிற்கு வரும் மயூ.. அடுத்த பிரச்சனை தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோபியிடம் ராதிகா பெயரை சொல்லி எழில் கலாய்க்க மொத்த குடும்பமும் கோபியை பார்த்து சிரிக்கின்றனர்.

கோபியின் வீட்டிற்கு ராதிகாவின் அம்மா மயூவை கூட்டிக்கொண்டு வந்துவிட புது பிரச்சனை தொடங்குகிறது.

மயூ கோபியின் குழந்தை கிடையாது என்று ஈஸ்வரி பிரச்சனை செய்ய கோபி அமைதியாக இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் மே 31ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில், அனைவரும் டைனிங் ஹாலில் அமர்ந்தபடி இங்கிலீஷ் கிளாஸ் பற்றி பேசிக் கொண்டிருக்க பாக்கியா தனக்கு தெரிந்த இங்கிலீஷ் பற்றி எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 31th promo and Episode Highlights

அப்போது பாக்யா பேசும் இங்கிலீஷ் வார்த்தையை கேட்டு அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். கடைசியாக ஜெனியின் பெயரிலும் தப்பு இருக்கிறது. ஜெனிக்கு அப்பா அம்மா தெரியாம ஜே வெச்சி போட்டுட்டாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி அந்த பக்கமாக வருகிறார்.

பிறகு எல்லாரும் சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க நானும் உங்க கூட சேர்ந்துக்கவா என்று கேட்டபடியே பாக்கியா அருகில் இருக்கும் சேரில் வந்து உட்கார்ந்து கொண்டு என்ன எல்லாரும் சிரிச்சிட்டு இருக்கிங்க என்று சொல்ல, அங்கு நடந்ததை பற்றி இனியா கோபியிடம் சொல்ல கோபி ஸ்போக்கன் இங்கிலீஷ் எல்லாம் வயதானதற்கு பிறகு படித்தால் சரியாக பேச முடியாது என்று சொல்ல, பாக்யா கெட்டதே நாள்கழித்து கத்துக்க முடியுதுன்னா நல்லது எப்ப வேணாலும் கத்துக்கலாம் என்று சொல்கிறார்.

அதை கேட்ட செழியன் அம்மா என்ன சொல்றாங்கன்னு தெரியுதா? நீங்க குடிக்கிறதை பற்றி தான் சொல்றாங்க என்று சொல்ல,செழியா நீ கட்சி மாறிட்டியா? என்று கேட்டு திட்டிக் கொண்டிருக்க, எழில் அவங்க வராங்க என்று சொல்ல, யாரு என்று கேட்க, ராதிகா என்ற பெயரை சொன்னதும் கோபி பதறி நான் காபி குடிக்கல நான் காபி குடிக்கல என்று புலம்புகிறார். பிறகு எல்லோரும் கோபியை பார்த்து சிரிக்க என்னை வச்சி காமெடி பண்றீங்களா? என்று அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார்.

பிறகு ராமமூர்த்தியும், ஈஸ்வரியும் செய்தித்தாள் படித்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராதிகா அம்மா கையில் பேக்கோடு வீட்டிற்குள் வருகிறார். எதற்காக இங்கே வந்தாய் என்று ஈஸ்வரி கேட்க, அதை கண்டுகொள்ளாமல் ராதிகா ராதிகா என்று கூப்பிட்டபடி நிற்க பிறகு ராதிகா வந்த பிறகு உன் மகளை தான் இந்த வீட்டை விட்டு நான் விரட்டணும்னு பாத்துட்டு இருக்கேன். நீயும் இங்க பெட்டியோட வந்துட்டியா? இங்க எல்லாரும் தங்குறதுக்கு சத்திரமா என்று ஈஸ்வரி திட்டுகிறார்.

நான் ஒன்னும் இங்க இருக்க வரல நான் மயூவை இங்க விட வந்திருக்கிறேன். அம்மாவும் அப்பாவும் இருக்கும் இடத்தில் தான் குழந்தை இருக்க வேண்டும் என்று ராதிகா அம்மா சொல்ல, கோபி ஒன்னும் மயூக்கு அப்பா கிடையாது. அது உன் பொண்ணுக்கு பொண்ணு அவ்வளவுதான் என்று பதில் கொடுக்க, கோபி என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 May 31th promo and Episode Highlights

ராதிகா இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் வா என்று அம்மாவை அழைத்தபடி மாடிக்கு கூட்டிக் கொண்டு செல்கிறார். பிறகு ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கோபியிடம் திட்டுகின்றனர். பிறகு ரூமில் ராதிகா, அம்மாவை திட்டுகிறார். நீ என்னதான் நினைச்சுகிட்டு இருக்க என்று மயூவை எதுக்கு கூட்டிட்டு வந்தா என்று திட்டுகிறார். பிறகு கோபி வர ராதிகா அம்மா அங்கிருந்து கிளம்புகிறார்.

பிறகு கோபியிடம் ராதிகா கோவப்படுகிறார். இங்க எல்லார் முன்னாடியும் மயூ என்னுடைய பொண்ணு தானே என்று ஒரு வார்த்தை கூட சொல்லல என்று கேட்க, நான் கீழ அம்மாகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்.மயூ இனி இங்கேதான் இருப்பா என்று, ஆனா நீதான் எப்பவும் என்ன புரிஞ்சிக்க மாட்டுக்கா, எப்பவும் என் மேல எல்லா பாரத்தையும் திணிக்கிறா என்று திட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+