தவறி விழுந்த ஜெனி..சஞ்சலப்படும் செழியன்..ராதிகாவை திட்டி தீர்க்கும் கோபி.. பரபரப்பான திருப்பம்
சென்னை: ராதிகாவிடம் நீ பேசுவதை கேட்கும் போது எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கு என்று கோபி திட்டுகிறார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெனி கால் வழுக்கி கீழே விழுந்து விடுகிறார்.

செழியனின் ஆபீசில் வேலை பார்க்கும் பெண் தவறான எண்ணத்தில் அவரிடம் பழகுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி மற்றும் ராதிகாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்போது உன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது. நீ உன்கிட்ட பேசி கொண்டு இருந்தா நான் பைத்தியக்காரன் ஆகிவிடுவேன் என்று கோபி கோபப்படுகிறார்.
அதோடு மயூவையும் இங்கே கூட்டி வந்துவிடலாம் என்று கோபி சொல்ல நான் வந்து கஷ்டப்படுறது போதாதா அவளும் கஷ்டப்படணுமா? என ராதிகா செல்கிறார். உங்களுக்காக நான் நிறைய சாக்ரிபைஸ் பண்ணி இருக்கேன் என்று சொல்ல, கோபி நானும் தான் உனக்காக என்னுடைய மொத்த குடும்பத்தையும் விட்டுட்டு வந்து இருக்கிறேன் என்று திட்ட ராதிகா எழுந்து வெளியே வருகிறார்.
அதே நேரத்தில் செல்வி மற்றும் பாக்யா இருவரும் கிச்சனில் இருக்க பாக்கியா லேட்டாயிடுச்சு இன்னைக்கு நைட்டு இங்கே இருந்தது என்று சொல்ல, செல்வி இல்லக்கா நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்கிறார். கோபி ராதிகாப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது பாக்யா அதைப் பற்றி எல்லாம் யோசிக்க எனக்கு நேரம் கிடையாது. அதை எல்லாம் யோசித்தால் நான் மூலையில் உட்கார்ந்து விடுவேன் என்று சொல்கிறார்.
செல்வி கிளம்பியதும் பாக்கியா கதவை சாத்திவிட்டு உள்ளே வர ராதிகா கீழே இறங்கி வருகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் முறைத்து கொள்கின்றனர். பிறகு மறுநாள் காலையில் பாக்யா அமிர்தா மற்றும் செல்வி என மூவரும் கேண்டின்க்கு கிளம்புகிறார்கள். ஈஸ்வரி கோவிலுக்கு போகிறேன் என்று கிளம்புகிறார். தாத்தா ராமமூர்த்தி நிலா உடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். பிறகு நிலா பாப்பாவை பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு கூட்டிட்டு போக போறேன் என்று கிளம்புகிறார்.

அப்போது நிலா ஜெனி நிலாவுக்கு பால் கொண்டு வந்து கொடுக்க, அது தவறி கீழே கொட்டி விடுகிறது. பிறகு ராமமூர்த்தி நான் வெளியே ஏதாவது வாங்கிக் கொடுத்துகிறேன் என்று நிலா பாப்பாவை தூக்கிக் கொண்டு கிளம்பி விட அவர்கள் சென்ற பிறகு ஜெனி கீழே கொட்டிய பாலை கவனிக்காமல் அதில் காலை வைத்து வலிக்கி விழுகிறார். பிறகு தட்டு தடுமாறி படிக்கட்டில் அமர்ந்து பாப்பாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அழுது கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் செழியன் கிளைன்ட் மாலினியை சந்திக்க வர அவர் ப்ராஜெக்ட் பற்றி இப்பவே எதுக்கு பேசணும் இன்னும் நாலஞ்சு வருடம் உங்களோடு தான் டிராவல் பண்ண போறேன். நம்மள பத்தி பேசி தெரிஞ்சுக்கலாம் என்று சொல்லி, உங்களுக்கு கல்யாணம் ஆனதை கேட்ட அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருக்கிறேன் என்று சொல்ல செழியன் ஏன் எனக் கேட்க இந்த மாதிரி பசங்க எல்லாம் கல்யாணம் பண்ணிட்டா நாங்க என்ன பண்றது என்று பேசுகிறார்.

இப்போது வீட்டில் ஜெனி இந்த நேரத்தில் ரொம்ப ஜாக்கிரதை இருக்கனும்னு சொல்றாங்க. ஆனா விழுந்துட்டேன் இனி குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயத்தில் அழுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications