ஈஸ்வரி சொன்ன பொய்யை நம்பும் கோபி..கண்கலங்கும் ராதிகா.. பாக்கியா செய்த செயல்..திடீர் திருப்பம்
சென்னை: ஜெனியை கீழே தள்ளிவிட்டது ராதிகா தான் என்று ஈஸ்வரி சொன்னதை கோபி நம்பி ராதிகாவை திட்டுகிறார்.
யார் என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா? என் மேல நம்பிக்கை இல்லையா என ராதிகா கண்கலங்கி அழுகிறார்.
ராதிகாவை புரிந்து கொண்ட பாக்யா ராதிகாவுக்கு சமாதானம் கூறுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் மே 8ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ராதிகா ஜெனி குறித்து நலம் விசாரிக்க, ஈஸ்வரி அப்போ அவர் கீழ விழும்போது நீ மட்டும் தான் இருந்தியா? அப்படின்னா நீ தான் அவளை தள்ளி விட்டாயா? என்று கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதற்கு ராதிகா இப்படியெல்லாம் பேசாதீங்க மனசு கஷ்டமா இருக்கு, என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது என்று கண்கலங்கியபடி ரூமுக்குள் செல்கிறார். இங்கே பாக்கியா ஏன் அத்தை இப்படி எல்லாம் பேசுறீங்க? அவங்க ஏன் ஜெனியை தள்ளிவிட போறாங்க என பேச, ராமமூர்த்தி பால் கீழே கொட்டிடுச்சி அப்ப நானும் தான் இருந்தேன். நான் துடைத்து இருக்கணும் அது நான் செய்யாம போனது என்னுடைய தப்புதான் என்று கூறுகிறார்.

பிறகு ரூமுக்கு வந்த ராதிகா என்னை பத்தி இவங்க எல்லாம் என்னதான் நினைச்சுட்டு இருக்காங்க? என்னை பிடிக்கல என்பதற்காக என்ன வேணும்னாலும் பேசுவாங்களா? இதை இப்படியே விடக்கூடாது என அழுதபடியே கோபிக்கு போன் போட்டு உடனடியாக பாத்துட்டு இருக்கும் வேலையை விட்டுட்டு வீட்டுக்கு வர சொல்கிறார்.
கோபி வீட்டுக்கு வரும்போது ஈஸ்வரி டென்ஷனாக இருப்பதை பார்த்து என்ன ஆச்சு என கேட்க, ராதிகா ஜெனியை தள்ளி விட்டதாக சொல்ல, ஈஸ்வரி சொன்னதை அப்படியே நம்பும் கோபி ராதிகாவை பார்த்து கண்டபடி திட்டுகிறார். நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க அப்படி என்னதான் உனக்கும் ஜெனி மீது கோபம். ஜெனி ஏதாவது பேசினா நீ இப்படியா பண்ணனும்,ஏன் ஜெனியை பிடித்து கீழே தள்ளின? என்று கேட்க ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு ராதிகா கோபமாக நிறுத்துங்க என்று கூறி, உங்க அம்மா தான் எதுவும் தெரியாம பேசுறாங்கன்னா, நீங்களும் அவங்க சொல்றத அப்படியே நம்பிட்டு வந்து என்ன இப்படி கேக்குறீங்க? என்னை பார்த்தா உங்களுக்கு கொலைகாரி மாதிரி தெரியுதா? சொல்லுயா சொல்லு என கோபியின் சட்டையை பிடித்து கோபப்படுகிறார்.
பிறகு கோபி அதிர்ச்சியாகி நிற்க ராதிகா நடந்த விஷயத்தை சொல்ல, கோபி மன்னிப்பு கேட்க, யாருக்கு வேணும் உங்க மன்னிப்பு என்று கோபத்தோடு சத்தம் போடுகிறார். பிறகு வீட்டுக்கு வரும் ராதிகா தன்னுடைய அம்மாவிடம் நடந்த விஷயத்தை சொல்லி கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications