கோபிக்கு பண நெருக்கடி கொடுத்த நண்பன்.. கோபத்தில் ராதிகா.. விபத்தில் சிக்கி தவிக்கும் பாக்கியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் செப்டம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் கோபி பாக்கியாவிடம் பேசுவதை பார்த்த ராதிகா கோவப்பட்டு திட்டிக்கொண்டு போகிறார். அதைத் தொடர்ந்து கோபிக்கு பண விஷயத்தில் நெருக்கடி ஏற்படுகிறது.

Baakiyalakshmi Serial 2023 September 15th episode full update

அதே நேரத்தில் மூணாறில் இருந்து கிளம்பி வந்த பாக்கியா ரோட்டில் ஆக்ஸிடெண்டில் மாட்டிக்கொள்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி பாக்யாவிடம் போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது உனக்கு ஒழுங்கா கார் ஓட்ட தெரியுமா? இல்லை என்றால் சொல்லு டிக்கெட் போட்டு என் அம்மாவையும், பொண்ணையும் நான் பிளைட்ல கூட்டிட்டு வருகிறேன் என்று சொல்ல, பாக்கியா அதெல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க உங்க வேலையை பார்த்தால் போதும் என்று சொல்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 15th episode full update

அப்போது கோபி உனக்கு பிளைட்ல போறது என்றால் எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா? உன்கிட்ட பணம் இருக்கிறதா என்று நக்கலாக பேச அதற்கு பாக்கியா அதெல்லாம் இருக்கு. உங்க கிட்ட பணம் இருக்கா உங்களால் செலவு செய்ய முடியுமா? உங்களுக்கு செலவுக்கு பணம் வேணும் என்றால் சொல்லுங்க, தரலாமா வேண்டாமா என்று நான் யோசிக்கிறேன் என்று கோபமாக பேசிவிட்டு போனை வைக்கிறார்.

இதை எல்லாம் ராதிகா பின்னாடி நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவை பார்த்த கோபி மலுப்பி சமாளிக்க ராதிகா பாக்கியா இடத்தில நான் இருந்திருந்தால் உங்களை சும்மாவே விட்டிருக்க மாட்டேன். இதெல்லாம் உங்களுக்கு தேவையா? அவங்ககிட்ட பேசாம உங்களால இருக்கவே முடியாதா? என்று திட்டி விட்டுப் போகிறார். அதைத்தொடர்ந்து பாக்யா கார் ஓட்டிட்டு போகும் போது இனியாவும் செல்வியும் காரக்குள்ளே பாட்டு போட்டு டான்ஸ் ஆடிக்கொண்டே வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து கோபியின் நண்பன் கோபியை சந்திக்க வருகிறார். அப்போது கோபி பாக்கியாவை பற்றி புலம்ப, நான் எப்ப உன்னிடம் பேசினாலும் நீ பாக்யாவை பற்றி தான் எப்பவும் பேசிக்கிட்டே இருக்க, நான் வந்தது அதற்காக இல்லை. எனக்கு அவசரமா கொஞ்சம் பணம் தேவைப்படுது. நீ இனியாவுக்கு காலேஜ் பீஸ் கட்டுவதற்காக வாங்கிய பணம் எனக்கு இப்போ வேணும் என்று கேட்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 15th episode full update

அதற்கு கோபி தன்னுடைய ஆபீசுக்கு போன் செய்து விசாரிக்க அங்கே அவர்கள் பணம் இல்லை என்று சொல்ல, அதற்கு கோபி இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி தந்து விடுகிறேன் என்று தன்னுடைய நண்பரிடம் சொல்லி அனுப்புகிறார்.

பிறகு அதைத்தொடர்ந்து பாக்கியா கார் ஓட்டிட்டு வரும்போது வயதான ஒருவர் சைக்கிளோடு வந்து பாக்யாவின் காரில் விழுந்து விடுகிறார். அப்போது அங்கு இருப்பவர்கள் எல்லோரும் ஒன்று கூடி பாக்யாவை திட்டுகின்றனர். வேகமாக வந்து அந்த முதியவர் மீது மோதி விட்டார் என்று எல்லோரும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த இடத்திற்கு போலீஸ் வந்துவிட பாக்யாவிடம் விசாரணை நடத்துகின்றனர்.

அதைத் தொடர்ந்து பாக்கியாவிடம் போலீஸ் லைசன்ஸ் காட்டுங்க என்று கேட்க அதற்கு பாக்கியா எல்லா இடமும் தேடிவிட்டு தொலைஞ்சு போன பர்ஸ்க்குள் தான் லைசன்ஸ் இருந்துச்சு என்று சொல்ல, இனியா, ஈஸ்வரி என எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதைத்தொடர்ந்து பாக்யா போலீசார் உடன் பேசிக் கொண்டிருக்கும்போது பழனிச்சாமி போன் பண்ணுகிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 15th episode full update

அவரிடம் நடந்த விஷயத்தை ஈஸ்வரி சொல்ல அவர் போலீசுடன் பேசுகிறார். பிறகு லைசென்ஸ் கொண்டு வந்து கொடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்ல பாக்யாவை வீட்டுக்கு போன் பண்ணி லைசென்ஸ் இருக்கா என்று கேட்க சொல்ல பாக்கியாவும் ராமமூர்த்திக்கு போன் பண்ணி நடந்ததை சொல்கிறார்.

அப்போது ராமமூர்த்தி கேண்டினில் நின்று கொண்டு பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே ராதிகாவை பார்க்க வந்த கோபியும் ஏதோ பிரச்சனை என்று தெரிந்து குழப்பத்தில் நிற்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+