Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமாவையே மிஞ்சிய பாக்கியலட்சுமி சீரியல்.. டுவிஸ்ட் என்கிற பெயரில் நடந்த கூத்து.. இனி கதை இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சற்றும் எதிர்பார்க்காத பிரமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இந்த சீரியலில் அடுத்து இனி என்ன மாதிரி கதை நகரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில் இன்று வெளியான பிரமோ பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது ஏற்கனவே இறந்து போய்விட்டதாக கூறிய அமிர்தாவின் முதல் கணவர் இன்று பிரமோவில் மீண்டும் உயிரோடு வந்திருக்கிறார்.

Baakiyalakshmi Serial 2023 September 4th to 9th promo and fans reaction

பொதுவாக சீரியலில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள். காரணம் சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் அதற்கு தகுந்த மாதிரி கதை ஆரம்பத்தில் தொடங்கியிருந்தாலும் ஒவ்வொரு வாரமும் டிஆர்பியின் அடிப்படையில் கதையில் பல மாற்றங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலையில்தான் இருக்கின்றனர். பொதுவாக சீரியல் ஒளிபரப்பாகிறது என்றால் அதை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அதனாலயே பல நேரங்களில் பல சீரியல்களில் திடீரென்று சில திருப்பங்களும் பிரச்சனைகளும் வருவது வழக்கம்தான். ஆனால் அது கதைக்கு தகுந்த மாதிரி போய்க் கொண்டிருந்தால் ரசிகர்கள் ரசிக்க தான் செய்வார்கள். ஆனால் சில நேரங்களில் கதைக்கு சம்பந்தமே இல்லாத வகையில் சீரியலை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் முட்டாள் என்று நினைக்கிற மாதிரியே சில சீரியல்களில் திடீர் ட்விஸ்ட் என்கிற பெயரில் கதை நகர்த்தப்படுகிறது.

அது குறித்து எப்போது இருக்கும் இணையதள வசதி மூலமாக அதிகமான ட்ரோல்ஸ்களும், மீம்ஸ்களும் குவிந்து வந்தாலும் இதுவும் சீரியலுக்கு ஒரு பப்ளிசிட்டி போல தான் சிலர் நினைத்துக் கொண்டு கதையை நகர்த்தி வருகிறார்கள். ஆனால் அதுவரைக்கும் அந்த சீரியல் ஆரம்பத்தில் ரசிகர்களின் மனதினை கவர்ந்திருந்தாலும் சில சின்ன சின்ன தவறுகளால் பலர் அந்த சீரியலை வெறுக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் சற்றும் எதிர்பார்க்காத வகையில் டுவிஸ்ட் என்கிற பெயரில் கதையில் அதிரடியான பல மாற்றங்கள் செய்திருக்கின்றனர். அதாவது ஏற்கனவே அமிர்தாவின் முதல் கணவர் கணேசன் ஆக்சிடெண்ட் ஆகி இறந்து போய் இருப்பார். இறக்கும் தருவாயில் அமிர்தாவிடம் சத்தியம் கூட வாங்கி இருப்பார். பிறகு அமிர்தா கண் முன்னாடி தான் அவர் இறந்திருப்பார். அவருடைய உடல் போஸ்ட் மார்டமும் செய்யப்பட்டது.

அப்படி இருக்கையில் இன்று வெளியான ப்ரோமோவில் அந்த கணேசன் மீண்டும் இன்று உயிரோடு வந்திருக்கிறார். கணேசன் இறந்த நாளான இன்று அவருடைய பெற்றோர் அவருடைய புகைப்படத்தை வைத்து சாமி கும்பிடலாம் என்று இருக்கும்போது புகைப்படத்தை பார்த்து கதறி அழுது கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் சரியாக வீட்டிற்கு வந்த கணேசன் அம்மா அப்பாவிற்கு மட்டுமல்லாமல் சீரியல் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்து அமிர்தா எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இனி கதை எப்படி பயணிக்க போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. ஏற்கனவே இந்த சீரியலில் கோபிக்கு இரண்டு பொண்டாட்டி. அதுபோல செழியனும் இப்போது மனைவி வளைகாப்பு பண்ணி வீட்டுக்கு போய் இருக்கும் நேரத்தில் மாலினியோடு குடித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதுபோல பாக்கியாவை கோபி விவாகரத்து செய்த பிறகு இப்போது பழனிச்சாமியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பழனிசாமியின் அம்மா ஒரு பக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் அமிர்தாவுக்கும் இரண்டு கணவர். இப்படியே கதை போய்க் கொண்டிருந்தால் ரசிகர்களின் மனதிலும் இரண்டு பொண்டாட்டி இரண்டு கணவர் என்கிற கான்செப்ட் மனதில் ஆழமாக பதிந்துவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள் பலரும் பதறிப் போய் கமாண்ட் வெளியிட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே சில வாரங்களாக சீரியலில் கதையில் பெரிய அளவில் வேகம் இல்லாததால் டிஆர்பி குறைய தொடங்கியது. அதை சரி செய்வதற்காக இப்படி ஒரு திருப்புமுனையை வைத்திருக்கிறார்களா? என்று என்ன தோன்றுகிறது. அதே நேரத்தில் ஒருவேளை இது கனவாக கூட இருக்கலாம். கணேசனின் அம்மாவோ அல்லது அப்பாவோ கூட கனவு கண்டு இருக்கலாமா என்றும் என்ன தோன்றுகிறது.

Baakiyalakshmi Serial 2023 September 4th to 9th promo and fans reaction

அதே நேரத்தில் இது கனவு அல்லாமல் நிஜமாக இருந்தால் இப்போதைக்கு இந்த சீரியல் பரபரப்பாக பேசப்பட்டாலும் பின்னாளில் பலருடைய வெறுப்புக்கு உள்ளாக கூடும் என்பது ஒவ்வொருவருடைய கமெண்ட்களில் தெரிகிறது. ஏற்கனவே விஜய் டிவியில் இதே போன்று ஒரு சீரியலில் இரண்டு மனைவிகளை கட்டிக்கொண்டு ஒரு கணவர் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இரண்டு கணவரை வைத்துக்கொண்டு அமிர்தா என்ன முடிவு எடுப்பார்?

அதுபோல ஏற்கனவே இப்போதுதான் அமிர்தா மற்றும் எழிலுடைய ரொமான்ஸ் சீன் சீரியலில் அதிகமாக வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் கணேசன் வந்திருப்பதால் ரசிகர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். அதே நேரத்தில் இந்த இரண்டு பொண்டாட்டி இரண்டு கணவர்கள் கதையை முடித்து சமுதாயத்திற்கு நல்ல கருத்துக்களை சொன்னால் நன்றாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+