பாக்கியலட்சுமி: ஈஸ்வரிக்கு ஆப்பு வைத்த ராதிகா! பாக்யா எடுத்த முடிவால் இனியா அதிர்ச்சி.. மீண்டுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி எபிசோடில் ராதிகா பாக்யா வீட்டிற்கு வந்ததால் மீண்டும் ரூம் பிரச்சனை வருகிறது. அப்போது ஈஸ்வரியின் கேள்விகளுக்கு ராதிகா பதிலடி கொடுத்திருக்கிறார். ராதிகாவுக்கு சப்போர்ட்டாக பாக்யா முடிவெடுக்கிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் பழைய கதை தான் ரிப்பீட் மோடில் ஓடி கொண்டிருக்கிறது. ஆனாலும் இன்று புது பிரச்சனைகளும் நடந்திருக்கிறது. ராதிகாவை வீட்டிற்குள் தங்க வைக்க வேண்டும் என்பதற்காக கோபி நெஞ்சுவலி வந்தது போல நடிக்கிறார். அதனால் பதறிப்போன ஈஸ்வரி நான் எதுவும் கேட்கலப்பா உன் இஷ்டம் என்று சொல்கிறார்.

அப்போது பாக்யா கிச்சனில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஜெனி அங்கிளுக்கு உண்மையிலே நெஞ்சு வலிக்குதா என்று கேட்க, கண்டிப்பா இல்ல அவர் நடிக்கிறார் என்று பாக்யா சொல்கிறார். அதைத்தொடர்ந்து பாக்கியாவும் செல்வியும் ரெஸ்டாரண்ட் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது ராதிகா வருகிறார்.
முதலில் இந்த வீட்டில் கோபிக்கே உரிமை இல்லை. அப்படி இருக்கும்போது நானும் மயூவும் வந்திருக்கிறோம் உங்களை மேலும் கஷ்டப்படுத்துறோம் என்று ஃபீல் பண்ணி பேச அதற்கு பாக்கியா அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க வருத்தப்படாதீங்க என்று ஆறுதல் சொல்கிறார். உடனே செல்வி ராதிகாவிடம் நீங்க இங்க வந்தது தான் அக்காவுக்கு சந்தோஷம்.

நீங்க அங்கேயும் கோபி சார் இங்கேயும் கஷ்டப்படுறதை அக்காவால பார்க்க முடியல என்று பேசிக் கொண்டிருக்கும் போது ராதிகா நான் சொல்ல வந்ததை சொல்லிட்டேன் கிளம்புறேன் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். மறுபக்கத்தில் செழியன் கம்ப்யூட்டரில் ரெஸ்டாரண்டுக்கு தேவையான லிஸ்ட் போட்டு பாக்கியாவிற்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ஈஸ்வரி வந்து அம்மாவும் பையனும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்டு உட்காருகிறார். அப்போது பாக்யா ரெஸ்டாரண்டுக்கு தேவையான லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி தண்ணீர் குடிக்க வருகிறார். பாக்கியாவிடம் ரொம்ப நன்றி பாக்கியா, நீ இல்லன்னா நான் ராதிகாவை போய் பார்த்து இருக்க மாட்டேன்.

நீ சொன்னது தான் கரெக்ட். நான் மட்டும் அங்கு போகலைன்னா விபரீதமா என்ன வேணாலும் நடந்திருக்கும் என்று சொல்கிறார். அதோடு ராதிகாவும் மயூவும் வந்ததும் நீ எதுவும் பேசல. அவங்க எங்க இருக்கறதில உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா? என்று கேட்க நீங்க உங்க பொண்டாட்டி குழந்தைகளோட இருக்குதுல எனக்கு என்ன பிரச்சனை?
ஆனால் நீங்க இந்த வீட்டில் இருக்கிறது எனக்கு பிடிக்கல தான். ஆனாலும் இவங்க உங்களோட உடம்ப பாத்து பயப்படுறாங்க. என் பசங்களும் நீங்க இங்கே இருக்கணும்னு ஆசைப்படுறாங்க அதனால் எல்லாம் யோசித்து தான் நான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன் என்று சொன்னதும், கோபி அப்போ நான் இங்க தங்கிக்கலாமா? என்று கேட்க, நீங்க இங்க தங்கனும்னா வாடகை கொடுக்கணும் என்று சொல்கிறார்.

அதை கேட்டு ஈஸ்வரி கோபப்படுகிறார். ஆனால் கோபி வாடகை கொடுக்க சம்மதித்தது இன்னும் கரண்ட், தண்ணி பில்லு, கிச்சனுக்கு என்று ஒவ்வொரு நாளுக்கும் உள்ள தொகையை பாக்கியா சொல்ல கோபி சம்மதித்து விட்டு போகிறார். அடுத்ததாக ராதிகா இங்கே இருக்கிறதே எனக்கு பிடிக்கல நீ கோபி கிட்ட வாடகை கேட்டுக்கிட்டு இருக்கிறா என்று ஈஸ்வரி பாக்யாவை திட்டுகிறார்.
அடுத்ததாக ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்திருக்கும்போது ராதிகா வருகிறார். அப்போது ரூம் பிரச்சனை வருகிறது, ஈஸ்வரி என் ரூமில் நீ இருக்கக் கூடாது என்று பிரச்சனை செய்கிறார். அதற்கு ராதிகா அப்போ நாங்க ஏற்கனவே தங்குன ரூமுக்கே போறோம் என்று சொல்கிறார். அதோடு மயூவும் இனியாவும் ஒரே ரூமில் தங்கிக்கட்டும் என்று கோபி சொல்ல அதற்கு இனியா சம்மதிக்காமல் இருக்கிறார்.

பிறகு பாக்யா என்னோடு தங்கிக்கட்டும். இனியா பாட்டியோடு தங்கிகட்டும் என்று சொல்கிறார். இதனால் கோபமான ஈஸ்வரி பாக்யாவிடம் ராதிகா இந்த வீட்டுக்கு வந்ததும் அவளை கோபியோடு தனியா தூங்க வைக்கணுமா என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இரவு தூங்கும் போது என் மயூ பாக்யாவிற்கு நன்றி சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications