பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா..? அதிகம் யாருக்கு தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கும் இந்த சீரியலில் அதிகமான நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அவர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலில் பாதியில் அறிமுகம் ஆனாலும் நடிகர் ரஞ்சித் தான் அதிகமான சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வலம் வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பெண்களின் மத்தியில் தன்னம்பிக்கையை கொடுக்கும் ஒரு சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால்தான் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது.
தன்னை விட்டுட்டு தன்னுடைய கணவர் சென்று விட்டாலும் தான் எந்த இடத்திலும் தோற்றுவிடாமல் ஒவ்வொரு இடத்திலும் கடின முயற்சியால் பாக்யா வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். அதோடு இதுவரைக்கும் தன்னை அவமானப்படுத்தியவர்கள் முன்னிலையில் தனக்கு இருக்கும் திறமையை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கும் பாக்யாவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் கூட பாக்யாவை வீட்டை விட்டு போக சொன்ன கோபியிடம் தான் ஒரு மாதத்திற்குள் ரூபாய் 18 லட்சத்தை தந்து விடுவேன் என்று சவால் விட்டிருக்கிறார். அப்படி தந்ததும் நீங்கள் இந்த வீட்டை விட்டு போய்விட வேண்டும் என்றும் கோபியிடம் கூறி இருக்கிறார். இதனால் பாக்கியா 18 லட்சத்தை கொடுத்து விடுவாரா? அல்லது தோற்று விடுவாரா? என்ற எதிர்பார்ப்பும், பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி பரவி வருகிறது. அதன்படி சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு பழனிச்சாமியாக என்ட்ரி கொடுத்த நடிகர் ரஞ்சித் தான் அதிக சம்பளம் வாங்க கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுபோல ஹீரோயின் பாக்கியலட்சுமி ஆக நடிக்கும் சுசித்ராவிற்கு ஒரு நாளைக்கு ரூபாய் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறதாம்.
தொடர்ந்து கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ்க்கு 12000, அதுபோல ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மாவுக்கு 12000 ரூபாய் சம்பளமாக தரப்படுகிறதாம். அதை தொடர்ந்து எழில் கேரக்டரில் நடிக்கும் விஷாலுக்கு பத்தாயிரம் ரூபாயும், ஜெனியாக நடிக்கும் திவ்யா கணேஷ்க்கு பத்தாயிரம் ரூபாயும் அதுபோல செழியன் கேரக்டருக்கு ரூபாய் 10,000,, இனியாவுக்கு 8000 சம்பளம் வழங்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் வைரலாகி வரும் வகையில் இது உண்மையானதா? என்று இன்னும் உறுதியாக கூறப்படவில்லை.












Click it and Unblock the Notifications