Bigg Boss 8: போட்டியாளராகும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை..! கன்டென்டுக்கு பஞ்சமே இருக்காது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை ஒருவரும் போட்டியாளராக கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கன்டென்டுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம்.

விஜய் டிவியில் 7 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கும் நிலையில் அடுத்த அக்டோபர் மாதத்தில் எட்டாவது சீசன் தொடங்க இருக்கிறது. இதில் புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி கலந்து கொள்கிறார். இதுவரைக்கும் கமல்ஹாசன் ஏழு சீசன்களாக தொகுப்பாளராக இருந்த நிலையில் எட்டாவது சீசனில் தான் ரெஸ்ட் எடுக்க போவதாக கூறி இருக்கிறார். அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே தொகுப்பாளராக மாறி இருக்கிறார்.

vijay tv bigg boss entertainment

டிஆர்பிஐ மையப்படுத்தி சின்னத்திரை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வரும் நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வைப்பதற்காக பல முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோல இதுவரைக்கும் இல்லாத வகையில் டாஸ்க் எல்லாம் புதுமையாகவும் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கவரும் வகையில் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

vijay tv bigg boss entertainment

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பும் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியில் வெளியாவது வழக்கம்தான். அந்த பட்டியலில் இடம் பெற்று இருக்கும் அதிகமான போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அந்த வகையில் இந்த முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கிறது.

vijay tv bigg boss entertainment

அதில் பாரதி கண்ணம்மா சீரியலில் மூலம் பிரபலமடைந்த நடிகர் அருண் முதலிடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் டிடிஎஃப் வாசன் மற்றும் அவருடைய காதலியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஜோயா பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் பிரபலப்படுத்துவதற்காக நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கும் பார்த்திபன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் மற்றும் இயக்குனராக சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அந்த வரிசையில் பார்த்திபன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

vijay tv bigg boss entertainment

இவர்களை தொடர்ந்து விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே மற்றும் தென்றல் வந்து என்னை தொடும் போன்ற பல சீரியல்களில் நடித்த நடிகை பவித்ரா ஜனனி மற்றும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த வினோத் பாபுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக குறிப்பிடுகிறது. இந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் தற்போது நடித்து வரும் நடிகை அக்ஷிதாவும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அக்ஷிதா ஏற்கனவே பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். அவருடைய அண்ணன் அவினாஷ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வருகிறார். அக்ஷிதா பாக்கியலட்சுமி சீரியலுக்கு முன்பு காற்றுக்கென்ன வேலி சீரியல் உட்பட வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். அதனால் சின்னத்திரை ரசிகர்களுக்கு அவர் பரிச்சயமானவர்தான். இவர்களின் வரிசையில் மேலும் எந்த போட்டியாளர்கள் பிக் பாஸில் கலந்து கொண்டால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீங்க? உங்க கமெண்ட்களை தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+