கோபி எல்லாம் மாமனாரா? ஜெனி கேட்ட "நச்” வார்த்தை... குடும்பத்தில் இனி அடுத்த பிரச்சனை இது தானா?
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரை பற்றி திவ்யா கணேஷ் பல தகவல்களை கூறி இருக்கிறார்.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நிஜ வாழ்க்கையில் எனக்கு கோபி போல ஒரு மாமனார் இருந்தால் தான் என்ன மாதிரி முடிவு எடுப்பேன் என்பதை பற்றி வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
கோபி கேரக்டரை பற்றி திவ்யா கணேஷ் திட்டிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

மனம் கவர்ந்த கேரக்டர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக பாக்யா இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவு கொடுத்து அவருடைய முயற்சிக்கு பக்கபலமாக இருக்கும் அவருடைய மூத்த மருமகளாக ஜெனி கேரக்டரில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். இந்த சீரியலில் மூலமாக நடிகை திவ்யா கணேஷுக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நிலையில் சின்னத்திரையின் மூலமாக வீட்டில் இருக்கும் குடும்ப பெண்களின் மனதை கவர்ந்த மருமகளாகவும் மாறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் இதுதான் முடிவு
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த சீரியலில் குறித்து பல தகவல்களை அவர் பேசியிருக்கிறார். அதில் கோபி போன்ற ஒரு மாமனார் உங்களுக்கு வாய்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு, திவ்யா கணேஷ் நிச்சயமாக ஜெனி கேரக்டரில் இல்லாமல் நான் திவ்யா கணேசன் ஆக நடந்து கொண்டால் கோபியை இரண்டில் ஒன்று கேட்பேன். அதே சமயம் அவர் திருமணம் செய்து கொண்டது உள்ளிட்ட விஷயங்கள் அவருடைய பர்சனலாக இருக்கலாம் என்பதால் என்னுடைய மாமியாருக்கு எந்த அளவிற்கு சப்போர்ட் செய்ய முடியுமோ அதை பண்ணுவேன்.

மாமியாருக்கு சப்போர்ட் இருக்கு
மாமனார் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு மாமியாருக்கு உறுதுணையாக இருப்பேன். மாமியார் அவமானப்படும் போது நான் நிச்சயமாக உரக்க பேசுவேன், கேள்வி கேட்பேன் என்று கூறிக்கொண்டு ஆனால் நிஜத்தில் எனக்கு கோபி மாதிரி ஒரு மாமனார் எல்லாம் வேண்டாம் என்று அவர் கையெடுத்து கும்பிட்டு சிரித்த படியே கேட்டு இருக்கிறார். நடிகை திவ்யா கணேஷ் சொன்னது போலவே தற்போது இந்த சீரியலிலும் ஜெனி கேரக்டரில் தன்னுடைய மாமியார் பாக்கியருக்கு பக்கபலமாக தான் இருந்து வருகிறார். ஈஸ்வரி பாக்யாவை அவமானப்படுத்தும் போதும், சரி செழியன் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் போதும் சரி, அந்த இடத்தில் ஜெனி தைரியமாக கேள்வி கேட்டு வருகிறார். இதனாலேயே இவரை அதிகமானோர் பாராட்டி வருகின்றனர்.

தைரியம் பிடிச்சிருக்கு
அதுமட்டுமல்லாமல் தற்போது பாக்கியா ராதிகா ஆபீஸில் கேட்டரிங் ஆர்டர் கிடைப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்தது ஜெனி தான். அதுமட்டுமல்லாமல் பாக்கியா அடுத்தடுத்து எடுத்து வைக்கும் முயற்சிகளுக்கு மோட்டிவேஷன் கொடுக்கும் ஒரு மருமகளாகவும் இருந்து வரும் நிலையில், அவருடைய சொந்த வாழ்க்கையிலும் அதே போலத்தான் அவருடைய கேரக்டர் இருக்கும் என்று கூறியிருப்பதால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். ஏற்கனவே பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் செல்வது மருமகளுக்கு தெரியுமே தவிர மாமியாருக்கு தெரியாது. தற்போது இன்று ஈஸ்வரிக்கும் தெரிந்திருக்கிறது. அதனால் இனி என்ன மாதிரி பிரச்சனை நடக்கப்போகிறதோ என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.












Click it and Unblock the Notifications