காதலால் பட்ட கஷ்டம், அவமானம்.. நான் இப்படி பண்ணி இருக்க கூடாது! பாக்கியலட்சுமி சீரியல் இனியா எமோஷனல்
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடிகை நேஹா நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் காதலித்த நபர் குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதோடு தன்னுடைய காதல் முடிவு அடைந்து விட்டது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதுபோல தன்னுடைய குடும்பத்தை பற்றியும் முதல் முறை மனம் திறந்து பேசியிருக்கும் நேஹா, தன்னை பற்றி சமூக வலைதளத்தில் பரவி வரும் வதந்திகளுக்கும் பதில் கொடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா அதற்குப் பிறகு வாணி ராணி, சித்தி 2, உட்பட சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலும் இவர் குழந்தையாக தான் நடிக்க தொடங்கி இருந்தார்.இப்போது இவர் கல்லூரி படிக்கும் பெண்ணாக மாறியிருக்கிறார்.
அதே நேரத்தில் சன் டிவியில் புதியதாக தொடங்கியிருக்கும் லட்சுமி சீரியலில் கதாநாயகியின் தங்கச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய குடும்பம் மற்றும் காதல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் நேஹா பேசுகையில் என்னுடைய குடும்பத்தில் எனக்கு ஒரு தங்கை பிறந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் நடக்க தொடங்கி இருக்கிறது.
என்னுடைய தங்கைக்கு இப்போது தான் மூன்று வயது ஆகிறது. எனக்கு 22 வயது ஆகிறது. ஆரம்பத்தில் என்னுடைய தங்கை பிறந்ததும் அப்பா அம்மா அவருக்கு பாசம் காட்டுவதை பார்த்து நான் கோபப்பட்டேன். இப்போது அப்படி எல்லாம் நினைப்பது கிடையாது. எனக்குன்னு ஒரு தங்கச்சி வந்துவிட்டது எனக்கு ஒரு சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது.
வீட்டில் நான் அவளோடு அடிக்கடி விளையாடிக் கொண்டிருப்பேன்.
அதுபோல நான் சில மாதங்களுக்கு முன்பு ஒரு காதலால் ஏமாற்றப்பட்டேன். நான் ஒருவரை நம்பி காதலித்தேன். ஆனால் அவர் உண்மையாக இருக்கவில்லை. காதலுக்குள் உண்மை இருக்க வேண்டும். ஆனால் அது இல்லை என்ற போது தான் நமக்கு ஏமாற்றம் கிடைக்கிறது. அந்த ஏமாற்றத்தால் நான் அதிகமாக அழுதேன். இப்போது அதில் இருந்து வெளியே வந்து விட்டேன். இதுவும் கடந்து போகும் என்கிற மாதிரி என்னுடைய வாழ்க்கையில் ஒரு முதல் காதல் கடந்து போய்விட்டது.
அதுபோல நான் கிரிக்கெட்டர் ஒருவரை காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. அது உண்மை கிடையாது. நான் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது எல்லோரும் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த குறிப்பிட்ட கிரிக்கெட்டரை எல்லோரும் பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதனால் நான் அவருடைய வீடியோவை ஸ்டேட்டஸில் போட்டேன்.
ஆனால் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொண்டு நான் அவரை காதலிப்பதாக செய்திகள் பரப்ப தொடங்கி விட்டார்கள். ஆனால் நான் அவரை பார்த்ததும் கிடையாது. அவரிடம் பேசியதும் கிடையாது. அதனால் எனக்கு அந்த கிரிக்கெட்டருடன் காதல் எல்லாம் இல்லவே இல்லை என்று அந்த பேட்டியில் நேஹா பேசியிருக்கிறார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications