பையனுக்கு ஆட்டிசம்.. எதையும் வெளிய தெரியாம பார்த்துகிட்டேன்.. நடிகை ரேஷ்மாவின் சோகமான மறுபக்கம்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மா தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
தனக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர் என்றும் அதில் ஒரு குழந்தை இறந்து விட்டது என்றும் கூறியிருக்கிறார்.
தனக்கு இருக்கும் இரண்டு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை ஆட்டிசம் பாதித்த ஆண் குழந்தை என்றும் ஆனால் அவனுக்கே அந்தப் பிரச்சினை தெரியாது என்று ரேஷ்மா கூறி இருக்கிறார்.

சோகமான மறுபக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவோடு தற்போது சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ராதிகாவை அதிகமான ரசிகர்கள் திட்டி வருகின்றனர். இந்த நிலையில் அவர் தன்னுடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசிய பழைய வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில் தனக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள் என்றும், அதில் முதல் குழந்தையை தான் அனைவருக்கும் தெரியும். இரண்டாவது குழந்தை இறந்து விட்டது. மூன்றாவது பையனுக்கு ஆட்டிசம் பாதித்து இருக்கிறது ஆனால் அதை நான் வெளியே யாரிடமும் சொன்னதுமில்லை. பகிர்ந்து சோகத்தை காட்டிக் கொண்டதுமில்லை. அவனுக்கு கூட இந்த பிரச்சனை தெரியாது. அந்த அளவிற்கு அவனை நான் சந்தோஷமாகவும் ஜாலியாகவும் வளர்த்து வருகிறேன். அவன் நன்றாக இங்கிலீஷ் பேசுவான் என்று அந்த வீடியோவில் சோகமான விஷயத்தையும் சிரித்தபடியே பேசிக் கொண்டிருப்பதை பார்த்து ரசிகர்கள் இவருக்கு ஆறுதல் கூறி பாராட்டி வருகிறார்கள்.

பலருக்கும் எடுத்துக்காட்டு
பொதுவாக வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் வாழ்க்கையில் வரும் தடைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் போன்ற மோட்டிவேட் ஆன விஷயங்களை நமக்கு பிடித்த செலிபிரிட்டி களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். அதிலும் அனைத்து துறைகளிலும் பெண்கள் நுழைந்துவிட்ட சூழ்நிலையில் பல்வேறுவிதமான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக பெண்கள் வாழ்க்கையில் திருமணமும், குழந்தை பிறப்பும் தவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது அந்த நிகழ்வில் ஏதேனும் தவறு எதிர்பாராத சம்பவங்களும் நடந்தால் அதையும் மீறி தமது துறையில் எவ்வாறு தொடர்ந்து போக வேண்டும். என்பதற்கு ரேஷ்மா வாழ்க்கையும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

பிக் பாஸில் சொன்ன சோகக்கதை
பிக் பாஸ் 3 சீசனில் கலந்துகொண்ட இவர் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது இவரது வாழ்க்கை சம்பவங்களை கேட்ட பிக் பாஸ் கண்டஸ்டன்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் உட்பட அனைவரையும் கண்கலங்க வைத்தது .இரண்டுமுறை சிறுவயதிலேயே திருமண வாழ்வில் ஏமாற்றம் அடைந்ததும், கணவரால் தாக்கப்பட்டு 5 மாத கர்ப்பத்துடன் தானாகவே கார் ஓட்டிச் சென்று 5 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தையும் மீதி ஐந்து மாதங்கள் குழந்தையை பிழைக்க வைப்பதற்கு அவர் பட்ட கஷ்டங்களும், அதுமட்டுமின்றி மூன்றாவது குழந்தை 9 மாதத்தில் இறந்து பிறந்ததையும் கூறியபோது ஒரு பெண்ணால் இவ்வளவு சோகத்தையும் வலியையும் தாங்க முடியுமா என்று என்னும் அளவிற்கு அனைவரின் கண்களிலும் கண்ணீர் குளமாகியது.

விடாமுயற்சி அதிகம்
ஆனால் ரேஷ்மா அந்த நிலையிலும் சோர்ந்துவிடாமல் விடாமுயற்சியால் தாம் சார்ந்த துறையில் முன்னேறி வருகிறார் இவரது தோற்றத்தையும் முன்னேற்றத்தையும் பார்த்தா இவருக்குப் பின்னால் இப்படியும் ஓர் சோகக்கதை இருக்குமா என்று ஆச்சரியப்பட தோன்றும். திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை திருப்திகரமாக இல்லை என்று தவறான முடிவுகளை எடுக்கும் பெண்களுக்கு மத்தியில் இரண்டு முறை திருமண வாழ்கையில் கணவனால் ஏமாற்றப்பட்டாலும், குழந்தைப் பிறப்பிலும் பல்வேறு கஷ்ட சூழ்நிலைகளை எதிர்கொண்டு இன்று ஒரு செலிபிரிட்டி ஆக இருந்து வரும் ரேஷ்மா தைரியமானவர்தான் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications