பாக்யாவிற்கு திருமணம்!? நேரடியாக விஷயத்தை கேட்ட பழனி அக்கா.. ஈஸ்வரி எடுத்த முடிவு! இப்படி ஆயிடுச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் பதிமூன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் பாக்கியா மற்றும் பழனிச்சாமிக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று பழனிச்சாமியின் குடும்பத்தினர் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இது பற்றி பழனிச்சாமி இடம் கேட்க அதற்கு பழனிசாமி எதிர்பார்க்காத பதிலை சொல்கிறார்.

அதே நேரத்தில் பழனிச்சாமிக்கு மட்டுமல்லாமல் பழனிச்சாமியின் அக்கா மகன் விமலுக்கும் காதல் வருகிறது. இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial April 13th promo and episode full update

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு பாக்யாவின் குடும்பம் மற்றும் பழனிச்சாமியின் உறவினர்கள் எல்லோரும் வந்திருந்த நிலையில் பங்க்ஷன் சிறப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில், பழனிச்சாமியோடு எழில், ராமமூர்த்தி, விமல் என எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பழனிசாமியின் அக்கா மகன் விமல் பழனிச்சாமியிடம், மாமா இப்பதான் நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்க? என்று கேள்வி கேட்க,

அதற்கு பழனிச்சாமி நீயும் கேட்க ஆரம்பிச்சுட்டியா டா என்று சொல்கிறார். அதே நேரத்தில் பக்கத்தில் இருந்த எழில் உங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும் என்று கேட்க, அதற்கு பழனிசாமி எனக்கு என்ன விருப்பம் என்று நான் சொல்லாமலே அவங்களுக்கு தெரிஞ்சிருக்க வேண்டும் என்று பழனி சொல்ல அங்கு பாக்யா வித்தியாசமான டேஸ்ட்ல உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பண்ணி இருக்கிறேன். டெஸ்ட் பண்ணி பாருங்க என்று கொடுக்க அதை வாங்கி சாப்பிடும் போது அவர் சொன்னதையே நினைத்துப் பார்க்கிறார்.

Baakiyalakshmi Serial April 13th promo and episode full update

அப்போது மேலும் சொல்லுமாறு ராமமூர்த்தி கேட்க அதற்கு பழனிசாமி எங்க அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லும்போது பாக்யா பழனிச்சாமியின் அம்மாவை அழைத்துக் கொண்டு ஒரு இடத்தில் உட்கார வைத்து கவனிக்கிறார். அதை ஓர கண்ணால் கவனித்த பழனிச்சாமி என்னுடைய அக்கா தங்கச்சிகளையும் அவங்களோட சகோதரி மாதிரி பார்த்துக்கொள்ளனும் என்று சொல்ல,

அப்போது பழனிச்சாமி சகோதரி புடவையில் ஏதோ கறைப்பட்டு இருப்பதால் அதை பாக்கியா துடைத்துக் கொண்டிருக்கிறார். இறுதியாக அவங்களை பார்க்கும்போது என்னுடைய மண்டைக்குள் லைட் எரியணும் என்று சொல்ல பாக்யா நிக்கிற இடத்தில் உள்ள லைட்டுகள் எல்லாம் பளிச்சென்று எரிகிறது. அப்போது பழனிச்சாமியின் ஹார்ட்டில் காதல் அம்பு விட்டது போல காட்டுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து பழனிச்சாமி பாக்கியா பின்னாடி சுற்றுகிறார். அடுத்த கட்டத்தில் பாக்யாவுக்கு பழனிச்சாமியின் அம்மா சமைத்ததற்காக காசு கொடுக்க அவர் அதை வாங்க மறுக்கிறார். அதனால் சரியென்று விட்டுவிடுகிறார். பிறகு பாக்யா குடும்பம் வீட்டிற்கு கிளம்பும் போது பழனி ஒரு பக்கம் நெளிந்து கொண்டிருக்கிறார். அவருடைய அக்கா மகன் விமல் இனியாவை பார்த்து நெளிகிறார்.

Baakiyalakshmi Serial April 13th promo and episode full update

இவர்கள் போன பிறகு பழனியில் அம்மா அக்கா பழனி இடம் நேரடியாகவே பாக்யாவை கல்யாணம் செய்யுமாறு கேட்க அதற்கு அவர் முதலில் மறுக்கிறார். பிறகு நான் சொன்ன பிறகு நீங்க இதை பத்தி அவங்க வீட்டில் பேசலாம். அதுவரைக்கும் ஒண்ணுமே பண்ண கூடாது என்று சொல்கிறார். மறுபக்கத்தில் பாக்யா வீட்டில் எல்லோரும் பழனிக்கு பொண்ணு பார்க்க முடிவெடுத்து இருக்கிறார்கள். ஈஸ்வரியும் தானும் பொண்ணு பார்த்து சொல்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+