செழியன் இப்படி பேசலாமா? பாக்யாவின் பெருந்தன்மை ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்ன ஆகும்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் பாக்கியா பழனிச்சாமியின் பிறந்தநாளுக்கு சமைத்ததற்கு பணம் வேண்டாம் என்று பழனிச்சாமி இடமே கூறி இருக்கிறார். மறுபக்கத்தில் ஜெனி நடந்து கொள்வதை பார்த்து செழியன் கடுப்பாகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் செழியன் ரூமுக்குள் போனதும் ஜெனி உட்கார்ந்திருக்க, செழியன் தூங்க போலாமா என்று கேட்கிறார். ஜெனி அதுக்குள்ள என்ன? கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் என்று சொல்லி பேசத் தொடங்குகிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ஜெனி மாலினி பற்றி கேட்க, அதற்கு செழியன் அவங்க நம்பர் எல்லாம் இப்போ இல்ல டெலிட் பண்ணி பிளாக் லிஸ்ட்ல போட்டுட்டேன் என்று சொல்கிறார்.

அப்போது ஜெனி என்னை விட மாலினி அழகா? என்று கேட்க செழியன் நீதான் அழகு என்று சொல்ல, அப்புறம் எதுக்கு நீ அவங்களை தேடி போன என்று மடக்குகிறார். அதை எடுத்து இனிமே அவ பேர கூட நான் சொல்ல மாட்டேன் என்று செழியன் தூங்கலாமா மாலினி என்று கேட்க, ஜெனி நீ திருந்தவே மாட்ட என்று தலையணையை தூக்கி அடிக்கிறார்.
பிறகு சாரி கேட்டு சமாதானம் ஆனதும் ஜெனி தூங்கியதும் செழியன் எழுந்து கீழே வர அங்கே எழில் உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் தன்னுடைய கதையை சொல்லி கவலைப்படுகிறார். அப்போது எழில் ஆரம்பத்தில் நீதானே என்னை ஜெனி கவனிக்கவே மாட்டுக்கா.., என்னை பற்றி கவலைப்படல, என்கிட்ட பேச மாட்டாங்க என்று கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருந்த, இப்போ அவங்க உன் மேல இருக்கிற அன்பை சந்தேகமா காட்டுறாங்க அவ்வளவுதான் .
கொஞ்ச நாள் போனதும் அவங்களுக்கு உன் மேல நம்பிக்கை வந்துட்டா பழையபடி மாறிடுவாங்க என்று ஆறுதல் கூறுகிறார். மறுபக்கத்தில் பழனிச்சாமி வீட்டில் பாக்யாவுக்கு பணம் கொடுத்தாச்சா? என்று கேட்க, அதற்கு அவருடைய அம்மா பாக்கியா பணத்தை வாங்க மாட்டேன்னு சொல்லிட்டு உன்னோட பிறந்தநாள் கிப்ட் என்று சொல்லிட்டா என்று சொல்ல பழனிச்சாமி நான் போய் கொடுத்துட்டு வரேன் என்று கிளம்புகிறார்.
அப்போது விமல் இனியாவை பார்ப்பதற்காக நானும் வருகிறேன் என்று கிளம்புகிறார். பிறகு இருவரும் ரெஸ்டாரண்ட் வந்ததும் விமல் பாக்கியாவிடம் இனியாவின் போன் நம்பரை எடுப்பதற்காக உங்க போனை குடுங்க ஆன்ட்டி கொஞ்சம் கேம் விளையாடிட்டு தரேன் என்று பொய் சொல்லி வாங்குகிறார். பிறகு ரெஸ்டாரண்ட் சுற்றிப் பார்த்துட்டு என் பிரண்டு வரேன்னு சொல்லி இருக்கான் அவன் கூட ஷாப்பிங் போறேன் என்று கிளம்பி போகிறார்.
அடுத்ததாக பழனிச்சாமி சமைத்ததற்காக பணத்தை கொடுக்க பாக்யா பணம் வேண்டாம் என்று சொல்ல, பழனிசாமி ஒரு ஆளுக்கு சமைத்து இருந்தா பரவாயில்ல.. நீங்க நூறு பேருக்கு சமைச்சு இருக்கீங்க அதனால இந்த பணத்தை வாங்கிக்கோங்க என்று கொடுக்க, பாக்கியா அன்புக்கு விலை பேசாதீங்க என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications