தாத்தா ஆன பிறகு அப்பாவா? கோபிக்கு மாமியார் கொடுத்த அதிர்ச்சி.. ஈஸ்வரிக்கு வந்த சந்தேகம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 22ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அந்த வகையில் ராதிகா கர்ப்பமாக இருப்பது குறித்து ராதிகாவின் அம்மா கோபி இடம் ஏற்றி விடுகிறார். அதே நேரத்தில் கோபி நடவடிக்கையை பார்த்து ஈஸ்வரிக்கு சந்தேகம் வருகிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பழனிச்சாமி வாங்கி வந்து கொடுத்து புத்தகத்திற்காக பாக்கியா பணம் கொடுக்க, அதற்கு பழனிச்சாமி அதெல்லாம் வேண்டாம் அன்புக்கு விலை பேசாதீங்க என்று சொல்கிறார். அடுத்ததாக ராதிகா அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது கோபி வீட்டிற்கு வர அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லும் கமலா இந்த குழந்தையை பெத்துக்கிங்க என்று சொல்கிறார்.

அதற்கு கோபி என்ன சொல்ல என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும்போது உங்க பிள்ளைங்க யாரும் உங்களுக்கு சப்போர்ட்டா நிக்கல. எல்லோரும் அந்த பாக்கியாவிற்கு சப்போட்டா தான் இருக்காங்க. உங்களுக்குன்னு ஒரு குழந்தை இருந்தா உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி வந்து நிற்கும் என்று அட்வைஸ் செய்கிறார். அதோடு உங்க விஷயத்தை அம்மா கிட்ட சொல்லிட்டீங்களா? என்று கேட்க அதற்கு கோபி இல்லை கூடிய சீக்கிரத்தில் சொல்லிடுவேன் என்று சொல்ல,
அதற்கு கமலா ஏதாவது பிரச்சனைனா என்கிட்ட சொல்லுங்க நான் வந்து உங்க அம்மா கிட்ட பேசிக்கிறேன் என்று சொல்கிறார். அடுத்ததாக ராதிகாவும் கோபியும் அங்கிருந்து கிளம்பி பாக்கியா வீட்டிற்கு வர கோபி ராதிகாவை கைதாங்கலாக பிடித்து வருவதை பார்த்த ஈஸ்வரி நீ எதுக்குடா அவளை புடிச்சுகிட்டு நடந்து வர்ற? என்று கேட்கிறார். அதோடு அவளுக்கு என்ன இன்னுமா உடம்பு சரி இல்லை என்று கேட்க, அதற்கு ராதிகா இப்ப பரவாயில்ல என்று சொல்கிறார்.
பிறகு ஜெனி வாமிட் நின்னுடுச்சா என்று கேட்க, கோபி அது அவ்வளவு சீக்கிரமாக நிற்காது, திடீர் திடீர்னு இனி வந்துட்டே தான் இருக்கும் என்று உளறுகிறார். அதற்கு ஈஸ்வரி என்னடா உளறிக்கிட்டு இருக்கிற என்று கேட்க அதற்கு கோபி நான் உளறுறேனா? அது எனக்கே தெரியாது என்று சமாளிக்கிறார். பிறகு அதோடு ராதிகாவுக்கு உடம்பு சரியில்லாததால் தான் இப்படி புலம்பி கொண்டிருப்பதாக சொல்கிறார்.
அடுத்ததாக ராதிகா எனக்கு டயர்டா இருக்கு என்று மாடிக்கு செல்ல கோபி பொறுமை என்று பிடித்துக் கொண்டு படியேற்றி விட ஈஸ்வரி கோபியை கூப்பிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்க அதற்கு கோபி எதை எதையோ சொல்லி எஸ்கேப் ஆகிறார். பிறகு பாக்யாவிடம் ஈஸ்வரி முதல் வாரம் லாபம் வரல நஷ்டம்னு சொன்னியே இப்போ எப்படி இருக்கு என்று கேட்க அதற்கு பாக்கியா இப்போ ஓரளவு லாபம் வந்திருக்கு என்று சொல்ல அதற்கு ஜெனி வாழ்த்துக்கள் சொல்கிறார்.

பிறகு ஈஸ்வரி அமிர்தாவிடம் பேசாமல் இருப்பது பற்றி அமிர்தா எழிலிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அதற்கு எழில் எனக்கு சில ஆசைகள் இருக்கு, அதெல்லாம் நடந்த பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த வீட்டில் உன் கூட பேச நிறைய பேர் இருக்காங்க. பேசாதவங்க பற்றி கவலைப்படாத என்று அமிர்தாவை வெளியே கூட்டி செல்கிறார்.

மறுபக்கத்தில் பழனிச்சாமி விதவிதமான சட்டைகளில் போட்டோ எடுத்து அதை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து பாக்கியா பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த ஸ்டேட்டஸை இனியா பார்த்து பாக்கியாவிடம் சொல்ல பாக்கியாவும் போட்டோக்களை பார்த்து ஆச்சரியப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications