கர்ப்பமாக இருக்கும் ராதிகாவிடம் ஈஸ்வரி கேட்ட கேள்வி.. தைரியமாக பேசிய பாக்கியா.. ஜெனி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 24 ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா வாந்தி எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்து ஈஸ்வரி சந்தேகப்படுகிறார். அதோடு ராதிகாவுக்கு கஷாயம் வைத்து கொடுக்க சொன்ன ஈஸ்வரி இடம் பாக்கியா எதிர்த்து பேசுகிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கிச்சனுக்கு வந்த ராதிகா தாளிப்பு வாசனை வந்ததால் வாந்தி எடுக்க செல்வி இந்த அம்மா என்ன புள்ளதாச்சி பொண்ணு மாதிரி தாளிப்பு வாசனைக்கு எல்லாம் வாந்தி எடுக்குது என கேட்கிறார். பிறகு ராதிகா மீண்டும் வர அமிர்தா உடம்பு சரியாகிட்ன்னு சொன்னீங்களே இன்னும் சரியாகலையா? என்று கேட்க அதற்கு ராதிகா முதலில் சரியான மாதிரி தான் இருந்தது.

ஆனால் இன்னும் கொஞ்சம் வாமிட்டிங் இருக்க தான் செய்கிறது என்று சமாளிக்கிறார். அப்போது கிச்சனுக்கு வரும் ஈஸ்வரி யார் வாந்தி எடுத்தது? நீயா என்று அமிர்தாவை கேட்க, அமிர்தா ராதிகாவை கை காட்டுகிறார். பிறகு ராதிகா மேலே சென்றதும் ஹாஸ்பிடல் போயாச்சு மாத்திரையும் போட்டாச்சு ஆனா இன்னும் வாந்தி நிக்கலையா அப்போ என்னவா இருக்கும் என்று சந்தேகத்தோடு யோசிக்கிறார்.
மறுபக்கத்தில் செழியன் குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கும் போது ஜெனி பல பேரை சொல்லி குழந்தையை கொஞ்சுவதற்கு பதிலாக அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் பங்க்ஷன் வைத்து ஒரு பெயரை முடிவு செய்யலாம் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து செழியன் ஒரு நாலஞ்சு பெயரை சொல்ல ஜெனி அதற்கெல்லாம் நோ சொல்கிறார். பிறகு நான் ஒரு பெயரை சொல்றேன் என்று மாலினி பெயரை சொல்ல செழியன் கடுப்பாகிறார்.
பிறகு கோபி கீழே வர ஈஸ்வரி இன்னும் அவளுக்கு உடம்பு சரியாகல கசாயம் வச்சு கொடுத்தால் சரியாயிடும் என்று சொல்ல, அதற்கு கோபி அதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல ஈஸ்வரி நீ சும்மா இருடா என்று பாக்கியாவை சுடுதண்ணீர் வைக்க சொல்ல அதற்கு பாக்கியா நான் வேற வேலையில் இருக்கேன் என்று சுடுதண்ணி வைக்க மறுக்கிறார். அதற்கு ஈஸ்வரி ஒரு சின்ன வேலை தானே என்று சொல்ல அதற்கு பாக்கியா சின்ன வேலையோ பெரிய வேலையோ யாருக்கு செய்கிறோம் என்பது ரொம்ப முக்கியம் என்று சொல்ல ஈஸ்வரியே கிச்சனுக்கு சென்று தண்ணீர் வைத்து ஓமம் எங்க இருக்கு, சீரகம் எங்கே இருக்கு என்று கேட்கிறார்.
அதற்கு பாக்கியா எல்லாம் அந்த கபோர்ட்ல தான் இருக்கு. அப்படி இல்லன்னா வீட்லயே இல்லைன்னு அர்த்தம். உங்க பையனை கடைக்கு போய் வாங்கிட்டு வர சொல்லி கசாயம் போட்டுக்கோங்க என்று கிச்சனை விட்டு வெளியே வருகிறார். பிறகு ஈஸ்வரி கசாயம் வைத்து ராதிகாவிடம் கொடுக்க ராதிகாவும் குடிக்க போகிறார். அந்த நேரத்தில் கோபி ராதிகா நோ நோ பேபிக்கு ஒத்துக்காது என்று சொல்ல, ஈஸ்வரி என்னது பேபியா என்று கேட்கிறார்.
அதற்கு கோபி நான் ராதிகாவை தான் பேபி என்று சொன்னேன் என்று சமாளித்து மேலே கூட்டி செல்ல ராதிகா எதுக்கு குடிக்க வேண்டாம் என்று சொன்னீங்க என்று கேள்வி கேட்கிறார். அதற்கு கோபி டாக்டர் என்ன சொன்னாங்க? நான் கொடுக்கிற மருந்து மாத்திரையை தவிர வேறு எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு சொன்னாங்களே என்று நினைவுபடுத்துகிறார்.
பிறகு எல்லாரும் உட்கார்ந்து குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்க பாக்கியா குழந்தைக்கு பெயர் வைக்கலாம் என்று பேச்சை எடுக்க ராமமூர்த்தி இந்த வாரத்தில் 3 நல்ல நாள் இருக்கு என்று சொல்கிறார். அடுத்ததாக ஜெனி நான் ஒரு பெயரை சொல்கிறேன் என்று சொல்ல, செழியன் பதறி மாலினி என்று சொல்ல வந்து பிறகு மானசி என்று மாற்றி செல்கிறார். அடுத்ததாக பெயரை தேர்வு செய்யும் வேலையை ஈஸ்வரி இடம் ஒப்படைக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து பழனிச்சாமி நான் சீக்கிரமா கல்யாணம் பண்ணி அம்மாவுடைய ஆசையே நிறைவேற்றுவேன் என்று சொல்லி வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கும் போது பாக்கியா அங்கு வந்து பேசிக் கொண்டிருக்கும் போது நான் தொந்தரவு பண்ணிட்டேனா? என்று கேட்க, அதற்கு பழனிசாமி இது உங்க வீடு மேடம் நீங்க எப்ப வேணாலும் வரலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications