ராதிகா கர்ப்பம் தெரிந்து பாக்யா சொன்ன வார்த்தை.. குழந்தை விஷயத்தில் ஈஸ்வரி கொடுத்த அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஏப்ரல் 27ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயம் பாக்கியாவிற்கு தெரிய வந்திருக்கிறது.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா காபியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருக்கும் போது மயூ ராதிகாவிற்கு சாப்பாடு கொண்டு வர பாக்யாவை பார்த்து சிரிக்கிறார். மயூவை பார்த்த பாக்யா கூப்பிட்டு உட்கார வைத்து சாப்பிட ஸ்நாக்ஸ் கொடுக்கிறார். மயூ அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன் என்று சொல்கிறார். அதோடு அம்மா பாவம் எப்போதும் வாந்தி எடுத்துட்டே இருக்காங்க.

ஆனா எனக்கு சந்தோஷம் தான். என் பிரண்ட்ஸ்ங்ககிட்ட எல்லார்கிட்டயும் சொல்லிட்டேன். அவங்களும் சந்தோஷப்படுறாங்க என்று ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்ல வரும்போது மாடியில் இருந்து ராதிகா ஓடி வந்து மயூவை சொல்லவிடாமல் தடுக்கிறார். அப்போது மயூ ராதிகாவிடம் நீங்க ஏன் புளிப்பாவே சாப்பிடுறீங்க உங்களுக்கு சமைச்சதையே எனக்கும் பாட்டி கொடுக்குறாங்க. எனக்கு பிடிக்கவே இல்லை என்று சொல்ல அதற்கு ராதிகா புளி அதிகமா சேர்த்து சமைச்சிருப்பாங்க என்று சமாளிக்கிறார்.
அடுத்ததாக எழில் கல்யாண வீட்டிற்கு கிளம்ப அப்போது நிலா, ஈஸ்வரி இடம் வந்து பாட்டி நான் நல்லா இருக்கேனா என்று கேட்க ஈஸ்வரி அழகா இருக்க என்று குழந்தையை கொஞ்சுகிறார். அதை பார்த்து அமிர்தா சந்தோஷப்படுகிறார். அப்போது எழில் நீங்க கல்யாண வீட்டுக்கு வரீங்களா வெளியே போயிட்டு வந்த மாதிரி இருக்குமே என்று கூப்பிட அதற்கு ஈஸ்வரி என் பேச்சைக் கேட்காதவங்க கூட நான் பேசுவதே கிடையாது. இதுல நீ வெளியே போக உன் கூட கூப்பிடுவியா?
நீ நிலாவை நல்லா படிக்க வச்சு கட்டி கொடு. அதுல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஆனால் இந்தப் பொண்ணு உன் பொண்ணு கிடையாது. வளர்ந்த பிறகு இவளுக்கு விஷயம் தெரிந்தால் உன்னை அப்பானு கூட கூப்பிட மாட்டா என்று காயப்படுத்த, அதைக் கேட்டு அமிர்தா அழுகிறார். மறுபக்கத்தில் ராதிகா அம்மாவுக்கு போன் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது பாக்கியா மாடியில் துணி காய போட்டபடியே ராதிகா பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார். ராதிகா அம்மாவிடம் எதுக்கு மயூவிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பி வச்சீங்க என்று கோபப்படுகிறார். அவ எல்லார்கிட்டயும் உண்மையை சொல்லி இருந்தா என்று கேட்க, அதற்கு கமலா இன்னும் சொல்லலையா என்று கேட்கிறார்.
அதற்கு இல்லை என்று சொல்லியபடி எனக்கு வாந்தி இன்னும் நிற்கல. எதை சாப்பிட்டாலும் வயிற்றை பிரட்டி கொண்டே வருகிறது என்று பேசிக்கொண்டு இருக்க பாக்கியாவை பார்த்தது போனை கட் பண்ணி கொண்டு மாடியில் இருந்து கீழே இறங்க ராதிகா தலை சுற்றி கீழே விழப்போக பாக்கியா பிடித்துக் கொள்கிறார். பிறகு பாக்கியா ராதிகாவிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி நடந்துக்கிறீங்க? என்று கேட்க ராதிகா ஒன்றுமில்லை என்று சமாளிக்கிறார்.
அதற்கு பாக்கியா நீங்க நடந்துக்கிறதை எல்லாம் பார்த்தால் கர்ப்பமாக இருக்கிறவங்க நடந்துக்கிற மாதிரியே இருக்கு என்று சொல்கிறார். அதோடு உண்மையை சொல்லுங்க நீங்க கர்ப்பமாக இருக்கீங்களா என்று கேட்க ராதிகா டேட் தள்ளிப்போச்சு.. வாந்தி எடுக்கும்போது தான் அதையே கவனிச்சேன். டாக்டர் கிட்ட போய் செக் பண்ணும் போது கன்பார்ம் பண்ணிட்டாங்க. நாங்க ரெண்டு பேருமே இதை எதிர்பார்க்கல என்று சொல்ல பாக்கியா நல்ல விஷயம் தானே என்று பேச ராதிகா கீழே இறங்கி வந்து விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications