பாக்கியா வீட்டில் அடுத்த பிரச்சனை.. மீண்டும் வந்த ஜெனியின் குடும்பம்.. ஈஸ்வரி ஜெயிலில் இருந்திருக்கலாமே
சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ஜெனி தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை வீட்டில் தெரிவித்து இருக்கும் நிலையில் அதை வைத்து ஈஸ்வரி புது பிரச்சனையை கூட்டுகிறார். அதே நேரத்தில் ஜெனியின் குடும்பமும் மீண்டும் பாக்யா வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.
அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஜெனி பாக்யாவிடம் மயக்கமாகவும், வாந்தி வருவதும் போல இருப்பதாக சொல்ல ஆளாளுக்கு எல்லோரும் ஒவ்வொரு மருந்தை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி ஜெனியிடம் வந்து எதுவும் விசேஷமா ஜெனி என்று கேட்க, அதற்கு ஜெனி அப்படித்தான்னு நினைக்கிறேன்.

ஆனால் என்னன்னு இன்னும் கன்ஃபார்ம் ஆகல என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது நீ சொல்லும் விஷயங்களை பார்க்கும் போதே தெரிகிறது இந்த கன்ஃபார்ம் தான், இன்னொரு குழந்தை வரப் போகுது என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் செழியன் கடைக்கு போயிட்டு பிரக்னன்சி கிட் வாங்கிக் கொண்டு வருகிறார். அதை செக் பண்ணி பார்த்துவிட்டு குடும்பத்திடம் கர்ப்பம் கன்ஃபார்ம் என்று ஜெனி சொல்ல எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இனியா எனக்கு இனி ஒரு குட்டி பையன் தான் வேண்டும் என்று கேட்க, அதற்கு பாக்யா எந்த குழந்தையா இருந்தாலும் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ராமமூர்த்தி வந்து செழியனை கண்டிபிடித்துக் கொள்கிறார். ஈஸ்வரி ஜெனியின் அம்மாவிற்கு ஃபோன் பண்ணி சொல்ல அவரும் அவருடைய அப்பாவும் வருகின்றனர். அந்த நேரத்தில் வரும் எழில் செழியனை தூக்கி சந்தோஷமாக கொண்டாடுகிறார்.

பிறகு சண்டை போட்டுக் கொண்டே இருந்தீங்க. ஆனால் இந்த குழந்தை எங்கிருந்து வந்தது என்று கிண்டலாக பேச எல்லாரும் சிரிக்கின்றனர். பிறகு ஈஸ்வரி குழந்தைக்கு பெயர் வைப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ஜெனியின் அப்பாவும் அம்மாவும் வருகின்றனர். அவர்களும் எல்லோரிடமும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு குழந்தைக்கு பெயர் வைப்பது குறித்து பேச்சு வர ஜோசப் லேசாக கோபப்படுகிறார் அதனால் இப்போதைக்கு இதைப் பற்றி பேச வேண்டாம் என்று ஜெனியின் அப்பாவை சமாதானம் செய்து ஜெனியின் அம்மா கூட்டிக்கொண்டு போகிறார்.
அதற்கு பிறகு ஈஸ்வரி சத்தான சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது ராமமூர்த்தி வீட்டில் தொடர்ந்து கெட்ட செய்தியாகவே வந்துட்டு இருந்துச்சு இப்பதான் நல்ல விஷயம் நடந்திருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கு அமிர்தா வந்ததும் ஈஸ்வரி ஜாடை மாடையாக அமிர்தவ குத்தி காட்டி பேச, பாக்கியா அமிர்தவிடம் துணி காய வைக்க சொல்ல அமிர்தாவும் கிளம்பி போகிறார்.

ஆனாலும் ஈஸ்வரி நான் எதுவும் சொல்லுவேன் என்று உன் மருமகளை அனுப்பி வைக்கிறியா? நான் உன்னிடம் நேராகவே கேட்கிறேன்.. நீ ஏன் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை நிலா மட்டும் போதும் என்று எழிலிடம் சொன்னியா? ஏற்கனவே செத்துப்போன உன் புருஷன் வந்து எவ்வளவோ பிரச்சனை பண்ணிட்டான்... இனி மீண்டும் வந்து கூப்பிட்டால் என்ன செய்வது என்று திட்ட அங்கு இருந்து அழுது கொண்டு அமிர்தா போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications