பாக்கியலட்சுமி: மீண்டும் ஏமாற்றிய இனியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த பாக்யா.. கோபிக்கு ராதிகா போட்ட செருப்படி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் காலேஜில் பெற்றோரை கூட்டிட்டு வர சொல்லி இருந்த நிலையில் அதை மறைத்த இனியாவிடம் பாக்கியா சரமாரி கேள்வி கேட்டிருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் காலேஜில் பெற்றோரை கூட்டிட்டு வரச் சொல்லி இனியாவிடம் சொல்லி இருக்கும் நிலையில் அதை இனியா வீட்டில் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பாக்கியா இனியாவிடம் மேலும் மேலும் காலேஜில் இது பற்றி ஏதாவது சொன்னார்களா? என்று ஜெயிலர் படத்தில் ரஜினி தன்னுடைய மகனிடம் அப்பா கிட்ட ஏதாவது சொல்லனுமாப்பா என்று கேட்பது போல இனியாவிடம் கேட்க, அப்போதும் இனியா பொய் சொல்லி விடுகிறார்.

பிறகு ரூமிற்கு வந்து கோபி இடம் நாளைக்கு நீங்க மறக்காம வந்துடுவீங்களா டாடி என்று பேசிக் கொண்டிருக்கும்போது பாக்யா வந்து யாரிடம் பேசுகிறார் என்று கேட்க, அப்பாவிடம் பேசுகிறேன் என்று சொல்ல.. அவரை நாளைக்கு காலேஜுக்கு கூட்டிட்டு வர போறியா? காலேஜில் உன்னுடைய பெற்றோரை கூட்டிட்டு வர சொல்லி இருக்காங்க.. நீ அதை ஏன் என்னிடம் சொல்லல்ல என்று அடுத்தடுத்து கேள்வி கேட்க இனியா ஏற்கனவே என்னால் உங்களுக்கு பிரச்சனை.
மீண்டும் புது பிரச்சனை வர வேண்டாம் என்றுதான் உங்களிடம் சொல்லல்ல என்று சொல்ல, அதற்கு பாக்கியா நீ எவ்வளவுபட்டாலும் திருந்த மாட்டியா? ஒரு பிரச்சனை வந்தால் அதை வீட்டில் சொல்லணும் ஆனா அதை சொல்றது கிடையாது. அதை சரி செய்கிறோம் என்கிற பெயரில் மீண்டும் மீண்டும் புது பிரச்சனை இழுத்துக் கொண்டு வருவியா? என்று திட்ட வழக்கம் போல இந்த முறையும் இனியா மன்னிப்பு கேட்கிறார்.

மறுபக்கத்தில் கோபி ராதிகாவிடம் தன்னுடைய மகளை காப்பாற்றியதற்காக நன்றி சொல்ல ராதிகா அதை எதுவும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். பிறகு நாளைக்கு உனக்கு எதுவும் ஆபீஸில் மீட்டிங் இருக்கிறதா? என்று கேட்க, அதற்கும் ராதிகா பதில் சொல்லாமல் இருக்க கோபி நாளைக்கு இனியாவிற்கு பேரன்ட்ஸ் மீட்டிங் இருக்கிறது நாம ரெண்டு பேரும் போய்ட்டு வரணும் என்று சொன்னதும் கோபமான ராதிகா உங்களுக்கு அறிவே கிடையாதா?
நீங்க எவ்வளவு பட்டும் திருந்த மாட்டீங்களா? என்னால மீண்டும் மீண்டும் உங்களுக்காக அசிங்கப்பட முடியாது என்று அடிக்காத குறையாக திட்டி விட்டுப் போகிறார். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலையில் பாக்கியா இனியாவின் காலேஜுக்கு போவதற்காக கிளம்பி கொண்டிருக்கிறார். அப்போது அமிர்தா நீங்க இன்னைக்கு ரெஸ்டாரண்ட் போகலையா? என்று கேட்க, அதை செல்வியை பார்த்துக்க சொல்லி விட்டேன் என்று சொல்லிவிட்டு ஈஸ்வரியிடமும் ராமமூர்த்தி இடமும் நான் காலேஜுக்கு போகிறேன் என்று சொல்ல அவர்கள் நாங்களும் வருகிறோம் என்று சொல்கின்றனர்.

நாங்க தான் இனி இனியாவை பார்த்துக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோமே அதனால நாங்களும் வருகிறோம் என்று எல்லோரும் காலேஜுக்கு வருகின்றனர். அங்கு பிரின்ஸ்பல் நீங்கதான் இவங்களோட அம்மாவா நீங்க என்ன வேலை பாக்குறீங்க என்று கேட்க பாக்யா ரெஸ்டாரண்ட் வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார்.
அதற்கு நீங்க வேலை பாக்குறதுனால உங்க பொண்ணு எப்படி வேணா போகட்டும்னு தண்ணி தெளிச்சு விட்டுட்டீங்களா? என்று சொல்ல, இனியா இல்ல எங்க அம்மா என்னை நல்லா தான் வளர்த்தாங்க என்று சொல்ல, அதுதான் வளர்த்த லட்சணம் தெரியுது என்று திட்டிக்கொண்டு.. இனி இனியாவை எங்க காலேஜில் சேர்த்துக்க முடியாது. டிசியை தரோம் வாங்கிட்டு போய் வேற காலேஜில் சேர்த்துக்கோங்க என்று சொல்ல பாக்கியா இந்த ஒரு முறை மட்டும் மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பு கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications