பாக்கியலட்சுமி: எழிலை வைத்து கோபி வீட்டில் நடக்கும் சண்டை.. மயூ கேட்ட கேள்வி.. ஆடி போன ராதிகா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் கோபி எழிலை நினைத்து ராதிகாவிடம் சண்டை போட மயூ தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்கிறார். அதே நேரத்தில் பாக்யா வீட்டில் அடுத்த கொண்டாட்டத்திற்கு ரெடியாகி கொண்டிருக்கிறார்கள். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கோபி ராதிகாவிடம் பேச வேண்டும் என்று சொல்ல அதை எதையும் காதில் வாங்காமல் ராதிகா உங்க வீட்டு விஷயத்தை என்னிடம் சொல்ல வேண்டாம் வேறு ஏதாவது விஷயம் என்றால் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். பிறகு சாப்பாடை கொண்டு போய் வைக்க அதை பார்த்து கோபி நான் என்ன சாப்பாட்டுக்கு வழி இல்லாமலா இருக்கிறேன் என்று கோபத்தில் சாப்பாட்டை தட்டி விடுகிறார்.

சாப்பாடு வேணும்னா நான் ஹோட்டலில் சாப்பிட்டு வந்து விடுவேன். வீட்டில் கொஞ்சமாவது நிம்மதியாய் மனம் விட்டு பேசலாம்னு பார்த்தா இங்க அந்த நிம்மதி எனக்கு இல்லை என்று சண்டை போட அதை பார்த்து மயூ பயந்து விடுகிறார். மயூவை பார்த்ததும் கோபி சாரி கேட்கிறார். ஆனால் ராதிகா இதுவே இனியாவா இருந்தா நீங்க இப்படி சண்டை போடுவீங்களா? என் பிள்ளையை நீங்க எப்பவும் பிரிச்சு தான் பாக்குறீங்க என்று சண்டை போட கோபி எனக்கு இனியாவை போல தான் மயூவும், என்னுடைய பொண்ணு தான் என்று சொல்ல, அது ராதிகா மற்றும் கோபி இடையே வாக்குவாதம் ஆக மாறுகிறது.

பிறகு கோபி தட்டி விட்ட சாப்பாடு ராதிகா கிளீன் பண்ணாமல் அப்படியே வைத்திருக்க கோபி தான் பாக்கியா வீட்டில் இருந்ததை எல்லாம் நினைத்து பார்க்கிறார். அடுத்ததாக காலையில் கோபி கண் விழித்து பார்க்கும் போது தான் தட்டிவிட்ட சாப்பாடு அப்படியே கொட்டி கிடக்கிறது. ஆனாலும் அங்கிருந்து கோபி கிளம்பி விட பிறகு ராதிகா அதை கிளீன் செய்து விடுகிறார்.
அடுத்ததாக மயூ எனக்கு கெட்ட கனவா வருது நான் தனியாவே இருக்கிற மாதிரி தோணுது நீங்களும் டேடியும் அடிக்கடி சண்டை போடுறீங்க. நீங்க இனி சண்டை போடாதீங்க எனக்கு பயமாயிருக்கு என்று சொல்ல, ராதிகா இனி நான் சண்டை போட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் செழியன் வாக்கிங் போகும்போது அங்கு வரும் அவருடைய நண்பர் எழில் வாக்கிங் வரவில்லையா என்று எழில் பற்றியே கேட்கிறார்கள்.

அதனால் ஃபீல் பண்ணி செழியன் எழிலுக்கு போன் போட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துவிடு என்று சொல்ல எழில் இல்லை நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கப் போகிறேன் என்று சொல்லிவிடுகிறார் அதோடு இரண்டு மூன்று வீடுகள் வாடகைக்கு இருக்கிறதா சொல்லி இருக்காங்க அதை பார்க்க போறோம் என்று சொல்கிறார். பிறகு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளு என்று செழியன் சொல்ல அதற்கு எழில் வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று மறந்து விடுகிறார்.
அந்த நேரத்தில் கோபி அங்கு வந்து செழியனிடம் கோபி பேசுகிறார். அப்போது இனியா வீட்டில் நடந்த விஷயத்தை பற்றி தன்னிடம் சொன்னதையும் எழிலை போய் பார்த்துட்டு வந்ததையும் பற்றி கோபி சொல்ல சொல்கிறார். அதோடு எழிலுக்கு ஏதாவது பணம் தேவை என்றால் நான் தருகிறேன் நீ கொடுத்ததாக கொடு நான் கொடுத்தால் அவன் வாங்க மாட்டான் என்று சொல்ல நான் கொடுத்தேன் அதையும் வாங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான் என்று செழியன் சொல்கிறார்.
பிறகு கோபி கிளம்பி போகும் போது தயக்கத்தோடு தனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப் போகும் விஷயத்தை செழியன் சொல்ல அதைக் கேட்டு கோபி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். இதை கேட்டதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இதை எதற்கு சொல்வதற்கு தயங்கணும் என்று கோபி சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
பிறகு செழியன் பாக்யாவிடம் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு தான் மூன்று ஹோட்டல் பார்த்ததாக சொல்கிறார். அதற்கு பாக்கியா ஹோட்டலில் ஏற்பாடு செய்வதற்கு நாளில்லை இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது அதனால் பக்கத்தில் இருக்கும் கோவிலில் பங்க்ஷன் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

அந்த நேரத்தில் ஈஸ்வரி அங்கு வர பாக்கியா மாமாவின் பிறந்தநாளுக்கு எல்லாரையும் கூப்பிட்டு கோவிலில் கொண்டாடலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம். நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications