பாக்கியலட்சுமி: நான் யாரு? வில்லியாக மாறிய ராதிகா.. அதிர்ச்சி கொடுத்த ராமமூர்த்தி.. மனம் மாறிய ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி, பாக்கியா வீட்டில் நடக்கும் விஷயங்களை பற்றி ராதிகாவிடம் சொன்னதால் ராதிகா கோபப்பட்டு கத்துகிறார். அதே நேரத்தில் பாக்கியா வீட்டில் ராமமூர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடங்கப் போகிறது அதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஈஸ்வரி இடம் ராமமூர்த்தியின் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்க அதற்கு அவரும் சம்மதம் சொல்லி விடுகிறார். ஆனால் ராமமூர்த்தி இந்த வயதில் எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையா? வீட்டில் இருக்கிற நிலைமையில் எனக்கு இந்த கொண்டாட்டம் தேவையில்லை என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி வாழ்க்கை என்பது அப்படி இப்படி இருக்க தான் செய்யும்.

அதற்காக நாம் எப்போதும் இடிந்து போய் உட்கார்ந்து விடக்கூடாது நாம் வாழ்க்கையில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே கடந்து போக வேண்டும் என்று ராமமூர்த்தியின் மனதை மாற்ற பிறகு வேறு வழி இல்லாமல் அவரும் உங்க இஷ்டம் என்று சம்மதம் சொல்லி விடுகிறார்.
மறுபக்கத்தில் கோபியும் மயூவும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் ராதிகா காபி கொண்டு வரவா என்று கோபியிடம் கேட்க அதற்கு கோபி எடுத்துட்டு வா என்று சந்தோஷமாக சொல்கிறார். பிறகு ஒரு குட் நியூஸ் என்று ஜெனி கர்ப்பமாக இருப்பதை சொல்லி அது பற்றிய மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருக்க அதைக் கேட்டு கோபமான ராதிகா உங்களுக்கு உங்க பசங்க உங்க குடும்பத்துக்கு ஒன்று என்றால் சந்தோஷமாக இருப்பீங்க, இல்லன்னா சோகமா இருப்பீங்க.

ரெண்டு நாளா எழில் வீட்டை விட்டு வெளியே போயிட்டானு புலம்பிட்டே இருந்தீங்க. இப்போ செழியன் மீண்டும் அப்பாவாக போறதா நினைச்சு சந்தோஷப்படுறீங்க. ஆனா என்னை பற்றியோ மயூ பற்றியோ உங்களுக்கு கவலையே இல்லை என்று கோபப்படுகிறார். அதை பார்த்து மயூ பயந்து போக பிறகு மயூவிடம் ராதிகா மன்னிப்பு கேட்டு எவ்வளவு கண்ட்ரோல் பண்ணுகிறேன், ஆனால் முடியல இனி உனக்காக இன்னும் கோபத்தை குறைத்து கொள்கிறேன் என்று சொல்லி சமாதானம் செய்கிறார்.
இன்னொரு பக்கத்தில் ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு யாரலாம் கூப்பிட வேண்டும் என்று லிஸ்ட் போட்டு கொண்டு இருக்க, செல்வி கோபி சாரை கூப்பிடுவீங்களா என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி கோபி சாருனு யாரையும் எனக்கு தெரியாது. நான் கூப்பிட போறது இல்லை என்று பதிலடி கொடுக்கிறார். பிறகு பாக்யாவிடம் எழிலை கூப்பிடுவியா என்று கேட்க, எழிலுக்கு எல்லாம் தெரியும். அவனுக்கு தாத்தா மேல பாசம் இருந்தால் அவனே வருவான்.
நான் கூப்பிட வேண்டியது இல்லை, அவன் ஒன்னும் அடுத்தவங்க கிடையாது. அவன் இந்த வீட்டில் ஒருவன் தானே அவனுக்கு அவங்க தாத்தாவின் பிறந்தநாளுக்கு வரணும்னு நினைச்சா வருவான் என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விடுகிறார். மறுபக்கத்தில் அமிர்தா நிலாவிற்கு கதை சொல்லிக் கொண்டிருக்க அங்கே எழில் வந்து இரண்டு மூன்று வீடு பார்த்ததாகவும் அதில் ஒன்றும் செட் ஆகவில்லை இரண்டு நாட்களில் பார்த்து விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதோடு அமிர்தவிடம் அம்மா போன் பண்ணாங்களா என்று கேட்க அமிர்தா நைட் பண்ணுனாங்க என்று சொல்கிறார். ஆனால் எனக்கு போன் பண்ணவே இல்லை என்று எழில் கவலைப்பட அப்படின்னா நீங்க போன் பண்ணி பேசலாமே என்று அமிர்தா சொல்கிறார். ஆனாலும் அம்மா ஆசைப்பட்ட படி பெரிய ஆளாகி தான் அம்மாவ பாக்க போவேன் என்று எழில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் ஈஸ்வரி கால் பண்ண எழில் போனை எடுக்காமல் அமிர்தாவை எடுக்க சொல்கிறார். ஈஸ்வரி எழிலிடம் பேச வேண்டும் என்று சொல்ல, எழிலிடம் அமிர்தா போனை கொடுத்து விடுகிறார். பிறகு தாத்தாவின் பிறந்தநாளை நாளைக்கு நாங்க கொண்டாட போகிறோம். நீ வரியா என்று கேட்க நான் வந்த உங்களுக்கு கஷ்டமா இருக்காதா? என்று எழில் கேட்க, அப்படி என்றால் நீ வரவே வராத என்று ஈஸ்வரி அழுது கொண்டே போனை வைத்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications