பாக்கியலட்சுமி: எழிலுக்கே தெரியாமல் அமிர்தா செய்த செயல்.. எதிர்த்து பேசிய ஜெனி.. புலம்பும் கோபி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் ராமமூர்த்தியின் பிறந்தநாள் பங்க்ஷன்க்கு எழில் வருவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பில் எல்லோரும் இருந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் அமிர்தா செய்த செயலை எழில் கண்டுபிடித்திருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ராமமூர்த்தியின் பிறந்த நாளை கோயிலில் கொண்டாடுவதற்காக குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷமாக காரில் கிளம்பி போகின்றனர். அதை பார்த்த கோபி இவர்கள் எல்லோரும் எங்கே போகிறார்கள் எழில் வீட்டை விட்டு வெளியே போயிட்டான் என்கிற கவலை கொஞ்சமாவது இவங்களுக்கு இருக்கிறதா? எழில் வெளியே போனது சந்தோஷம் என்று நினைக்கிற மாதிரி இவங்க வெளியே போறாங்க.

எழில் அங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறானே என்று புலம்பி கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் கோவிலில் வேலைகள் எல்லாம் தடபுடலாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து ராமமூர்த்தி சந்தோஷப்படுகிறார். அதே நேரத்தில் கோபி எல்லோரும் எங்கே போனார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக செழியனுக்கு போன் செய்ய செழியனும் போனை எடுக்கவில்லை. அதனால் இனியாவுக்கு முயற்சி செய்ய இனியாவும் போனை எடுக்கவில்லை.
மறுபக்கத்தில் அமிர்தா தனியாக கடைக்கு போய் தாத்தாவுக்கு வாட்ச் வாங்கிட்டு வர அதைப் பார்த்து எழில் என்னிடம் சொல்லாமல் நீ எங்க போன? உனக்கு காசு எப்படி வந்தது? என்று விசாரிக்க, அதற்கு அமிர்தா நான் ஏற்கனவே காசு கொஞ்சம் சேர்த்து வைத்திருந்தேன் என்று சொல்ல, அதை எழில் நம்பவில்லை. பிறகு உண்மையை சொல்லு என்று மிரட்டுகிறார்.

அப்போது அமிர்தா தன்னுடைய மோதிரத்தை அடகு வைத்ததை சொல்ல அதற்கு எழில் கோபப்பட்டு இந்த வாட்ச்சை கொடுத்துவிட்டு மோதிரத்தை வாங்கிட்டு வா என்று திட்டுகிறார். ஆனால் அமிர்தா நாம தாத்தாவின் பிறந்தநாள் பங்க்ஷன்க்கு போக வேண்டும் என்று எழிலின் மனதை மாற்றுகிறார். ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்கு உறவினர்கள் எல்லோரும் வர அங்கு பழனிசாமியும் வந்து பர்த்டே கிப்ட் கொடுக்கிறார்.

அத்துடன் அங்கு வந்தவர்களில் இருவர் கோபி எங்கே காணவில்லை? என்று விசாரிக்க அதற்கு ஈஸ்வரி அவன் என்னுடைய மகனே இல்லை எனக்கு பொண்ணு தான் இருக்கா என்று பாக்யாவை காட்டி சொல்கிறார். அவர்கள் அப்போ எழிலையும், அவனுடைய பொண்டாட்டி பிள்ளையும் காணவில்லையே என்று கேட்க அதை பார்த்து கோபப்பட்ட ஜெனி நீங்க வந்தீங்களா சாப்டீங்களான்னு இருங்க.
அடுத்தவங்க பிரச்சனை பற்றி பேசாதீங்க, அடுத்தவங்க சந்தோசமா ஒரு ஃபங்ஷன் கொண்டாடனும்னு நெனச்சா ஏன் அதில் இல்லாதவங்களை பற்றி பேசி எல்லாரையும் கஷ்டப்பட வைக்கிறீங்க என்று அவர்களை அனுப்பி வைக்கிறார். பிறகு செழியன் பாக்யாவிடம் போய் எழிலை கூப்பிடுமாறு சொல்ல அதற்கு பாக்கியா அவன் கண்டிப்பா வருவான் என்று சொல்கிறார்.

இறுதியாக ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் மாலை மாற்றிக் கொள்ளும் நேரத்தில் சரியாக எழில் அமிர்தாவோடு அங்கு வந்து விடுகிறார். இதைப் பார்த்த ராமமூர்த்தி, பாக்கியா, ஈஸ்வரி என எல்லாரும் கண் கலங்குகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications