பாக்கியலட்சுமி: கோபியிடம் பிரின்ஸ்பல் கேட்ட கேள்வி.. கொந்தளித்த ராதிகா.. ஈஸ்வரி இப்படி பேசிட்டாங்களே
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இனியாவிற்காக காலேஜுக்கு போய் கோபி அவமானப்பட்டு வருகிறார். மறுபக்கத்தில் வீட்டிற்கு வந்தால் ராதிகாவும் அவமானப்படுத்துகிறார். ஈஸ்வரி வீட்டுக்கு போன நிலையில் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் கோபியை அவமானப்படுத்துகின்றனர். எல்லா இடத்திலும் கோபி இன்று அசிங்கப்பட்டு இருக்கிறார்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்கியா குடும்பத்தோடு பிரின்ஸ்பலிடம் மன்னிப்பு கேட்டு இனியாவை மீண்டும் காலேஜில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கெஞ்சுகிறார். ஆனாலும் பிரின்ஸ்பல் முடியாது என்று சொல்லி இனியாவின் அப்பா எங்கே என்று கேட்க, அதற்கு கோபமான ராமமூர்த்தி அவன் எங்க மேல அக்கறை இல்லாமல் இவங்க எக்கேடோ கெட்டுப் போகட்டும் என்று அப்பா அம்மா பிள்ளைங்க யாரையும் பற்றி கண்டுக்காம விட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான்.

எங்களை பாக்கியா தான் பார்த்துக்குறா என்று சொல்ல, அதற்கு பாக்கியா நான் படிக்கவில்லை என்றாலும் இன்று ஒரு பிசினஸ் செய்து தன்னுடைய குடும்பத்தையே கவனித்து வருவதாக சொல்கிறார். இதனால் பிரின்சிபல் மனம் மாறி இந்த ஒரு முறை இனியாவை விட்டு விடுகிறேன். ஆனால் இனி இதுபோல ஒரு பிரச்சனை வந்தால் வேற மாதிரி ஆக்சன் எடுப்பேன் என்று மிரட்டி அனுப்புகிறார்.
அதைத் தொடர்ந்து கோபியும் காலேஜுக்கு வருகிறார். பிரின்ஸ்பலிடம் நான்தான் இனியாவின் அப்பா என்று அறிமுகம் செய்ய அவர் கோபப்பட்டு திட்டுகிறார். உங்களை மாதிரி தான் உங்களுடைய பொண்ணும் பொறுப்பில்லாமல் இருக்கிறா. நீங்கள் குழந்தைகள் பற்றி கவலைப்படாமல் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிவிட்டதால் தான் இந்த பிள்ளைகளை பற்றி நீங்க கண்டுக்காம விட்டுடுவீங்க.
அதனால தான் இனியா உங்களைப் போலவே இருக்கா என்று திட்ட குடும்ப விஷயம் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் என்று கோபி கேட்க, அதற்கு பிரின்ஸ்பல் இப்பதான் உங்களுடைய முதல் மனைவியும் அப்பா, அம்மா எல்லாரும் வந்துட்டு போனாங்க. அவங்க எல்லா விஷயத்தையும் சொல்லிட்டாங்க என்று கோபிக்கு அட்வைஸும் கொடுக்க அதனால் கோபி கடுப்பாகிறார் . பிறகு பிரின்ஸ்பல் ரூமில் இருந்து கோபி வெளியே வரும்போது அங்கு இனியா வர இனியாவிடம் சரி எப்படியோ பிரச்சனை முடிஞ்சிடுச்சே அதுவே போதும்.

ஆனால் நீ பாக்கியா வர்றது பற்றி எனக்கு ஒரு மெசேஜ் பண்ணி இருந்தாலாவது நான் இங்க வந்து அசிங்கப்பட்டு இருக்க மாட்டேன் என்று வருத்தப்பட்டு விட்டு கிளம்பி போகிறார். மறுபக்கத்தில் காலேஜில் நடந்த விஷயம் பற்றி பாக்யா வீட்டில் எல்லாரும் பேசிக் கொண்டிருக்க ராமமூர்த்தி காலில் விழாத குறையாக கெஞ்சி தான் இப்போ இனியாவை காலேஜில் விட்டுட்டு வந்திருக்கோம் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் கோபி கோபமாக வீட்டிற்கு வந்து எனக்கு ஒரு விஷயம் புரியல நம்ம குடும்ப விஷயத்தை பற்றி காலேஜில் எதற்காக பேசினீங்க? என்று கோபப்பட அதற்கு ராமமூர்த்தி என்னது நம்ம குடும்ப விஷயமா? நீ செஞ்சதை தானே நாங்க சொன்னோம். நீ எங்களை விட்டுட்டு போனதை நாங்க அங்க அப்படியே சொன்னோம். வேற எதுவும் நாங்க சொல்லலையே என்று பல்பு கொடுக்கிறார்.
அதற்கு கோபி நீங்க வேணா என்னை புள்ள இல்லன்னு சொல்லலாம் ஆனா என் பொண்ணு இனியா என்பதை யாராலும் மாற்ற முடியாது என்று பேச அதற்கு பாக்கியா அப்பா என்கிற ஸ்தானத்தில் கூட இருந்து அவர்களுடைய கடமையை எதுவும் செய்யாமல் நான்தான் அப்பான்னு உரிமை மட்டும் யாரும் கொண்டாடக்கூடாது என்று திட்டி அனுப்புகிறார்.

பிறகு ராதிகா வீட்டிற்கு வந்து கோபி சோகமாக இருப்பதை பார்த்து ராதிகா என்னவென்று விசாரிக்க வீட்டில் நடந்த விஷயங்களை எல்லாவற்றையும் கோபி புலம்புவதை பார்த்து ராதிகாவும் கோபியை திட்டுகிறார். நீங்க எவ்வளவு அவமானப்பட்டாலும் திருந்தவே மாட்டீங்க உங்களுக்கு இன்னும் அதிகமா கிடைக்கனும் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications