பாக்கியலட்சுமி: குடும்ப நிம்மதியை கெடுத்த இனியா! பாக்கியா கையில் சிக்கிய ஆதாரம்! ஈஸ்வரி சொன்ன முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் இனியா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு போக முயற்சி செய்த நிலையில் பாக்யாவிடம் சிக்கி இருக்கிறார். ஆனால் ஈஸ்வரி முக்கிய முடிவு சொல்லி இருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வீட்டில் எல்லோரையும் விட்டுவிட்டு போகப் போவதாக இனியா லெட்டர் எழுதி வைத்துவிட்டு அதை பாக்கியா பக்கத்தில் வைக்கும் போது தண்ணீர் பாட்டில் தட்டுப்பட்டு கீழே விழ பாக்கியா எழுந்து விடுகிறார். இதனால் இனியா என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்க, பாக்கியா நீ இன்னும் தூங்கலையா என்று மிரட்டி கேட்க இனியா தண்ணி குடிக்க வந்தேன் நீ தூங்கு என்று சமாளிக்க இனியாவின் கையில் இருக்கும் லெட்டரை பாக்கியா பார்த்து விடுகிறார்.

அது என்னவென்று கேட்க இனியா காட்ட மறுக்கிறார். இறுதியில் அதை வாங்கி வாசிக்க பாக்யாவிற்கு அதிர்ச்சி கிடைக்கிறது. வீட்டில் எல்லாரையும் விட்டு போக போவதாக இனியா எழுதி இருப்பதை பார்த்து நீ என்ன காரியம் செய்து வச்சிருக்க என்று திட்டி அழுது கொண்டிருக்க, அந்த நேரத்தில் குழந்தை தூங்காததால் குழந்தையை தூக்கிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்த ஜெனி சத்தம் கேட்டு உள்ளே வந்து விடுகிறார்.
அப்போது பாக்கியா ஜெனியிடம் நம்ம திட்டினதுக்காக இனியா செத்துப் போவதாக லெட்டர் எழுதி வைத்திருக்கிறா என்று சொல்லி அழ, ஜெனி ஏன் இனியா இப்படி தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்கிற.. உனக்காக வீட்டில் எல்லோரும் துணை இருக்கிறோமே, ஆனால் நீ யாரையும் புரிஞ்சிக்கலையா என்று திட்ட இனியா நான் எல்லாரையும் புரிஞ்சிக்கிட்டதால்தான் இந்த முடிவு எடுத்தேன். என்னால் தானே உங்க எல்லாருக்கும் பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டு இருக்கு என்று அழுது கொண்டிருக்கிறார்.
பாக்கியா இனியாவிடம் நீ இல்லை என்றால் நான் சந்தோஷமாக இருப்பேனா? நானும் செத்துப் போயிடுவேன் என்று பாக்கியா தன்னுடைய நிலைமையை சொல்லி அழுகிறார். இதனால் இனியா இனி நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன் என்று வழக்கம்போல இந்த முறையும் மன்னிப்பு கேட்டு சத்தியம் செய்து கொடுக்கிறார். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பாக்கியா ஜெனியிடம் சொல்கிறார்.
மறுநாள் காலையில் பாக்கியா காபி போட்டுக் கொண்டிருக்கும்போது பால் பொங்குவதை கவனிக்காமல் அப்படியே நின்று கொண்டிருக்கிறார். அந்தப் பக்கமாக வந்து ஈஸ்வரி என்ன நடந்தது ஏன் எப்படி சோகமா இருக்க என்று கேட்க, பாக்யா தன்னையும் மீறி உடைந்து அழுகிறார். பிறகு இரவு இனியா செய்த வேலையை சொல்லி அழுது கொண்டிருக்கிறார்.

யாரிடமும் சொல்லக்கூடாது என்று ஜெனியிடம் சொல்லிய பாக்கியா இப்போ ஈஸ்வரியிடம் எல்லா விஷயங்களையும் சொல்லி விடுகிறார். அதோடு நான் ரெஸ்டாரண்ட் வேலையை விட்டுவிட்டு வீட்டிலேயே பழையபடி சின்னதா ஏதாவது பண்ணட்டுமா என்று கேட்க, ஈஸ்வரி வேண்டாம் நாங்க வீட்டில் இருந்து பாத்துக்குறோம். இனி இனியா ஒரு தப்பும் பண்ண மாட்டா.. நீ பிசினஸ் பாரு என்று நம்பிக்கை கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்து கொடுத்த ஐடியா.. சிந்தாமணி குடும்பத்திற்கு செக் வைத்த சத்யா.. ஆட்டத்தை தொடங்கிய ரோகிணி -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி?












Click it and Unblock the Notifications