பாக்கியலட்சுமி: 2வது முறையாக கர்ப்பமான ஜெனி.. ஈஸ்வரி கேட்ட கேள்வியால் கதறி அழுத அமிர்தா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஆகஸ்ட் 8 ஆம் தேதியிலிருந்து பத்தாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜெனி இரண்டாவது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார். இந்த செய்தியை கேட்டதும் அமிர்தாவை ஈஸ்வரி வார்த்தைகளால் வசைப்படுகிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே எழில் தான் ப்ரொடியூசர் இடம் கதை சொல்ல போகும்போது தான் ஈஸ்வரியை ராதிகாவின் அம்மா கமலா கொடுத்த கம்ப்ளைண்ட் காரணமாக போலீஸ் அரெஸ்ட் செய்ய வந்திருந்தது. அதனால் அந்த நேரத்தில் எழில் புரொடியூசரிடம் சென்று கதை சொல்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விட்டார்.

இதனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்து இன்றும் ஒரு ப்ரடியூசரிடம் கதை சொல்ல போயிருக்கிறார். அப்போது ஏற்கனவே உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் சரியா பயன்படுத்தல இதுபோன்ற சோம்பேறிகளுக்கு நான் வாய்ப்பு தரமாட்டேன் என்று அந்த புரொடியூசரும் சொல்லி அனுப்பிவிட்டார். அதனால் வருத்தத்தில் எழில் இருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் செழியன் வீட்டு செலவுக்காக பாக்கியாவிடம் பணம் கொடுக்க அதைப் பார்த்த ஈஸ்வரி இந்த வீட்டில் இரண்டு மகன்களும் பணம் தரேன் என்று சொன்னீங்க இப்போ செழியன் மட்டும் தான் வீட்டு செலவுக்கு பணம் தரான். இவன் நான் கதை சொல்லப் போறேன் படம் எடுக்க போறேன் என்று அலைந்து கொண்டிருக்கிறான். அதை விட்டுவிட்டு வேறு ஏதாவது வேலைக்கு போ என்று எழிலை திட்டி இருந்தார்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் எழில் பணம் கொடுக்காததால் ஈஸ்வரி திட்டியதை பார்த்து ஜெனி செழியனிடம் நீ ஆண்ட்டிகிட்ட பணம் கொடுக்கிறதா இருந்தா அவங்கள தனியா கூப்பிட்டு பணம் கொடு. எழில் சம்பாதிச்சு பணம் கொடுக்கிற வரைக்கும் எல்லார் முன்பும் பணம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வாந்தி வர பாத்ரூம் ஓடுகிறார். பிறகு தான் இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதாக செழியனிடம் சொல்கிறார்.
அந்த நேரத்தில் அங்கு வரும் ஈஸ்வரி அதைக் கேட்டு என்ன இரண்டாவது முறையா அப்பாவா ஆகப் போறியா என்று செழியனிடம் சந்தோசமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். பிறகு அமிர்தாவிடம் நீங்க எப்போ குழந்தை பெத்துக்க போறீங்க? உனக்கு குழந்தை பெத்துக்கிட்டு நல்ல ஒரு வாழ்க்கை வாழனும்னு ஆசை இல்லையா? என்று திட்ட, அதைக் கேட்டு அமிர்தா அழுது கொண்டிருக்கிறார்.

பாக்கியா எதுவும் சொல்ல முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இனி இதை வைத்து பாக்யா வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈஸ்வரிக்கு எழில் பதிலடி கொடுக்கப் போகிறாரா? அல்லது பாக்கியா எழிலுக்கு சப்போர்ட்டாக நிற்க போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications