பாக்கியா, கோபியை சேர்த்து வைத்த இனியா.. ஹாஸ்பிடலில் நடந்த டுவிஸ்ட்.. இனி நடக்கப் போவது இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா மற்றும் கோபியை இனியா மீண்டும் ஒன்றாக சேர்த்து வைத்திருக்கிறார்.
இதனால் இனி அடுத்து என்ன பிரச்சனை வரப்போகிறது என்று எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கு அதிகரித்து இருக்கிறது.
அதே நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடிக்கும் நேகா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த சீரியலில் குடும்ப தலைவி ஒருவர் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தன்னுடைய திறமையை வெளி உலகத்திற்கு நிரூபிப்பதற்காகவும் போராடும் போராட்டத்தை பற்றியதாக இந்த சீரியல் கதை இருக்கிறது.
அதே நேரத்தில் பல வீட்டில் பெண்களுக்கு இந்த நிலைமைதான் இருக்கிறது என்று இந்த சீரியலுக்கு பெண் ரசிகர்கள் அதிகரித்திருக்கின்றனர். அதே நேரத்தில் ஆண் ரசிகர்கள் கூட பலர் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். கோபியை நினைத்து பீல் பண்ணிக்கொண்டு வீட்டிலேயே அழுது கொண்டு இருக்காமல், அடுத்தடுத்து தன்னுடைய திறமையை காட்டி கோபியை மட்டுமல்லாமல் தன்னை ஏளனப்படுத்தியவர்களையும் வியக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரச்சனை வந்து கொண்டிருப்பது வழக்கம் தான். அதில் பாக்கியா தொடர்ச்சியாக ஜெயித்துக் கொண்டிருப்பது வழக்கமாக நடக்கிறது. கடந்த வாரத்தில் பாக்யா கோபியிடம் போட்ட சவாலில் ஜெயித்து கோபி மற்றும் ராதிகாவை வீட்டை விட்டு வெளியே துரத்தி இருந்தார்.
அதைத்தொடர்ந்து இனியா ஸ்கூல் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்து ஸ்கூலில் அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கும்போது அந்த நேரத்தில் பாக்கியாவால் போக முடியாமல் பிரச்சனையில் இருந்தார். பிறகு பழனி சாமியால் காப்பாற்றப்பட்டு அந்த இடத்திற்கு லேட் ஆக போனதால் இனியா கோபப்பட்டு இருந்தார். இப்போது எல்லா பிரச்சனையும் சரியாகி இனியாவும் மீண்டும் பழைய நிலைக்கு மாறியிருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக கோபி தான் சொல்லும் படிப்பை தான் இனியா படிக்க வேண்டும் என்று புது பிரச்சனை செய்கிறார். அதே நேரத்தில் தொடர்ச்சியாக கோபி பாக்கியாவிடம், நீ காலேஜுக்கு போயிருக்கியா..? உனக்கு காலேஜ் என்றால் என்னன்னு தெரியுமா? காலேஜ் பஸ்ஸ கூட நீ பார்த்து இருக்கியா? என்று அவமானப்படுத்துகிறார். இதனால் இனி பாக்கியா காலேஜில் சேர்ந்து இனியாவோடு படிப்பது போன்று இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் இனியாவாக நடிக்கும் நேகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கோபி மற்றும் பாக்யா இருவரும் ஹாஸ்பிடலில் ஒரு சேரில் அமர்ந்தபடி போட்டோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் இருவரையும் வீடியோ எடுத்தது இனியா தான்.
ஆனால் அவரும் ஹாஸ்பிடலில் இருக்கிறார். அதனால் இனி யாருக்கு என்ன ஆகப்போகிறது? யார் ஹாஸ்பிடலில் அட்மிட்டாக போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. அதே நேரத்தில் பாக்கியாவையும், கோபியையும் சேர்த்து வைத்த இனியாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications