அறிவுரை சொல்லி கெஞ்சும் கோபி.. அமிர்தாவோடு பாக்கியா போடும் ஆட்டம்.. மாஸாக பதில் சொல்லும் ராதிகா
சென்னை: பாக்கியலட்சுமி சீரியல் இனியா தற்கொலை முயற்சி செய்ததை குறித்து அந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் சதீஷ் ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
பாக்கியா மற்றும் அமிர்தா இருவரும் சூட்டிங் ஸ்பாட்டில் ட்ரெண்டிங் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பெயரப்பட்டு வருகிறது.
ஆளாளுக்கு ஏதாவது செய்து கொண்டிருக்கும் நிலையில் ராதிகாவும் பஞ்ச் வசனத்தோடு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ரசிகர்களின் ஆதரவு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பு பெற்று வருகின்றனர். பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒரு சில கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் மாறினாலும் கதாநாயகன் கதாநாயகி பாக்யா மற்றும் கோபி கேரக்டரில் அதே சுசித்ரா மற்றும் சதீஷ் தான் தொடர்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் பேன்ஸ் பேஜ் வைத்திருக்கின்றனர். அதிலும் கோபிக்கு சொல்லவே வேண்டாம் நாளுக்கு நாள் அதிக ஆதரவு கூடிக் கொண்டே வருகிறது.

கோபியின் வேண்டுகோள்
இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கோபி தன்னை திட்டி விட்டதால் தற்கொலை முயற்சி செய்திருக்கிறார். அது குறித்து கோபியாக நடிக்கும் சதீஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், இந்த மாதிரி யாரும் முடிவு எடுக்கக்கூடாது. ஒரு நிமிடம்தான் நம்முடைய கோபத்தால் எடுக்கும் முடிவால் பலரும் கஷ்டப்படுவார்கள். நம்முடைய அழகான வாழ்க்கையை நம்முடைய கோபத்தால் கெடுத்து விடக்கூடாது. அப்பா திட்டுறாங்க, அம்மா திட்டுறாங்க என்றால் அதில் இருக்கும் நியாயத்தையும் அவர்கள் இடத்தில் இருந்தும் நான் பார்க்க வேண்டும். அப்போதுதான் நமக்கு உண்மை தெரியும். ஆனால் கோபமாக இருக்கும்போது எடுக்கும் முடிவுகளால் பின்னாடி விபரீதங்களை சந்திப்பது நாம் தான் அதனால் யாரும் இந்த மாதிரி செய்யாதீங்க என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.

ஆட்டம் போடும் பாக்கியா
இந்த நிலையில் பாக்யாவின் அம்மாவாக நடிக்கும் சுசித்ரா மற்றும் அமிர்தாவாக நடிக்கும் ரித்திகாவும் இணைந்து மொட்டை மாடியில் மைனரு வெட்டிக்கட்டி எனும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கின்றனர். அதுவும் போதாது என்று ரித்திகா இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பாக்யா மற்றும் அமிர்தா இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர் என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். இதற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.

ராதிகாவின் மாஸ் பஞ்ச்
இந்த நிலையில் நான் வில்லியாக இருந்து கொண்டு நானும் ஏதாவது செய்ய வேண்டுமே என்று யோசித்த ரேஷ்மா அதாவது ராதிகா, அவரும் சமூக வலைத்தளத்தில் ஒரு விடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். மாஸான கெட்டப்போடு அவர் டான்ஸ் போட்டு வீடியோ வெளியிட்டு, "அவர்கள் செய்ததற்கு வருத்தப்படவில்லை. நீங்கள் கண்டுபிடித்ததற்கு வருந்துகிறார்கள்..!" என்று வாழ்க்கை தத்துவம் ஒன்றையும் உதிர்த்து இருக்கிறார். தற்போது இதற்கும் அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications