பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? புகைப்படத்தை வெளியிட்டு கோபி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அதை பார்த்ததும் ரசிகர்கள் சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா? அதனால் தான் எல்லோரும் சேர்ந்து குடும்பமாக புகைப்படம் எடுத்து இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில் இது குறித்து இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இப்ப வரைக்கும் இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்திவிடுகிறார்.

அதிலும் பாக்கியா குடும்ப பெண்ணாக இருந்து தனக்கு வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வது மற்றும் குடும்பத்திற்காக தியாகங்கள் செய்வது போன்றவற்றை பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிடித்திருக்கிறது. அதே நேரத்தில் இணையத்திலும் இந்த சீரியல் குறித்து அதிகமாக கலாய்க்கபட்டும் வருகிறது. ஒவ்வொரு முறையும் பாக்யா தன்னுடைய குடும்பத்திற்காக செய்யும் தியாகங்கள் யாராலும் செய்ய முடியாது என்று சொல்லும் வகையில் இருந்து வருகிறது.
அதேபோல இந்த சீரியலில் கோபி கேரக்டரில் வில்லனாகவும் காமெடியனாகவும் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷுக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இவர் இந்த சீரியலில் வில்லனாக நடித்தாலும் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் இந்த சீரியலில் ராதிகாவின் குழந்தை கலைந்து போனதற்கு காரணம் ஈஸ்வரி இல்லை என்பதை பாக்கியா மயூ மூலமாக நிரூபித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து இந்த வாரம் கோபி மற்றும் பாக்யாவிற்கு இடையே சமையல் போட்டி நடைபெறுகிறது. மறுபக்கத்தில் இனியா தன்னுடைய தோழிகளோடு பப்புக்கு சென்றிருந்த நிலையில் அங்கு போலீஸிடம் சிக்கி இருக்கிறார். இனி பாக்கியா சமையல் போட்டியில் ஜெயிக்கப் போகிறாரா? அல்லது மகளை எப்படி ஜெயிலிலிருந்து வெளியே கொண்டு வரப் போகிறார் என்று அடுத்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் கோபி மற்றும் பாக்யாவின் குடும்பத்தினர் எல்லோரும் இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் கோபி பாக்கியா குடும்பத்தோடு இனி செட்டிலாகி விடுவாரா? அப்போ ராதிகா நிலைமை என்ன ஆகும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதே நேரத்தில் கோபியின் குடும்ப புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் ஒருவேளை இந்த சீரியல் முடிவுக்கு வருகிறதா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதை பார்த்து பதறிப்போன சதீஷ் அதற்கு வாய்ப்பே இல்லை என்று பதில் கொடுத்து இருக்கிறார். இதுதான் இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications