பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. ஈஸ்வரி பிரச்சனை முடிந்ததும் இப்படி ஒரு மாற்றமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை சேனல் தரப்பில் இருந்து வெளியிட்டு இருக்கின்றனர். அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை பாக்கியலட்சுமி சீரியல் 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. காரணம் ராதிகாவின் கர்ப்பம் கலைந்ததற்கு ஈஸ்வரி காரணம் இல்லை என்பது பாக்கியா மற்றும் மயூ மூலமாக வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

அதுபோல தற்போது வெளியான ப்ரோமோவில் மீண்டும் பாக்யா வீட்டிற்கு வந்த கோபி கண்கலங்கி ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் ஈஸ்வரி நீ என்னுடைய மகனே கிடையாது. எனக்கு இனி ஒரே ஒரு மகள்தான் அது என்னுடைய பாக்கியா தான் எனக்கு மகள் அவள் தான் என்னை எந்த நேரத்திலும் விட்டுக் கொடுக்காதவள் எனக்காக யோசிக்கிறவள் என்று பல வசனங்களை பேசி இருக்கிறார்.
ஏற்கனவே இதுபோல பாக்கியாவை விட்டு விட்டு கோபி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்திருந்த போதும் ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் இதுபோலத்தான் வசனங்கள் பேசி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கோபிக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரிந்ததும் ஈஸ்வரி அப்படியே மாறிவிட்டார். இனி என்ன மாதிரி மாறப் போகிறார் என்பது இயக்குனரின் கையில் தான் இருக்கிறது.
அதோடு மீண்டும் வீட்டிற்கு வந்த கோபியை ஈஸ்வரி தலைமுழுகி இருக்கிறார். அதனால் இனி கோபி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று கேள்விகள் இருக்கிறது. அதுபோல ராதிகாவும் தான் அம்மா பேச்சை கேட்டு தவறான முடிவு எடுத்து விட்டோமே... ஈஸ்வரி மீது தவறான குற்றச்சாட்டு வைத்து விட்டோம் என்று மன வருத்தத்தில் இருக்கிறார்.
மயூ விடவும் விஷயத்தை முன்னமே சொல்லி இருந்தால் தான் கோர்ட்டு படி ஏறி இருக்கவே மாட்டேன் என்று கண் கலங்கி கொண்டிருக்கிறார். இதனால் இனி ராதிகா என்ன செய்யப் போகிறார் என்றும் கேள்விகள் வருகிறது. மறுபக்கத்தில் இதை தொடர்ந்து பாக்கியா மற்றும் பழனிச்சாமியின் திருமண பற்றிய பேச்சுகள் வீட்டில் எழுமா என்று கேள்விகள் இருக்கிறது.
அதற்கு காரணம் கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் சில தினங்களுக்கு முன்பு இனி பாக்கியலட்சுமி சீரியலில் குறைந்தபட்சம் 50 லிருந்து 100 எபிசோடுகளுக்கு அழுகாட்சி சென்டிமென்ட் காட்சிகள் தான் இருக்க போகிறது எனக்கு காமெடி காட்சிகள் இல்லை என்று வருத்தமாக சொல்லி இருந்தார்.
இதனால் இனி கோபி மறுபடியும் குடித்துவிட்டு அலப்பறை செய்வது போன்று தான் காட்சிகள் இருக்கும் என்று நினைத்திருந்த நிலையில் தான் தற்போது விஜய் டிவியில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது வரும் ஞாயிற்றுக்கிழமை 2 மணிநேரம் பாக்கியலட்சுமி சீரியலின் ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. ஏற்கனவே சமீபத்தில் சில வாரங்களாகவே தொடர்ச்சியாக விஜய் டிவியில் ஒவ்வொரு ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஞாயிற்றுக்கிழமையில் ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியல் ஏற்கனவே 2 மணி நேரம் ஒளிபரப்பாகிவிட்டது. ஆனாலும் இந்த வாரத்தில் மீண்டும் இந்த சீரியல் 2 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதிலும் இந்த வாரத்தில் காமெடி காட்சிகள் தான் அதிகமாக இருக்கப் போகிறது என்று தெரிய வந்திருக்கிறது. இதனால் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications