இது பாக்கியலட்சுமியா? பிரச்சனை லட்சுமியா? எல்லை மீறும் காட்சி? இதை கவனிச்சீங்களா? இப்படி ஒரு முடிவா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்கியா கேட்டரிங்கை மூடுவதற்காக ஒருவர் சூழ்ச்சி செய்திருந்த நிலையில் கேட்டரிங் இப்போது மூடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே ஒவ்வொரு முயற்சியிலும் பாக்கியா அடுத்தடுத்து தோற்றுக் கொண்டே இருப்பதால் இதைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இந்த சீரியல் டிஆர்பியில் டாப் 10 இடங்களுக்குள் வந்துவிடுவது வழக்கம். அதுவும் விஜய் டிவியில் முதல் அல்லது இரண்டாவது இடத்திற்குள் இந்த சீரியல் தொடர்ச்சியாக இடம் பிடித்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்த சீரியலில் கதை இல்லாமல் அரைச்ச மாவை அரைப்பது பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதுவும் பாக்கியா இப்போது அடுத்தடுத்து எடுத்து வைக்கும் முயற்சிகளில் எல்லாம் கடைசி நேரத்தில் தோல்விகள் வந்து விடுகிறது. அதை பாக்கியா எப்படி கையாள்வார் என்று ப்ரோமோவில் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருக்கிறது. இதை எப்படி பாக்யா கையால் என்பதை பார்ப்பதற்காக சில ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

ஆனால் வழக்கம் போல பாக்கியா தோற்பது ஒவ்வொரு முறையும் ரிப்பீட் ஆகி கொண்டே இருப்பது இப்போது ரசிகர்களுக்கு அலுப்பு தட்டுகிறது. அதை தற்போது வெளியான ப்ரோமோவில் தங்களுடைய மனக்குமுறல்களை கொட்டி வருகிறார்கள். அதிலும் இந்த வாரத்தில் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் பாக்யாவிடம் கேண்டின் ஆர்டர் கேட்டு வந்த நபர் பாக்கியாவிற்க்கு அளவுக்கு அதிகமான கூட்டம் இருப்பதை பார்த்து பொறாமையில் கெட்டுப் போன சாப்பாட்டை சிலரிடம் கொடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு பாக்கியா பெயரை கெடுக்கிறார். அதோடு பாக்யா அடுத்த நாள் காலையில் பொருள்காட்சி கேட்டரிங் வந்து பார்க்கும்போது அங்கு கேட்டரிங் சீல் வைக்கப்பட்டிருக்கிறது.

அப்போது அவரிடம் உங்களுடைய கேட்டரிங்கை சீல் வைத்து விட்டார்கள் என்று சிலர் தகவல் சொல்கின்றனர். அதைத் தொடர்ந்து செய்தி சேனல்கள் எல்லாம் அங்கு வந்து பாக்கியா கடைக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதை குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் சில ஆபிஸர்ஸ் வந்து கடைக்குள் அதிரடியாக சென்று உள்ளே இருக்கும் உணவு பொருட்களை ஆராய்ச்சி செய்கிறார்கள்.
அப்போது பாக்கியா சார் நான் கொடுத்த பொருள்கள் கெட்டுப் போயிருக்க வாய்ப்பே இல்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் பாக்கியா இந்த பிரச்சனையை கையாள போவது எப்படி என்ற கேள்வியோடு ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கிறது. இதற்கு இது பாக்கியலட்சுமியா இல்லை, பிரச்சனை லட்சுமியா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
அதோடு ஒரு ஜான் ஏறினால் ஒரு முழம் சறுக்குது. இது என்ன கதை இப்படி போய்க்கிட்டு இருக்கு. பெண்களால் சீரியலில் கூட ஜெயிக்க முடியாதா? என்பது பலருடைய கேள்வி. அதோடு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட கேண்டினுக்குள் நுழைந்து அங்கிருக்கும் சாப்பாடு பாத்திரங்களை திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பாக்யா முதல் நாள் வேலையை முடித்து வீட்டிற்கு வந்த பிறகு எப்படியும் அன்றைய பாத்திரத்தை கழுவி வைத்திருப்பார்கள்.
அடுத்த நாள் வேலையை தொடங்குவதற்கு வருவதற்கு முன்பே இங்கே அதிகாரிகள் வந்து செக் பண்ணுகிறார்கள். ஆனால் சாப்பாடு மட்டும் எப்படி வந்தது என்பது பலருக்கும் புரியாத புதிர் தான். ஆனால் இப்படி ஒரு முடிவை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். ஏற்கனவே பாக்யா கேண்டின் நடத்தக்கூடாது என்று கோபியின் சூழ்ச்சியால் ஈஸ்வரி அந்த ஆட்டம் போட்டார்.
பிறகு வீட்டிற்கே வந்து ஒருவர் கேண்டின் ஆர்டரை என்னிடம் தந்து விடுங்கள் என்று கேட்டபோதும் கொடுக்க சொல்லி ஈஸ்வரி சொல்லியிருந்த நிலையில் அதையும் பாக்கியா மறுத்து இருந்தார். இந்த நிலையில் இப்போது பாக்கியா பிரச்சனையில் மாட்டி இருப்பதால் இதை வைத்து இனி கோபிக்கு கொண்டாட்டம்தான். அது போல இனி இதை வைத்து ஈஸ்வரி ஒரு வாரத்திற்கு டயலாக் பேசிக் கொண்டிருப்பார்.












Click it and Unblock the Notifications