பாக்கியலட்சுமி: இவ்ளோ பட்டும் திருந்தாத ஈஸ்வரி! பாக்யா எடுத்த முடிவு! கோபிக்கு இந்த அவமானம் தேவையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 14ஆம் தேதிக்கான எபிசோடில் கோபியை பார்ப்பதற்காக ராதிகா வந்திருக்கும்போது ஈஸ்வரி ராதிகாவை அவமானப்படுத்தி பேசுகிறார். அதே நேரத்தில் பாக்கியா கோபியிடம் கேட்ட கேள்வியால் கோபி அதிர்ச்சியில் இருக்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபியை பார்ப்பதற்காக ராதிகா வந்திருக்கும்போது கோபி தன்னுடைய அம்மா, பிள்ளைகள் பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு நான் இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்து விட்டு வருகிறேன் என்று சொல்ல, அதற்கு ராதிகா ஏன் அங்கு வந்தால் நிம்மதியாக இருக்க முடியாதா? நான் உங்களை கவனிக்க மாட்டேனா? என்று கேட்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

அதற்கு கோபி நீ பிசியா இருப்ப, எங்க எல்லாரும் என்ன விழுந்து விழுந்து கவனிக்கிறாங்க.. பாக்யாவும் எனக்கு சமைச்சு போடுறா.. அவளை பத்தி தெரியாம நான் அவளை அழிக்கணும் என்று பலமுறை முயற்சி செய்தேன். நீ எத்தனையோ தடவை அவளுக்காக சப்போர்ட் பண்ணுனா.. அப்போ நான் புரிஞ்சுக்கல. ஆனா இப்போதான் பாக்கியாவை பத்தி எனக்கு புரிஞ்சுக்க முடியுது என்று பாக்கியா பற்றி பெருமையாக கோபி பேசுகிறார்.

அதனால் கோபமான ராதிகா வெளியே போகும்போது பாக்யாவை முறைத்து விட்டு போகிறார். ராதிகாவும் கோபியும் பேசிக்கொண்டிருக்கும் போது கோபத்தோடு வெளியே காத்திருந்த ஈஸ்வரி ராதிகா வெளியே வந்ததும், நீ இப்படி கோபியை இங்க பார்க்க வருவது கோபிக்கே பிடிக்கல.

இப்போ நல்லபடியா அவன் பாக்கியா கிட்ட பேசிட்டு இருக்கிறான். அவனுக்கு இந்த வீட்டில் இருப்பது தான் புடிச்சிருக்கு. பேசாம நீ கோபியை விவாகரத்து பண்ணிவிடு அவன் குடும்பத்துடன் நிம்மதியா இருக்கட்டும் என்று சொன்னதும் ராதிகா கோபப்படுகிறார். ஆனால் எதுவும் பேசாமல் சென்று விடுகிறார்.

இதை தொடர்ந்து கோபி அம்மாவோடு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செழியன் வெளியே போயிட்டு வருகிறார். தனக்கு வேலை கிடைத்து விட்டதாக கோபியிடம் சொல்லி ஆசீர்வாதம் வாங்குகிறார். இதனால் ஈஸ்வரி நீதான் ஏற்கனவே வேலைக்கு போயிட்டு இருக்கிறியே என்ன புதுசா வேலை கிடைச்சிருக்குன்னு சொல்லுற என்று கேட்கிறார்.

அதற்கு தனக்கு சில வாரங்களுக்கு முன்பே வேலை போய்விட்டது. ஆனால் வீட்டில் சொன்னால் நீங்க எல்லாரும் கஷ்டப்படுவீங்கன்னு சொல்லாம இருந்தேன். இது அப்பாவுக்கும் தெரியும் என்று செழியன் சொல்கிறார். பிறகு இவர்கள் மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கும் போது இனியா வந்து என்ன எல்லாரும் சந்தோஷமா பேசிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.

அப்போது இனியாவிடம் சமாளித்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் பாக்கியா வீட்டிற்கு வருகிறார். பாக்கியா அங்கு இருக்கும் எல்லோரிடமும் சாப்பிட்டாச்சா என்று கேட்க, கோபியிடம் மட்டும் கேட்காமல் போகிறார். பிறகு சாப்பிட்டுவிட்டு அடுத்ததாக சமைக்க தொடங்குகிறார்.

baakiyalakshmi serial vijay tv

அப்போது கோபி தன்னுடைய அம்மா பிள்ளைகளுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கும் போது பாக்கியா கவனிக்கிறார். அப்போது ஈஸ்வரி ராதிகா வீட்டிற்கு வந்தபோது ராதிகாவை பிடித்து வெளியே தள்ளப் போனதை யோசித்துப் பார்க்கிறார். பிறகு ராதிகா தன்னை முறைத்து விட்டு போனதையும் யோசித்துப் பார்க்கிறார்.

இதனால் கோபியிடம் வந்து நான் உங்களிடம் தனியா பேசணும் என்று கூப்பிட்டதும் ஈஸ்வரி இருவரும் பேசுங்க என்று சந்தோசமாக அங்கிருந்து கிளம்பி போகிறார். பிறகு கோபியிடம் உங்களுக்கு பிளாக் காபி வேணுமா என்று கேட்க நீ பிளாக் காபி போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்று கோபி புகழ்ந்து தள்ளுகிறார்.

அதைத் தொடர்ந்து பாக்கியா நீங்க எப்போ ராதிகா வீட்டுக்கு போக போறீங்க? நானும் இன்னைக்கு போவீங்க நாளைக்கு போவீங்கன்னு இருக்குறேன் ஆனா இன்னும் போக மாட்டேங்கறீங்க.. உங்களால் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாருடைய பேச்சையும் கேட்க முடியல.

நீங்க அங்கேயும் எங்கேயும் ஓடிக் கொண்டிருக்க போறீங்களா? எங்களை எல்லாம் வேண்டாம் என்று விட்டுட்டு போனவங்க தானே? இப்போ அதேபோல ராதிகாவையும் விட்டுவிட்டு இங்கே இருந்திறலாம்னு யோசிக்கிறீங்களா? என்று கேள்வி கேட்க, கோபி பதில் எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+