பாக்கியலட்சுமி: ஈஸ்வரி செய்யும் ஏமாற்று வேலை! கண்டுபிடித்த செல்வி.. கோபத்தில் பாக்யா சொன்ன வார்த்தை
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 13ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டு பேசியதால் பாக்கியா கோபப்படுகிறார். அதை பார்த்து ராதிகா பாக்கியாவை தவறாக புரிந்து கொள்கிறார். ஈஸ்வரி இன்னும் பாக்கியாவையும் கோபியையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று சில வேலைகளை செய்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பார்க்கில் பாக்கியா இருக்கும்போது அங்கு வந்த கோபி பாக்யாவிடம் மனம் விட்டு பேசுகிறார். நான் விட்டு போனது தப்பு, நான் உன்னை புரிஞ்சுக்கல. நீ என் பக்கம் இருக்கும்போது உன்னை புரிஞ்சுக்காம இருந்துட்டேன். உன்னை விட்டு வாழ்க்கையில் இருந்து விலகிய பிறகு தான் முழுமையாக புரிந்தது என்று பேசுகிறார்.

இதையெல்லாம் ராதிகா கேட்டுக் கொண்டிருக்கிறார். உடனே கோபப்பட்டு அங்கிருந்து போய் விடுகிறார். அப்போது ராதிகா போனதை கவனிக்காத பாக்கியா கோபியிடம் கோபப்பட்டு பேசுகிறார். நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் செஞ்ச நல்ல விஷயம்... என்னை விட்டு பிரிஞ்சு போனதுதான். நீங்க என்னை விட்டு போன பிறகு தான் என்னுடைய வாழ்க்கையே புரிய தொடங்கி இருக்கிறேன் என்று திட்டி விட்டு அங்கிருந்து போய் விடுகிறார்.
மறுபக்கத்தில் ராதிகா வீட்டிற்கு சென்று கோபி இனிமே இங்க வர மாட்டாரு. நாம இந்த வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை இந்த வீட்டை காலி பண்ணிட்டு வேற எங்கேயாவது போய்விடலாம் என்று சொன்னதும் அப்பா இனி வர மாட்டாங்களா? என்று ஃபீல் பண்ணி பேச மயூவை வைத்து கமலா கோபிக்கு போன் பண்ண சொல்கிறார்.

உடனே ராதிகா கோபப்பட்டு அவளோட சொந்த அப்பா விட்டுட்டு போன போதே வளர்த்துட்டேன். இப்போது என்னால் வளர்க்க முடியும் என்று சொல்லி விடுகிறார். அடுத்ததாக பாக்கியா வீட்டில் கோபி, செழியன், ஜெனி மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஜெனி, செழியன் எப்போ வேலைக்கு போக போற என்று கேட்டுக் கொண்டிருக்க அதற்கு செழியன் லீவில் இருக்கிறேன் என்று எதையோ பேசி சமாளிக்கிறார்.
பிறகு கோபி செழியனுக்காக இன்னொரு இடத்தில் வேலைக்கு கேட்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா சமைத்துக் கொண்டிருக்கிறார். பிறகு கோபி தன்னுடைய அறையில் இருக்கும் போது ஈஸ்வரி உனக்கும் சேர்த்து தான் பாக்கியா சமைச்சிட்டு இருக்கா என்று பொய் சொல்கிறார். அதோடு பாக்யாவிடம் வந்து எனக்கு பசிக்கல, நான் ரூமில் கொண்டு சாப்பிடுகிறேன் என்று சொல்லி ஏமாற்றி வாங்கிட்டு போய் கோபியிடம் பாக்யா உனக்காக தந்தா என்று சொல்கிறார்.

இந்த மாதிரி நல்ல சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு என்று பீல் பண்ணி சாப்பிடுகிறார். இதை எல்லாம் செல்வி பார்த்து விடுகிறார். பாக்யாவிடம் நீ கொடுத்ததா உன் மாமியார் கோபி சாரிடம் சொல்லி கொடுக்குறாங்க என்று போட்டுக் கொடுக்கிறார். அடுத்ததாக ராதிகா கோபியை பார்க்க பாக்யா வீட்டிற்கு வருகிறார். ஆனால் வழக்கம் போல ஈஸ்வரி விடாமல் தடுக்கிறார்.
அதற்கு பாக்கியா அவங்க அவங்க புருஷனை பார்க்க வந்திருக்காங்க அதை தடுக்கக்கூடாது என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி இந்த வீட்டில் யாரு மாமியார் யார் மருமகனு தெரியல என்று புலம்பி செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications