பாக்கியாவுக்கு அடுத்த பிரச்சனை பார்சல்.. இந்த முறை பெரிய ஆப்பு.. ஆனால் இப்படி ஒரு முடிவா..?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 15ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் கேட்டரிங் பிரச்சினையை முடித்த பாக்கியாவிற்கு செழியன் மற்றும் எழில் வாழ்க்கையில் அடுத்த பிரச்சனை வருகிறது.
ஒரு பக்கத்தில் மாலினி மறுபக்கத்தில் கணேஷ் இரண்டு பேரும் கொடுக்கும் பிரச்சனையில் பாக்யா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பொருள்காட்சி கேண்டின் வாசலில் கணேஷ் வந்து நிற்க அதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். அப்போது அங்கு வாசலில் இருந்து டிக்கெட் போட்டுக் கொண்டிருந்த அமிர்தாவை உள்ளே போக சொல்லிவிட்டு கணேஷ் இடம் போய் பேசுகிறார்.
அப்போது கணேஷ் நீங்க உங்க வேலையை தான் பாத்துட்டு இருக்கீங்க. இன்னும் எத்தனை நாளைக்கு அமிர்தவை ஒளிச்சு வச்சு இருக்க போறீங்க? சொன்ன நாளைக்கு ஏதாவது பண்ணுங்க இல்லனா நான் எதுவும் பண்ணி விடுவேன் என்று மிரட்டுகிறார். அதற்கு பாக்கியா நான் சீக்கிரமா இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என்று சொல்லி கணேசனை அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்.
அதை தொடர்ந்து ஜெனியின் அப்பாவுக்காக செழியன் பார்க்கில் காத்துக் கொண்டிருக்கிறார். அங்கு மாலினி வருகிறார். மாலினியை பார்த்ததும் செழியன் அதிர்ச்சியாகி நீ ஏன் இங்கு வந்தாய் என்று கேட்க அதற்கு மாலினி உன்னை பார்க்க தான் வந்தேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு எல்லாத்துக்கும் சாரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜெனியின் அப்பாவும் அங்கு வர செழியனும் மாலினி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார்.

அப்போது மாலினி அவரிடம் நீங்கதான் ஜெனியின் அப்பாவா? செழியனுக்கு ஜெனியும் வேணும் நானும் வேணும் செழியனுக்கு நான் இல்லாமல் வாழ முடியாது, என்றெல்லாம் சொல்லிவிட்டு சரி நான் இங்கிருந்து கிளம்புறேன். நீ சீக்கிரமா அவர்கிட்ட பேசிகிட்டு வந்துரு என்று மாலினி கிளம்பி செல்ல அதைக் கேட்டு ஜெனியின் அப்பா கோபத்தில் திட்டுகிறார்.
அப்போது செழியன் நான் நடந்தவற்றை சொல்கிறேன் ப்ளீஸ் அங்கிள் என்று கெஞ்ச, நீ அழுதது எல்லாம் நடிப்பு தானா? உன்ன தான் தவறா புரிஞ்சுகிட்டு உனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தான் பேச வந்தேன். ஆனால் இனி நான் என்ன செய்யப் போகிறேன் பாரு என்று என்று சொல்லி அங்கிருந்து கோபமாக கிளம்புகிறார்.

அதே நேரத்தில் பாக்கியா செழியனுக்காக வீட்டில் காத்திருக்கு அங்கு செழியன் வந்து பாக்யாவை கட்டிப்பிடித்து நடந்து விஷயங்களை சொல்லி கண்கலங்கி இனிமேல் நானும் ஜெனியும் சேர வாய்ப்பே இல்லை என்று அழுகிறார். என் குழந்தை கூட என்னால் இருக்க முடியாதா என்று கண்கலங்க பாக்கியா நிச்சயம் நீ நினைக்கிறது எல்லாம் நடக்கும் கொஞ்சம் பொறுமையா இரு என்று ஆறுதல் கூறுகிறார்.

மறுபக்கத்தில் கோபமாக வீட்டுக்கு வந்த ஜெனியின் அப்பா ஜோசப் ஜெனி மற்றும் அவருடைய அம்மாவை கூப்பிட்டு செழியன் திருந்தவே மாட்டான். இப்பவும் அந்த பொண்ணை கூப்பிட்டு வச்சி பேசிக்கிட்டு தான் இருக்கான். தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்கான். அவன் நமக்கு வேண்டவே வேண்டாம் தூக்கிப்போடு என்று கூறுகிறார். ஜெனி இதைக் கேட்டு அதிர்ச்சியில் நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications