குடும்பத்தை பிரித்த ஈஸ்வரி.. வீட்டை விட்டு போன செழியன்.. பாக்கியாவிற்காக ராதிகா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 23ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் ஜெனியை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வருவதற்காக செழியன் குடும்பத்தினர் ஜெனி வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவர்களுக்கு அவமானம் கிடைக்கிறது.
அதே நேரத்தில் பாக்யாவிற்கு கணேஷ் அடுத்த பிரச்சனையை கொடுக்க பாக்யா கலங்கி அழுது கொண்டிருக்கும் போது ராதிகா ஆறுதலாக இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

அந்த வகையில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் ஜெனி வீட்டிற்கு போயிருந்த பாக்யா குடும்பத்தினரை ஜெனியின் அப்பா ஜோசப் அவமானப்படுத்தி பேசிக்கொண்டே இருக்கிறார். இனி ஜெனி இங்கே தான் இருப்பா, உங்க வீட்டுக்கு அனுப்பி அவளை அழ வைக்க முடியாது என்று திட்ட, அதற்கு ஈஸ்வரியும் வழக்கம் போல திமிராக பேச ஈஸ்வரிக்கு ஜோசப்க்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகிறது.
ஒரு கட்டத்தில் ஈஸ்வரி விவாகரத்துன்னு வந்தா குழந்தை யாரு கிட்ட இருக்க வேண்டும் என்ற பேச்சு வரும் அது எங்க வீட்டு வாரிசு செழியன் கிட்ட தான் இருக்கும். நாங்களும் பார்க்க வேண்டிய இடத்தில் பாத்துக்குறோம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்புகிறார். அதைத் தொடர்ந்து ஜெனிக்கு உண்மை தெரிந்ததும் ஜெனி டைவர்ஸ் நோட்டீஸ் யாரை கேட்டு அனுப்பினீங்க என்று கோபப்பட அதற்கு ஜோசப் உனக்கு எதுவும் தெரியாது.

நீ நாங்க சொல்றதை மட்டும் கேளு என்று திட்டிக் கொண்டு இருக்க, அந்த நேரத்தில் செழியன் போன் செய்ய ஜோசப் போனை வாங்கி கட் பண்ணி விடுகிறார். இதை பார்த்து ஜெனி அதிர்ச்சியாகி நிற்க, அப்போது ஜோசப் இனி அவன் கிட்ட பேச கூடாது என்று போனை தூக்கிப்போட்டு உடைத்து விட ஜெனி எதுவும் பேச முடியாமல் அதிர்ச்சியாகி அழுது கொண்டே இருக்கிறார்.
மறுபக்கத்தில் வீட்டுக்கு வந்து ஈஸ்வரி இனிமேல் பேசுறதுக்கு எதுவுமே கிடையாது. நாமளே விவாகரத்து கொடுத்துட்டு செழியனுக்கு வேற ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதான் என்று ஷாக்கொடுக்கிறார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த செழியன் ஜெனி இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டா நான் கேட்கணும் என்று கோபமாக வீட்டில் இருந்து அழுதபடி கிளம்பி போகிறார்.

செழியனை தொடர்ந்து எழில் கூடவே போக பாக்கியா ஒரு பக்கம் உட்கார்ந்து கண் கலங்கி அழுது கொண்டிருக்கிறார். பாக்யாவிற்கு ஆதரவாக ராதிகா பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஈஸ்வரி மற்றொரு பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். பிறகு பாக்கியா என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது கணேஷ் போன் செய்ய பக்கத்தில் அமிர்தா இருந்து யாரு போன் பண்றாங்க என்று கேட்கிறார். அப்போது பாக்யா அது வேறு ஒருத்தங்க என்று சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications