பாக்கியலட்சுமி: நறுக்குன்னு பாக்யா கேட்ட கேள்வி! கோபியின் மனமாற்றம்.. பதறிய ஈஸ்வரி! இனியாக்கு தேவையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் 28ஆம் தேதிக்கான எபிசோடில் கோவிலுக்கு போயிட்டு வீட்டிற்கு வந்த கோபியிடம் ராதிகா பற்றிய உண்மைகளை பாக்கியா சொல்கிறார். இதனால் கோபி எதிர்பார்க்காத முடிவெடுக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் குலதெய்வம் கோவிலுக்கு போன ஈஸ்வரி, இனியா, செழியன், கோபி எல்லோரும் காரில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது காபி குடிச்சிட்டு போகலாம் என்று ஈஸ்வரி சொல்ல சரி என்று செழியனும் இனியாவும் காப்பி வாங்க போகிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி கோபியிடம் நீ இப்பதான் சந்தோஷமா இருக்கிற கோபி நீ இப்படியே எங்க கூட இருந்திடு.

நீ எப்பவும் எங்களை விட்டு போயிடாத. நீ எங்களை விட்டு போனதால நாங்க எல்லோருமே ரொம்ப கஷ்டப்பட்டோம். பாக்கியாவும் பசங்களவச்சுட்டு கஷ்டப்பட்டா. உங்க அப்பா கிட்ட எத்தனை நாள் உன்னை நினைத்து சொல்லி அழுது இருக்கிறேன் தெரியுமா? அவரும் கஷ்டப்பட்டாரு, நீயும் பாக்கியாவும் சேர்ந்து வாழ மாட்டீங்களான்னு அவர் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தாரு.
அவருடைய ஆசை நிறைவேறாமல் போய் சேர்ந்துட்ராரு. நானும் நிறைவேறாத ஆசையோடு போய் சேர்ந்திடுவேன்னு நினைக்கிறேன் என்று சென்டிமெண்டாக பேச, அதற்கு கோபி நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்கம்மா. உங்கள விட்டு எங்கேயும் போகமாட்டேன் என்று சொல்கிறார். அது மட்டும் இல்லாமல் நீ பாக்கியா கூட சேர்ந்து வாழனும் கோபி என்று ஈஸ்வரி கேட்க, அதற்கு கோபி என்று பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.
பிறகு எல்லாரும் வீட்டிற்கு வந்தவுடன் பாக்கியா எல்லாரையும் வரவேற்று காபி போடவா என்று கேட்கிறார். ஈஸ்வரி நாலு காபி போடு என்று சொல்ல, கோபி வேணாம் வேணாம் என்று சொல்கிறார். ஆனால் பாக்கியா நான்கு பேருக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுக்க ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார்.
பிறகு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று பாக்கியா கூப்பிட்டதும் கோபி தயங்குகிறார். அதற்கு ஈஸ்வரி அதான் பேசணும்னு சொல்றாளே போய் பேசிட்டு வாப்பா என்று சந்தோஷமாக அனுப்பி வைக்கிறார். பிறகு இருவரும் ரூமிற்குள் தனியாக பேசப்போகின்றனர்.
அப்போது பாக்கியா ட்ரிப்பெல்லாம் எப்படி போச்சு என்று கேட்க, கோபி சூப்பரா போச்சு. ஊர்ல எல்லாரும் நீ வரலையானு கேட்டாங்க. இனியாவும் ரொம்ப சந்தோஷப்பட்டா. நாங்க எல்லாருமே ஜாலியா இருந்துட்டு வந்தோம் என்று சொன்னதும் நீங்க எப்பவும் உங்களோட சந்தோஷத்தை மட்டும் தானே பார்ப்பீங்க.

நீங்க கோயிலுக்கு போறதை ராதிகா கிட்ட சொன்னீங்களா? என்று கேட்க, நான் போகும்போது மெசேஜ் பண்ணுனே என்று கோபி சொல்கிறார். அதற்கு அவங்க பதில் சொன்னாங்களா என்று பாக்கியா கேட்க, இல்ல ஆபீஸ் வேலையா பிஸியா இருந்திருப்பா என்று கோபி சொல்ல, ஆமா அவங்க ஒரே ஆளாக வீட்டை காலி பண்ணனும்னா கஷ்டம் தானே என்று பாக்கியா கோபப்படுகிறார்.
ராதிகா உடைந்து போய் இருக்காங்க. அவங்க வாழ்க்கையே தொலைச்சிட்டு போற மாதிரி பேசுறாங்க. நான் நேற்று அவங்கள பார்க்க போனேன், அவங்க என்னென்னமோ பேசுறாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க இந்த வீட்டில் இருந்து கிளம்ப போறாங்க. நீங்க இப்ப ராதிகாவை போய் பார்க்கவில்லை என்றால் கடைசி வரைக்கும் பார்க்கவே முடியாதுன்னு பாக்கியா சொல்கிறார்.
அதோடு இப்பவும் உங்க அம்மா பேச்சை கேட்டுகிட்டு நான் இங்கே தான் இருப்பேன்னு இருந்தீங்கன்னா உங்கள மாதிரி சுயநலவாதிக பார்த்து இருக்கவே முடியாது. ஒருவேளை இதுபோல ராதிகாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய் அவங்க அம்மா வீட்டுக்கு போய் இருக்காங்கன்னு வச்சுக்கோங்க, அப்போ நீங்க பார்க்க போகும்போது உங்கள தடுத்தா என்ன பண்ணுவீங்க? என்று பாக்யா கேட்க, நான் தாலி கட்டின மனைவியை எப்படி பார்க்க முடியாதுன்னு அவங்க சொல்ல முடியும் என்று கோபப்படுவேன் என்று கோபி சொல்கிறார்.

ஆனால் இங்கு இருக்கிறவங்க அப்படித்தான் சொன்னாங்க என்று ராதிகா இங்கே வரும்போது ஈஸ்வரி தடுத்ததை பாக்கியா சொல்கிறார். பிறகு எனக்கு புரிய வச்சதுக்கு தேங்க்ஸ் என்று கோபி சொல்ல, பாக்கியா உங்களுக்கு நல்லதுக்காக சொல்லல, ராதிகாவுடைய நல்லதுக்காக சொன்னேன் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார்.
பாக்யா வெளியே வந்ததும் ஈஸ்வரியும் இனியாவும் அப்பாகிட்ட என்ன பேசினா என்று கேட்க, அதற்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரே வந்து சொல்லுவார் என்று பக்கியா சொல்கிறார். பிறகு கோபி நான் ராதிகாவை போய் பாத்துட்டு வரேன் என்று சொல்ல ஈஸ்வரி கோபப்படுகிறார்.
Top 10 Tamil Serials: முதல் இடத்தில் எந்த சீரியல் தெரியுமா? இந்த வாரம் கலக்கிய டாப் 10 சீரியல் லிஸ்ட்
நீதான் அவன் மனசை மாத்துனியா? என்று பாக்யாவையும் திட்டுகிறார். அதோடு கோபியை அனுப்ப முடியாது என்று ஈஸ்வரியும், இனியாவும் வாக்குவாதம் செய்கின்றனர். இனியா பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கோபமான பாக்கியா உனக்கு இந்த விஷயம் எல்லாம் இப்போ புரியாது என்று திட்டிவிட்டு உள்ளே போகிறார். கோபி ராதிகாவை பார்க்க போகிறேன் பாக்கியா சொன்னதுதான் சரி என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications