பாக்கியலட்சுமி: ஈஸ்வரி செய்த எதிர்பாராத செயல்.. கோபியை விட்டு செல்லும் ராதிகா.. பாக்யாவின் மனமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் டிசம்பர் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் மருத்துவமனையில் இருக்கும்போது ராதிகா இங்கே இருக்கக் கூடாது என்று ஈஸ்வரி பிரச்சனை செய்வதால் ராதிகா அங்கிருந்து வருத்தத்தோடு வெளியே செல்கிறார்.

இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஹாஸ்பிடலில் கோபியை கண்ணாடி வழியாக பார்த்து ராதிகா அழுது கொண்டு நிற்க, அங்கு வந்த ஈஸ்வரி நீ இன்னும் கிளம்பவே இல்லையா? என்னுடைய பிள்ளை உயிரோடு இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? நீ எப்ப எங்க குடும்பத்துக்கு வந்தியோ அன்னைக்கே எங்க குடும்பம் நாசமா போயிட்டு என்று ராதிகாவை சரமாரியாக திட்டுகிறார்.

television baakiyalakshmi serial vijay tv

அந்த நேரத்தில் அங்கு வந்த நர்ஸ் கோபிக்கு மருந்து வாங்க வேண்டும் என்று சொல்கிறார். அப்போது ராதிகா என்னிடம் அந்த லிஸ்டை கொடுங்க நான் மருந்து வாங்கிட்டு வரேன் என்று சொல்கிறார். அதோடு கோபி நிலைமை எப்படி இருக்கு என்று கேட்கிறார். அதற்கு டாக்டர் விசிட்டர்ஸிடம் எல்லாம் நிலைமையை சொல்லிக்கிட்டு இருக்க முடியாது அவங்க குடும்பத்தாரிடம் சொல்லியாச்சு என்று சொல்கிறார்.

அப்போது நர்ஸ் ராதிகாவிடம் பில்லை கொடுக்கப் போகும்போது, டாக்டர் அவங்க மனைவியிடம் கொடுங்க என்று பாக்யாவிடம் கொடுக்க சொல்கிறார். அதை கேட்டு ராதிகா அதிர்ச்சி அடைகிறார். அப்போது ஈஸ்வரி அந்த பில்லை வாங்கு பாக்கியா என்று சொல்கிறார். அதற்கு ராதிகா நர்ஸிடம், பாக்கியா அவருடைய மனைவின்னு சொன்னாங்களா? என்று கேட்க நர்ஸ் ஆமாம் என்று நடந்ததை சொல்கிறார்.

television baakiyalakshmi serial vijay tv

இதை தொடர்ந்து ராதிகா தனியாக நின்று அழுது கொண்டிருக்க, மீண்டும் ஈஸ்வரி வந்து கோபியை பாத்துக்க நாங்க எல்லாரும் இருக்கிறோம். நீ வீட்டுக்கு கிளம்பு என்று சொல்கிறார். இதனால் ராதிகா வேறு வழியில்லாமல் வெளியே கிளம்பி செல்கிறார். பிறகு வெளியே வந்து தனியாக நின்று அழுது கொண்டிருக்க அவருக்கு பாக்கியா ஆறுதல் சொல்லப் போகிறார்.

ஆனாலும் ராதிகா அதை புரிந்து கொள்ளாமல் நீங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டீங்க நான் மட்டும் மீண்டும் தனியாக இருக்கிறேன் என்று அழுது புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது பாக்கியா நடந்ததை சொல்ல போகும்போது நீங்க இருந்து பாத்துக்கோங்க, எதுவும் என்றால் எனக்கு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு ராதிகா கிளம்புகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+