Baakiyalakshmi Serial: புடவையை வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க! பாக்கியலட்சுமி சீரியல் நடிகை மீது டிசைனர் குற்றச்சாட்டு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலை அவ்வளவு சீக்கிரத்தில் சின்னத்திரை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்த சீரியல் 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகை மீதுதான் சோசியல் மீடியாவில் டிசைனர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் இளம் தலைமுறை ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்று வரும். அதிலும் பாக்கியலட்சுமி சீரியல் ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருந்த இந்த சீரியலில் நடித்த நடிகர்களும் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆகிவிட்டனர்.

பாக்கியலட்சுமி சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து அதில் நடித்த ஒரு சில நடிகர்கள் மற்ற சீரியல்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் இந்த சீரியலில் நடித்த நடிகை கம்பம் மீனா மீது kanish_ designer_ studio என்ற ஐடியில் இருந்து ஒரு டிசைனர் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். கம்பம் மீனா பாக்கியலட்சுமி சீரியலில் மட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து இருந்தார். இப்போது ஜீ தமிழிலும் ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கம்பம் மீனா பற்றி டிசைனர் சொல்லும்போது, பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி என்ற கேரக்டரில் நடித்த நடிகை கம்பம் மீனா எனக்கு மெசேஜ் செய்து பேசினாங்க. நீங்க எனக்கு புடவை அனுப்பி வைங்க அதை வைத்தால் நான் கொலாப்ஸ் வீடியோ போடுகிறேன் என்று சொன்னார்கள். நாங்கள் முதலில் அவங்களுக்கு ரிப்ளை பண்ணவே இல்ல. பிறகு அவங்க தொடர்ந்து கேட்டதால நாங்க ஒரு புடவை அனுப்பினோம். அதற்கான வீடியோ அவங்க போடவே இல்ல. ஆனால் தொடர்ந்து எங்ககிட்ட அடுத்த புடவை அனுப்பி வைங்க என்று சொல்லிக்கிட்டே இருந்தாங்க.
நாங்கள் முதல் வீடியோவை போடுங்க என்று சொன்னதற்கு அவங்க எங்களுக்கு அனுப்பவே இல்ல. ஆனால் நாங்கள் அனுப்பிய புடவையை அவங்க வீட்டு பங்க்ஷனுக்கு உடுத்தி வீடியோ போட்டு இருந்தாங்க, இது பற்றி நாங்க கேட்டதற்கு நீங்க அடுத்த புடவை அனுப்புங்க, நான் வீடியோ போடுறோம்னு சொல்றாங்க என்று அந்த வீடியோவில் டிசைனர் பேசியிருக்கிறார்.
அதோடு இந்த நடிகை மட்டுமல்லாமல் பல சீரியல் நடிகைகள் இதுபோல தங்களை ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். டிசைனர்கள் மற்றும் மேக்கப் ஆர்டிஸ்ட் போன்றவர்களை குறிவைத்து இவர்களை போன்றோர்கள் ப்ரோமோஷன் செய்கிறோம் என்று எங்களுக்கு அடிக்கடி மெசேஜ் செய்றாங்க. நாங்களும் அவங்களுக்காக பொருட்களை அனுப்பினால் அவங்க எங்களுக்கு எந்த வீடியோக்களையும் தர மாட்டேன் என்கிறார்கள். ஆனால் பொருட்களை மட்டும் யூஸ் பண்ணிக்கிறாங்க.
இவங்களுக்கு பொருட்கள் தேவை என்றால் பணம் கொடுத்து வாங்கலாம். ஆனால் பணம் கொடுக்காமல் இப்படி ஓசியிலேயே ப்ரோமோஷன் பண்ணுகிறோம் என்கிற பெயரில் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று அந்த டிசைனர் பேசி இருக்கிறார் . அந்த டிசைனர் வெளியிட்ட முதல் வீடியோவில் கம்பம் மீனா என்ற பெயரை மட்டும் சொல்லி இருந்த நிலையில் தொடர்ந்து அவரிடம் யார் அந்த நடிகை என்ற பலரும் கேட்டு வந்தனர்.
அதனால் இப்போது பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து நாங்கள் நடிகை கம்பம் மீனாவை தொடர்பு தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயற்சி செய்திருக்கிறோம். அவர் இப்போது வரைக்கும் இதற்கான பதிலை கொடுக்கவில்லை. அவர் விளக்கம் கொடுத்தால் அது பற்றி தெரிவிக்கிறோம்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications