பாக்கியலட்சுமி சீரியல் ஜெனி காதலிக்கிறாரா? அதுவும் அந்த நடிகரா? இது புது ட்விஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். அவர் அந்த சீரியலில் அவரோடு நடிக்கும் நடிகரை காதலித்து வருவதாக செய்திகள் வலம் வருகிறது. இது பற்றி பார்க்கலாம்.
சீரியல் ஆக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி ஒன்றாக நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிய செய்தி கிடைத்தது. இது பல காலமாக நடக்கிறது. சமீபத்தில் கூட சின்னத்திரையில் அடுத்தடுத்து பல ஜோடிகள் தங்களுடைய காதலை அறிவித்து வருகிறார்கள். சமீபத்தில் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்து வரும் நடிகர் வெற்றி வசந்த் தான் விஜய் டிவியில் பொன்னி சீரியலில் நடிக்கும் வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து அடுத்த வாரமே தங்களுக்கு எங்கேஜ்மென்ட் என்று சொல்லி இருந்தார். அதுபோல கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுடைய எங்கேஜ்மென்ட் எளிமையாக நடைபெற்றது. அதை தொடர்ந்து இப்போது இன்னொரு புதிய செய்தி ஒன்று வலம் வருகிறது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடிக்கும் நடிகை திவ்யா கணேஷ் அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக செழியன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் விகாஷ் சம்பத் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வலம் வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் ஆரம்பத்தில் செழியன் கேரக்டரில் நடிகர் ஆரியன் நடித்து வந்தார். அவர் நடிகை ஷபானாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சில மாதங்களில் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். பிறகு ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதே நேரத்தில் விகாஸ் சம்பத் பாக்கியலட்சுமி சீரியலில் ஆரியனுக்கு பதிலாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் திவ்யா கணேஷ் மற்றும் விகாஸ் இருவரும் காதலிப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வருகிறது. திவ்யா கணேஷுக்கு ஏற்கனவே நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷ் உடன் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. பிறகு சில காரணங்களால் திருமணம் நடக்கவில்லை. ஆர்கே சுரேஷ்க்கு வேறு ஒரு பெண்ணோடு திருமணம் நடைபெற்று அவருக்கு இப்போது குழந்தைகளும் இருக்கிறது.

ஆனால் திவ்யா கணேஷ் இப்ப வரைக்கும் சிங்கிளாக தான் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் விகாஷை காதலிப்பதாக செய்திகள் பரவுகிறது ஆனால் இந்த செய்தியை திவ்யாவோ அல்லது விகாஷோ இன்னும் அறிவிக்கவில்லை. விகாஷுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய முதலாவது திருமண நாளை கொண்டாடி தன்னுடைய மனைவியோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அவருடைய மனைவியின் பெயர் அம்ருதா என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் கூட இப்போதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் நிலையில் தற்போது அவர் திவ்யா கணேஷை காதலிப்பதாக செய்திகள் வலம் வருகிறது. இது குறித்து திவ்யா கணேஷ் விரைவில் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications