ஜெனியை காப்பாற்றும் ராதிகா..பழி சுமத்தும் ஈஸ்வரி..கோபி எடுக்கும் முடிவு..பரபரப்பான திருப்பங்கள்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோட்டின் ஹிண்ட் கிடைத்திருக்கிறது.
கோபிக்கு ராதிகா காபி கொடுப்பதை வைத்து புதியதாக பிரச்சனை ஒன்றை இனியா தொடங்க இருக்கிறாராம்.
இனியா, ராதிகா பிரச்சனை இடையில் மாட்டிக் கொண்ட ஜெனிக்கு எதிர்பாராத விபத்து ஏற்பட இருக்கிறதாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் இந்த வாரத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே கோபி இருக்கும் இடத்தில்தான் நானும் இருப்பேன் என்று ராதிகா பாக்கியா வீட்டிற்கு வந்திருக்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியில் இருக்கிறது. ஒரு பக்கம் பாக்கியா எனக்கு இந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அதேபோல கோபி நம்ம வீட்டுக்கு போய்விடலாம் என்று ராதிகாவை பல முறை கூப்பிட்டுக் கொண்டு இருந்தாலும், அதற்கு ராதிகா செவி சாய்ப்பதாக இல்லை. வீட்டில் சமையலறையிலும் பிரச்சனை செய்து கொண்டிருக்கும் ராதிகாவை எப்படியாவது துரத்தி விட வேண்டும் என்று ஈஸ்வரியும் முடிவெடுத்துக் கொண்டிருக்கிறார்.
கோபி மீண்டும் நம்மோடு வந்து விட வேண்டும். ராதிகாவை மட்டும் அவருடைய அம்மா வீட்டுக்கு அனுப்பி வைத்து விட வேண்டும் என்று ஈஸ்வரி ஒரு பக்கம் நினைத்துக் கொண்டிருக்க அதுதான் சரியான முடிவு என்று இனியாவும் கூறிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ராதிகா தன்னை கேள்வி கேட்கிறார் என்று கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கே வந்த ராதிகாவை பழிவாங்குவதற்காக இனியாவும் காத்திருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வார எபிசோட்டின் ஹிண்ட் கிடைத்திருக்கிறது. அதில் காபிக்காக காத்திருக்கும் கோபிக்காக ராதிகா காபி போடுவதை தடுத்து நிறுத்தி எங்க அப்பாவுக்கு நீங்க எதற்கு காபி கொடுக்க வேண்டும் என்று இனியா பிரச்சனை செய்யப் போகிறாராம்.. அப்போது அருகில் ஜெனி நின்று கொண்டு இனியாவை திட்டி இது தேவை இல்லாத பிரச்சனை என்று கூற இருக்கிறாராம்.

அப்போது மாடிப்படியில் கால் தவறி ஜெனி கீழே விழ இருக்கிறாராம். ஜெனியை ராதிகா தான் மருத்துவமனையில் கூட்டிக்கொண்டு சேர்த்து உயிரை காப்பாற்றுகிறாராம். ஆனால் அதை புரிந்து கொள்ளாத ஈஸ்வரி கோபி இடம் ராதிகா தான் ஜெனியை கீழே தள்ளி கொலை முயற்சி செய்தால் என்று கூற இருக்கிறாராம். அதை கோபியும் நம்பாமல் இருக்கிறாராம். அடுத்து ஈஸ்வரி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்றும், அதே நேரத்தில் தன் மீது பழி சுமத்திய ஈஸ்வரியை ராதிகா எப்படி பழிவாங்க போகிறார் என்றும் இந்த வாரம் இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications