திருமண கோலத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோஸ்.. குவியும் பாராட்டு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை நேஹா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அவரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத திருப்பம் வந்து கொண்டே இருக்கிறது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியல் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வர இருக்கும் நிலையில் அதற்கு முன்பு கதை பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் வந்த கதையே ரிப்பீட்டு மோடில் வந்தது பார்க்கும் ரசிகர்களை திருப்தி அடைய வைத்திருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இதனால் இந்த சீரியல் எப்போது தான் முடியும் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது. ஆனால் இப்போது கதையில் வேகம் அதிகரித்திருக்கிறது. சில மாதங்களுக்கு பிறகு என்று இரண்டு மூன்று முறை கதையில் விறுவிறுப்பாக தொடர்ந்து இருக்கிறார்கள். அதுபோல கோபியும் மனம் திருந்தி இருக்கிறார். ஆனால் இப்போது கோபியை டம்மி பீஸ் ஆக மாறி இருப்பதுதான் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்து இருக்கிறது.
பாவம் கோபி
இதுவரைக்கும் வில்லத்தனம் மற்றும் காமெடி செய்து கொண்டிருந்த கோபியை இப்போது டம்மி பாவா ஆக மாற்றி வைத்திருக்கிறார்கள். பாக்கியா சொல்வது சரி என்று கோபிக்கு புரிகிறது ஆனால் சுதாகர் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பி விட்டு ஆடு மாதிரி தலையை ஆட்டிக் கொண்டு வந்துவிடுகிறார். கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இனியாவின் திருமணம் நடைபெற்றது.
ஏமாற்றிய சுதாகர்
கடைசி நேரத்தில் பாக்கியா இனியா திருமணத்தை நிறுத்தி ஆகாஷுடன் கல்யாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ரெஸ்டாரண்டுக்காக சுதாகர் தன்னுடைய மகனுக்கு இனியாவை திருமணம் செய்து வைத்திருக்கிறார். இதற்கு மொத்த குடும்பத்தினரும் சம்மதம் சொல்லி இருக்கிறார்கள். அது போல பாக்யாவின் ரெஸ்டாரண்டை சுதாகர் பிளான் பண்ணுன மாதிரி அவர் பெயருக்கு மாற்றிவிட்டார்.

பாக்யாவிற்கு தொல்லை
அதுபோல பாக்யாவையும் ரெஸ்டாரண்டை விட்டு துரத்தி விட்டிருக்கிறார். இனியா ஹனிமூனுக்கு போயிருக்கும் நிலையில் பாக்யாவிற்கும் சுதாகருக்கும் பிரச்சனை பெரிதாகிறது. இனி பாக்கியாவிற்கு ரெஸ்டாரண்ட் கிடைக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல பாக்யா சுதாகரிடம் இன்னைக்கு ரெஸ்டாரண்ட்டை என்கிட்ட இருந்து பிடுங்கின மாதிரி என்னுடைய பொண்ணுக்கு ஏதாவது பிரச்சனை கொடுக்கலாம் என்று நினைத்தால் நான் வேற மாதிரி பண்ணுவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த பிரச்சனை
இதனால் சுதாகரால் இனியாவிற்க்கு தான் பிரச்சனை வரும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படியான நிலையில் இனியாவாக நடிக்கும் நேஹா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இனியாவின் திருமண புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்ததும் முதலில் சிலர் இது உங்களில் திருமண புகைப்படமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு அந்த பதிவிலேயே இது இனியாவின் திருமண புகைப்படம் என்று பதில் கொடுத்து இருக்கிறார் ஆனாலும் சிலர் நேஹாவிற்கு திருமணம் முடித்து விட்டதா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாறுபட்ட கதை
அதுபோல சீரியலில் இனி இனியா தைரியமாக முடிவெடுக்கிற மாதிரி கதை வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த சீரியலில் தான் இனியா ஸ்கூல் படிக்கும்போது கதை தொடங்கி, பிறகு காலேஜ் முடித்து இப்போது கல்யாணமும் முடித்து வைத்திருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்












Click it and Unblock the Notifications