கோபியால் பூகம்பமாய் வெடித்த ஈஸ்வரி.. பாக்யா கொடுத்த அதிர்ச்சி.. இனியா போட்ட புது பிளான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பிப்ரவரி 15ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதில் வீட்டிற்கு வந்த பாக்யாவிற்கு ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி என மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
பாக்கியா தான் ராஜிக்கு திருமணம் செய்து வைத்தார் என்ற உண்மை குடும்பத்திற்கு தெரிய வந்ததால் பாக்கியா அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அதே நேரத்தில் இனியா பாக்கியா மற்றும் எழிலுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி உங்க அம்மாவுக்கு உன் மேல பாசம் கிடையாது. ஜெனி மேல தான் பாசம் எதுக்கு குழந்தையை தூக்கி ஜெனி கிட்ட கொடுக்கிறா என்று ஏத்தி விட அதற்கு ராதிகா இந்த விஷயத்தில் பாக்கியா செய்தது தான் சரி என்று சொல்ல அதற்கு கோபி இவ்வளவு நேரமா நீ அவளை திட்டிகிட்டிருந்த இப்போ அவளுக்கு சப்போர்ட் பண்ற என்று கேட்க, அதற்கு ராதிகா ராஜி விஷயத்தில் பாக்கியா செய்தது தப்பு.
ஆனால் ஜெனி விஷயத்தில் அவங்க பண்ணுனது சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போகிறார். மறுநாள் கோபி ராமமூர்த்தி ஈஸ்வரி என பாக்யாவுக்காக காத்திருக்க அப்போது பாக்கியாவும் எழிலும் வீட்டிற்கு வருகின்றனர். வரும் வழியில் வாசலிலேயே பாக்கியாவை ஈஸ்வரி தடுத்து நிறுத்துகிறார். அதோடு எங்கிருந்து வர என்று கேட்க அதற்கு பாக்கிய திருச்செந்தூர் போயிட்டு வரேன் என்று சொல்ல, அதற்கு கோபி குன்னக்குடியில் தான் இருந்தான்.
அவன் எல்லா விஷயங்களும் சொல்லி இருப்பானு கூட தெரியாமல் திருச்செந்தூர் என்று எப்படி பொய் சொல்ற பாரு என்று கோபப்படுகிறார். அதோடு ராஜி விஷயத்தை பற்றி கேட்டு ஈஸ்வரி கோபப்படுகிறார். அப்போது ராமமூர்த்தி நீ பண்ணது தப்பு தான். பெண்ணை பெத்தவங்க சாபம் விட்டால் நாம நல்லா இருக்க முடியாது என்று சொல்கிறார். அதை தொடர்ந்து ராதிகாவும் ராஜி விஷயத்தில் நீங்க என்ன பண்ணி இருக்கணும்? வீட்டுக்கு போன் பண்ணி தெரியப்படுத்தி இருக்கணும் என்று கோபப்படுகிறார்.
அப்போது எல்லோரும் மாறி மாறி பேச பாக்கியா நான் பண்ணுனது பெரிய தப்புதான் மன்னிச்சிருங்க தெரியாம பண்ணிட்டேன் என்று கையெடுத்து கும்பிட்டு விட்டு உள்ளே போகிறார். அதைத்தொடர்ந்து எழில் பாக்யாவிடம் நீ உன் தரப்பு நியாயத்தை சொல்லுவேன்னு நினைச்சேன் ஆனால் நீ சரண்டர் ஆகிட்ட என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா நீ பண்ணின விஷயத்தை சொன்னா என் பிரண்ட்ஸ்கள் எல்லோரும் ரொம்ப பாராட்டுறாங்க என்று சொல்கிறார்.
அதற்கு பாக்கியா நீ இந்த மாதிரி எல்லாம் பண்ணக்கூடாது என்று அட்வைஸ் பண்ணுகிறார். அதோடு எழில் நீ நல்லா படிச்சு வேலைக்கு போய் உனக்கு ஒரு பையனை பிடிச்சிருந்தா அந்த பையன் நல்ல பையனா இருந்தா உன் பக்கம்தான் நான் நிற்பேன் என்று சொல்ல அதற்கு இனியா அதெல்லாம் பெரிய ப்ராசஸ் அதனால் நீங்க பாக்குறப்ப அதனால நீங்க பார்க்கிற பையனையே நான் கட்டிக்கிறேன் என்று சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications