பாக்கியலட்சுமி: எழில் சொன்ன விஷயம்.. பாக்யாவிடம் மாட்டிய இனியா.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 20ஆம் தேதிக்கான எபிசோடில் இனியாவும் அவருடைய காதலன் ஆகாஷும் பாக்கியா மற்றும் செல்வியிடம் சிக்குகிறார்கள். அதே நேரத்தில் பாக்யா குடும்பத்திற்கு எதிர்பாராத விஷயத்தை எழில் சொல்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் எழில் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும் என்று எல்லாரையும் கூப்பிட்டு வைத்திருக்கிறார். அப்போது ஈஸ்வரி அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார்கள் சீக்கிரமாக ஒரு வாரிசு வரப்போகிறது என்று சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் எழில் வந்து தனக்கு ப்ரொடியூசர் ஒரு வீடு வாங்கி கொடுத்து இருப்பதாக சொல்கிறார். இதைக் கேட்டு எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் ஈஸ்வரி மற்றும் கோபப்படுகிறார். வீடு கொடுத்தால் இனி அந்த வீட்டுக்கு போயிருவியா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு எழில் நான் யோசித்து தான் முடிவு எடுப்பேன்.
பாக்கியலட்சுமி: ஈஸ்வரி சொல்பேச்சுக்கு ஆடும் பாக்யா.. இப்படி மாறிட்டாரே! அப்போ இனியா நிலைமை?
இந்த மகிழ்ச்சி செய்தியை உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் என்று சொல்ல, அதற்கு செழியன் சென்னையில் வீடு வாங்குவதே பெருசு உனக்கு நல்ல ஆப்பர்சூனிட்டி கிடைத்திருக்கிறது என்று பாராட்டுகிறார். அதைத் தொடர்ந்து அடுத்த கட்டத்தில் இனியாவும் அவருடைய காதலரும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் எழில் வீடு வாங்கிய விஷயத்தை இனியா சொன்னதும் ஆகாஷ் எழிலுக்கு வாழ்த்துக்கள் சொல்லவா என்று கேட்கிறார். அதற்கு இனியா இப்போ வேண்டாம் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்கியா வந்து இனியாவிடம் நீ எப்பவும் போனில் பேசிக்கொண்டு இருக்கிறாய், யாரிடம் பேசுற? என்று விசாரிக்கிறார்.

அதே நேரத்தில் செல்வி ஆகாஷிடம் செல்போனில் அதிகமா பேசுற யாருகிட்ட பேசுற என்று கேள்வி கேட்கிறார். ஆனால் ஆகாஷ் மற்றும் இனியா இருவரும் செல்வி மற்றும் பாக்கியாவை ஏமாற்றி விடுகிறார்கள். அடுத்ததாக செல்வி, பாக்யா வீட்டிற்கு வருகிறார். அங்கு பாக்கியா சந்தோஷமாக சமைத்துக் கொண்டிருக்கிறார். அது பற்றி ஈஸ்வரி கேட்க அதற்கு பாக்கியா என்னுடைய மகன் புது வீட்டுக்கு போகப் போறான் எனக்கு சந்தோசம் தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்போது எழில் அங்கு வந்து நிற்கிறார். அவரிடம் என்னவென்று கேட்க பாட்டி தான் வர சொன்னாங்க அதான் வந்தேன் என்று சொல்கிறார். அப்போது ஈஸ்வரி வந்து எழில் புது வீட்டுக்கு போக கூடாது என்று சொல்கிறார். ஆனால் பாக்கியா அவனை விடுங்க அவன் உடைய வழியை பார்த்து சந்தோஷமா இருக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு கோபியும் பாக்யா சொல்வதுதான் சரி என்று சொல்கிறார். இதனால் ஈஸ்வரி கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications