பாக்கியலட்சுமி: ஈஸ்வரி சொல்பேச்சுக்கு ஆடும் பாக்யா.. இப்படி மாறிட்டாரே! அப்போ இனியா நிலைமை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா மற்றும் ஈஸ்வரி ஆக நடிக்கும் ராஜலட்சுமி இருவரும் சேர்ந்து வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கின்றனர். அது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. அதே நேரத்தில் இன்னும் சில வாரங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீரியலில் வந்த கதை ரிப்பீட் ஆகி கொண்டிருக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் சீரியல் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த சீரியலில் எதிர்ப்பாராத திருப்பமும் வந்திருக்கிறது. அதாவது இனியா புதியதாக ஒருவரை காதலிக்கிறார். அவர் ஏற்கனவே ஸ்கூல் படிக்கும்போதும், டியூஷன் படிக்கும்போதும், காலேஜில் சேரும்போது என்று அவருக்கு பல கிரஷ் வந்து கொண்டே இருந்தனர். ஆனால் இப்போது செல்வியின் மகனைத்தான் இனியா காதலிக்கிறார்.
இந்த விஷயம் வீட்டிற்கு தெரியும் போது என்ன நடக்கும் என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடந்த வாரத்தில் எழில் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போதுதான் ஆகாஷ் என்ற கேரக்டரில் கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த பிரபலம் அறிமுகமானார். ஆனால் அதே இடத்தில் செல்வியும் இருந்தார். அப்போது இருவரும் அம்மா மகன் என்று காட்டப்படவில்லை.

ஆனால் நேற்றைய எபிசோடில் செல்வியின் மகன் என்று ஆகாஷ் அறிமுகம் ஆகிறார். இது லாஜிக் மிஸ்டேக்காக இருந்தாலும் இது சீரியலில் புது திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஈஸ்வரி தன்னுடைய பேரன்களுக்கு தனக்கு பிடித்தமாதிரி திருமணம் ஆகவில்லை என்று அடிக்கடி புலம்பி கொண்டிருக்கிறார். இனியா திருமணத்தை நான் அப்படி நடத்த வேண்டும் இப்படி நடத்த வேண்டும் என்று கனவு கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகன் தான் இனியா காதலிக்கும் நபர் என்று தெரியும்போது ஈஸ்வரி சம்மதிக்காமல் பிரச்சனை செய்வார். அப்போது பாக்யா என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. பாக்கியா ஒவ்வொரு இடத்திலும் செல்வி என்னுடைய தோழி மட்டுமல்ல என்னுடைய சகோதரி என்று சொல்லி இருக்கிறார்.
அதுபோல தன்னுடைய மகனுக்கு பீஸ் கட்டி இத்தனை நாட்களாக படிக்க வைத்தது கூட பாக்கியா அக்கா தான் என்று செல்வியும் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் செல்வியின் மகனுக்கு மகளை கல்யாணம் பண்ணி வைப்பதற்காக பாக்கியா என்ன சொல்லப் போகிறார் என்றும் கேள்விகள் எழும்புகிறது.
விஜய் டிவி சீரியல் நடிகைக்கு எளிமையான திருமணம்.. கணவர் இவர் தானா? குவிந்த சீரியல் பிரபலங்கள்
இப்படியான பரபரப்பான நேரத்தில் பாக்கியாவாக நடிக்கும் சுசித்ரா மற்றும் ஈஸ்வரியாக நடிக்கும் ராஜேஸ்வரி இருவரும் வெளியிட்ட வீடியோ தான் இணையத்தில் அதிகமாக பகிரப்படுகிறது. அதாவது சுசித்ரா சீரியலில் தான் சீரியஸாக நடித்துக் கொண்டிருப்பார். ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் கிடைக்கும் கேப்பில் எல்லாம் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவார்.

ஆரம்பத்தில் பாக்கியாவும் ராதிகாவும் எதிரிகளாக இருந்தனர். அப்போது கூட இருவரும் ஜோடியாக ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தனர். அது போல தான் இப்போது ஈஸ்வரியோடு சேர்ந்தே பாக்யா வீடியோ வெளியிட்டு இருக்கிறார். வடிவேலு மற்றும் கோவை சரளா பேசிய வீடியோவிற்கு இவர்கள் நடித்திருக்கிறார்கள்.

அதில் வடிவேலு ரெண்டும் ஒன்னு எத்தனை என்று கோவை சரளாவிடம் கேட்க, கோவை சரளா மூன்று என்று சொல்வார். ஆனால் அது பள்ளிக்கூடத்து கணக்கு புருஷன் கணக்கு நாலு என்று வடிவேலு சொல்லுவார். அந்த காமெடிக்கு தான் இவர்கள் இருவரும் ரீல்ஸ் வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications