விஜய் டிவி சீரியல் நடிகைக்கு எளிமையான திருமணம்.. கணவர் இவர் தானா? குவிந்த சீரியல் பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான அன்புடன் குஷி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமான மான்சி ஜோஷிக்கும் அவருடைய காதலருக்கும் எளிமையாக திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த திருமண கொண்டாட்டத்தில் அவருடைய சின்னத்திரை நண்பர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஒரு சில நடிகைகள் தமிழில் ஒரு சில சீரியல்களில் தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் இணையத்தில் பயங்கர ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்கள் பலருக்கும் பரிச்சயமான நபர்களாக இருக்கிறார்கள். அதுபோலத்தான் நடிகை மான்சி ஜோஷியும். இவர் தமிழில் "அன்புடன் குஷி" சீரியலில் தான் அறிமுகமானார்.

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் எல்லாம் ரசிகர்களுக்கு அதிகம் பரீட்சையமான நபர்களாக இருக்கிறார்கள். காரணம் விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அந்த சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொள்கிறார்கள். அதுபோல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார்கள்.

அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்கள் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வரிசையில் விஜய் டிவி, ஜீ தமிழ் சன் டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து பிரபலமான மான்சி ஜோஷிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். மான்சி ஜோஷிக்கு இன்று எளிமையாக திருமணம் நடைபெற்று இருக்கிறது.
அதுபோல மான்சி ஜோஷி அன்புடன் குஷி என்ற சீரியலில் நடிகர் பிரஜானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் சில காரணங்களால் சீரியலில் இருந்து திடீரென்று விலகி இருந்தார். அதுபோல இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது.

அன்புடன் குஷி சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி சீரியலிலும் வில்லி கேரக்டரில் மான்சி நடித்திருந்தார். ஆனால் தமிழை விடவும் மான்சி கன்னட சீரியல்களில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அறிவித்திருந்தார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா பகிர்ந்த போட்டோஸ்..குவியும் வாழ்த்து
அதை தொடர்ந்து மான்சி ஜோஷிக்கும் அவருடைய காதலர் ராகவ் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்களுடைய திருமணம் பிராமண முறைப்படி எளிமையாக நடைபெற்றிருக்கிறது. இவர்களுடைய திருமணத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தைப்போல சீரியல் கதாநாயகி உட்பட பல சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள்.

அதுபோல மான்சி கர்நாடக மாநிலத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். பள்ளி படிப்பை பெங்களூரில் முடித்துவிட்டு, கல்லூரி படிப்பை மங்களூரில் படித்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக காலேஜ் முடிந்ததும் மாடலிங் தொடங்கிய இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
விஜய் டிவி சீரியல் கதாநாயகனுக்கு தலையில் நடந்த விபரீதம்..இப்படியா பண்ணுவாங்க? வெளியான வீடியோ
ஆரம்பத்திலேயே சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது தமிழில் அதிகமான சீரியல்களில் நடிக்கவில்லை என்றாலும் கன்னடத்தில் இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள இருந்த தம்பதிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications