விஜய் டிவி சீரியல் கதாநாயகனுக்கு தலையில் நடந்த விபரீதம்..இப்படியா பண்ணுவாங்க? வெளியான வீடியோ
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசல் படி சீரியலில் கதாநாயகனாக நடித்த நடிகர் அவினாஷுக்கு நடந்த அசம்பாவிதம் குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பார்லர் ஒன்றில் தன்னுடைய தலைமுடிக்காக கலரிங் செய்யப் போன இடத்தில் நடந்த விபரீதம் குறித்து அவர் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
தற்போதைய சூழ்நிலையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருட்களிலும் கலப்படம் கலந்து விட்டது. அதுபோல சில எக்ஸ்பையரியான பொருட்களையும் அதனுடைய விபரீதம் தெரியாமல் சில கடைகளில் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை பிரச்சனைகள் சிக்க வைக்கிறார்கள். பொருள்களுக்கு அதற்குரிய குறிப்பிட்ட காலக்கெடு முடிந்துவிட்டால் அதனை தூக்கி எறியாமல் அப்பாவி மக்களை வைத்து சோதனை செய்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட வைத்து விடுகிறார்கள்.

அதுபோலத்தான் நடிகர் அவினாஷுக்கு எதிர்பார்க்காத அசம்பாவிதம் நடைபெற்று இருக்கிறது. நடிகர் அவினாஷ் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலமாக சின்னத்திரையில் என்ட்ரி ஆனார். அதற்கு பிறகு கயல் சீரியலிலும் கயலின் தம்பியாக நடித்து வந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது டான்ஸ் பிராக்டிஸ் செய்யும்போது அவருடைய காலில் ஏற்பட்ட விபத்தால் சில மாதங்கள் நடக்க முடியாமல் வீல்சேரில் இருந்தார். பிறகு மெல்ல மெல்ல அதிலிருந்து உடல்நிலை தேறி அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு வாசல் படி என்ற சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்து வந்தார். அந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது.

இப்போது மீண்டும் விஜய் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல அவினாஷ் பாக்யலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை அன்ஷிதாவின் அண்ணன் தான். இந்த நிலையில் அவினாஷ் இப்போது வெளியிட்ட வீடியோ இணையத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அவர் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய தலைமுடியின் கலரை மாற்ற வேண்டும் என்று நேச்சுரல் பியூட்டி என்ற பார்லருக்கு கலரிங் செய்ய சென்று இருந்தாராம். அங்கு அவருக்கு தலைமுடி கலரிங் செய்யும்போது தலையில் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. அலர்ஜி போல இருக்கிறது என்று நான் கூறினேன் ஆனாலும் அவர்கள் சிறிது நேரத்தில் சரியாக போய்விடும் என்று எனக்கு மீண்டும் மீண்டும் கலரிங் செய்து கொண்டே இருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் எனக்கு தலைவலி அதிகமாகிவிட்டது அதற்குப் பிறகு முடியை கிளீன் பண்ணி காய வைத்தார்கள் ஆனால் நான் எதிர்பார்த்த கலர் வரவே இல்லை என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் பிறகு அவர்கள் பயன்படுத்திய பொருளை நான் சோதித்துப் பார்த்தபோது எல்லாமே காலக்கெடு முடிந்ததாக இருந்தது.
அதனால் அது பற்றி நான் அங்கு இருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் இதை மேனேஜரிடம் தான் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பிறகு மேனேஜரிடம் போன் செய்தேன் அவர்களும் எனக்கு சரியான ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. எக்ஸ்பையரியான பொருளை தலையில் தேய்த்ததால் தலை முடி வித்தியாசமாக மாறி இருக்கிறது. அதுபோல என்னுடைய தலையிலும் புண் ஏற்பட்டு இருக்கிறது என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications