வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா பகிர்ந்த போட்டோஸ்..குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை கேப்ரில்லா செல்லஸ்க்கு நேற்று அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வளைகாப்பு நடத்தி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்ரில்லா பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக பிரபலங்கள் என்றாலே அவர்கள் பற்றி அடிக்கடி வதந்திகள் பரவி வருவது வாடிக்கைதான். அதுபோலத்தான் சில மாதங்களுக்கு முன்பு நடிகை கேப்ரில்லா குறித்து பல வதந்திகள் பரவி வந்தது. அதாவது அவருடைய கணவர் சுருளியை விவாகரத்து செய்யப் போகிறார் என்று செய்திகள் வெளியானது. அந்த நேரத்தில் இந்த வதந்தி குறித்து கேப்ரில்லா எந்த விஷயத்தையும் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

அதோடு தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியையும் பகிர்ந்திருந்தார். அதைக் கேட்டதும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் "கதை சொல்வோமா" என்ற வீடியோஸ் வெளியிட்டு ரசிகர்களுக்கு பிரபலமானார். அதில் தந்தை மகள் உறவு, அக்கா தங்கை உறவு, அக்கா தம்பி உறவு என்று குடும்ப உறவுகளை மையப்படுத்தி அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இவருடைய அழகான கவிதைகள் பலருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் தவறாமல் இடம்பிடித்து வந்தது.

மகிழ்ச்சியில் நெப்போலியன் குடும்பம்.. மகன், மருமகளுக்கு செம வரவேற்பு.. நெகிழ்ச்சியான பதிவு
அதன் மூலமாகத்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கேப்ரில்லாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவரால் அதிக நாட்கள் தொடர முடியவில்லை. பாதியிலே அவர் வெளியேற்றப்பட்டார். ஆனாலும் உண்மையான திறமைக்கு அங்கீகாரமாக அவருக்கு சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் சுந்தரி சீரியல் மூலமாக குடும்பங்களில் சுந்தரியாகவே இவர் வாழ்ந்தார். தற்போது அந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது. சீரியல் முடிவடைந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்த செய்தியையும் பகிர்ந்து விட்டு தனது சொந்த ஊருக்கு கிளம்பி விட்டார். தன்னுடைய சொந்த ஊரில் இருந்தபடியே பல போட்டோக்களை எடுத்து அடிக்கடி சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்த புகைப்படங்களை கேப்ரில்லா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த பங்க்ஷனில் சுந்தரி சீரியலில் கேப்ரில்லாவோடு நடித்த பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

கேப்ரில்லா சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொந்த ஊரை விட்டு பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சென்னைக்கு வந்த நிலையில் அவருக்கு சுருளி என்பவர்தான் சப்போர்ட் செய்து வந்தாராம். சினிமாவில் வாய்ப்பு தேடி கேப்ரில்லா அலைந்தபோதும் அவருக்கு பக்க பலமாக சுருளி என்பவர்தான் இருந்தாராம். முதலில் நண்பர்களாக பழக்கம் ஏற்பட்ட பிறகு காதலித்து நாங்கள் திருமணம் செய்திருக்கிறோம். இப்ப வரைக்கும் என்னுடைய முயற்சிக்கு துணையாக இருப்பது என்னுடைய கணவர் தான் என்று தன்னைப் பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு தன்னுடைய பதிவுகள் மூலமாகவே கேப்ரில்லா பதிலடி கொடுத்திருக்கிறார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications