மகிழ்ச்சியில் நெப்போலியன் குடும்பம்.. மகன், மருமகளுக்கு செம வரவேற்பு.. நெகிழ்ச்சியான பதிவு
சென்னை: நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றிருந்த நிலையில் தன்னுடைய மகன் மற்றும் மருமகளுக்காக தன்னுடைய நண்பர் குடும்பத்தினர் மலேசியாவில் கொடுத்த விருந்து மற்றும் வரவேற்பு பற்றி நெப்போலியன் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
சாதாரணமாக பெற்றோர்கள் எல்லோருமே தங்களுடைய குழந்தைகள் தங்கள் கண் முன்பு சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஆனந்தப்படுவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகளுக்கு சில பிரச்சனைகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி தங்களுடைய குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அவர்களுக்கு வரும் விமர்சனங்களையும், சோதனைகளையும் தாங்க வேண்டும் என்று பல பெற்றோர்கள் குழந்தைகளுக்காக உறுதுணையாக இருக்கிறார்கள்.

அந்த வகையில் நடிகர் நெப்போலியனும் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் இரு மகன்களுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார். நெப்போலியனை 80ஸ் காலகட்டத்தில் வில்லனாக பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு பிறகு 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் அரசியலிலும் பல வருடங்களாக பணியாற்றி இருக்கிறார்.
ஆனால் இப்போது அரசியல், சினிமா என எல்லாவற்றையும் விட்டு விலகி குடும்பத்தோடு அமெரிக்காவில் குடி பெயர்ந்து இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் தன்னுடைய மூத்த மகனின் உடல்நிலை தான் என்று பல பேட்டிகளில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு நான்கு வயது இருக்கும்போதே தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்காக பல இடங்களில் சிகிச்சை எடுத்தும் உடல்நிலை பிரச்சனை சரியாகாததால் தன்னுடைய மகனின் மனநிலை மாற்றத்திற்காக அமெரிக்காவில் குடும்பத்தோடு நெப்போலியன் செட்டில் ஆகி இருக்கிறார்.
அங்கு இயற்கை விவசாயமும் செய்து கொண்டிருக்கிறார். பல தமிழர்களுக்கு தன்னுடைய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கும் நெப்போலியன் தன்னுடைய மகனைப் போல தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக திருநெல்வேலியில் மயோபதி என்ற மருத்துவமனையை கட்டி தொடர்ந்து நிர்வகித்து பல குழந்தைகளுக்கு இலவச மருத்துவம் செய்து வருகிறார்.

தான் பிரபலமாக இருந்தாலும் தன்னுடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகைகளில் பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களுடைய வாழ்க்கையை தைரியத்தோடு எதிர்கொள்வதற்கு நெப்போலியன் குடும்பத்தினர் மோட்டிவேஷன் கொடுத்து வருகிறார்கள்.
நெப்போலியன் வீட்டில் எளிமையாக நடந்த கொண்டாட்டம்.. மகிழ்ச்சியில் மருமகள்.. குவியும் வாழ்த்து
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் நெப்போலியனின் மகன் திருமணம் நடைபெற்றது. அப்போது பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. நெப்போலியன் மகனால் திருமண வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியாது, ஆனால் நெப்போலியன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து தன்னுடைய மருமகளாக மாற்றி இருக்கிறார் என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி தன்னுடைய மகன் சந்தோஷமாக வாழ வேண்டும், எங்களுடைய மருமகள்தான் எங்களுடைய குலதெய்வம் என்று நெப்போலியன் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் வைத்து நடத்தி முடித்த பிறகு மூன்று மாதங்களாக ஜப்பானிலேயே இருந்த நெப்போலியன் குடும்பத்தினர் இப்போது அங்கிருந்து மீண்டும் அமெரிக்காவிற்கு கிளம்பி இருக்கிறார்கள்.
மகன், மருமகள் பற்றி நெப்போலியன் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி.. இந்த நாள் மறக்க முடியாது என உருக்கம்!
தனுஷால் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் தரைவழி பயணமாக கப்பலில் பயணம் செல்கிறார்கள். அப்போது பல இடங்களில் தாங்கள் பார்த்து ரசிக்கும் வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று நெப்போலியன் பகிர்ந்த பதிவு பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.
அதில், அன்புள்ள நண்பர்களே பிப்ரவரி 15ஆம் தேதி ஹோல் தினத்தன்று சிங்கப்பூரில் இருந்து மலேசியா - கொலம்பூர் வழியாக மலாக்காவுக்கு பயணம் செய்தோம். எனது சிறந்த நண்பர்களில் ஒருவரான, மஇகா தலைவர் மலேசியாவின் முன்னாள் மினிஸ்டர், மறைந்த டத்தோஸ்ரீ சாமி வேலு உறவினர் பசில் & சாந்தா அவர்கள் சீன நடனம் மற்றும் ஆசீர்வாதங்களுடன் மதிய உணவாக நமது தமிழ்நாட்டு பாரம்பரிய வாழை இலை உணவுடன் தனது வீட்டில் மிகச்சிறந்த மற்றும் பிரம்மாண்ட வரவேற்பு வழங்கினர்.

அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். டோக்கியோ ஜப்பானுக்கு தனுஷ் அண்ட் அக்ஷயா திருமணத்திற்காக பசில் & சாந்தாவும் வந்தனர் என்று பகிர்ந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications