நெப்போலியன் வீட்டில் எளிமையாக நடந்த கொண்டாட்டம்.. மகிழ்ச்சியில் மருமகள்.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகரும் அரசியல் பிரமுகருமான நெப்போலியன் வீட்டில் எளிமையான கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது. அப்போது நெப்போலியன் அவருடைய மனைவியோடு கேக் வெட்டி மகிழ்ந்திருக்கிறார். அந்த இனிமையான தருணங்களை நெப்போலியன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
நேற்று பிப்ரவரி 14 காதலர் தினம். இதை உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். காதலர் தினம் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஹக் டே, கிஸ் டே, சாக்லேட் டே என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டே கொண்டாடி வந்த மக்கள் நேற்று காதலர் தினத்தில் தங்களுடைய காதல், அன்பை சமூக வலைத்தளங்களிலும் காட்டி இருந்தனர்.

வித விதமான புகைப்படங்களை எடுத்து அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து சிங்கிளாக இருப்பவர்களை வெறுப்பேற்றியவர்கள் ஏராளம். அதனால் சிங்கிள்ஸ் பலரும் தங்களை தாங்களே காதலிப்பதாகவும், தங்கள் வீட்டு பிராணிகளை காதலிப்பதாகவும் போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர். இது ஒரு விதத்தில் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.
அதே நேரத்தில் ஏற்கனவே சில மாதங்களாக சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்படும் நபர்களில் ஒருவராக இருக்கும் நெப்போலியன் குடும்பத்தினரும் அவர்கள் வீட்டில் காதலர் தினத்தை எளிமையாக கொண்டாடி இருக்கிறார்கள். நெப்போலியனின் மூத்த மகன் தனுஷிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
இந்து முறைப்படி எளிமையாக நடந்த நடிகை வனிதாவின் திருமணம்.. வதந்திகளுக்கு மத்தியில் இப்படி ஒரு முடிவா?
நெப்போலியன் மகன் தனுஷ் திருமணம் நடைபெறப்போகிறது என்றதுமே இணையத்தில் அதிகமான விமர்சனங்கள் வந்தது. நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் நான்கு வயதில் இருக்கும்போது தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் 10 வயதுக்கு மேல் அவரால் எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்ததால் எவ்வளவு சிகிச்சைகள் எடுத்தும் முழுமையாக அவருக்கு சரியாகாமல் இருப்பதால் அவருக்கு திருமணம் செய்து வைப்பது தவறு என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்தனர்.

இன்னும் ஒரு சிலர் நெப்போலியன் ஒரு அப்பாவாக சரியான முடிவெடுத்திருக்கிறார் என்று கூறிவந்தனர். அதுபோல தன்னுடைய மகனுக்காக அமெரிக்காவில் குடும்பத்தோடு செட்டில் ஆகி இருக்கும் நெப்போலியன் மகன் ஆசைப்பட்டார் என்பதற்காக ஜப்பானுக்கு மூன்று மாதம் சுற்றுலா செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு திருமணம் முடிவு ஆகி இருந்தது.
அதனால் ஜப்பானிலேயே திருமணத்தையும் முடித்துவிட்டார். இந்த திருமணத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, மீனா, குஷ்பூ உட்பட பல 80ஸ் நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு அப்போது எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. அதுபோல நெப்போலியன் மருமகள் கட்டாய திருமணம் செய்து இருக்கிறார் என்றெல்லாம் சிலர் விமர்சித்து வந்தனர்.
காப்பிரைட் பிரச்சனை.. தேவா சொல்வது பொய்! நடப்பது இதுதான்! திடீரென ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவு
ஆனால் தனக்கு சிறுவயதிலிருந்து நெப்போலியன் குடும்பத்தை தெரியும். நான் விருப்பப்பட்டு தான் தனுஷை திருமணம் செய்திருக்கிறேன் என்று தன்னை பற்றி விமர்சனங்களுக்கு நெப்போலியனின் மருமகள் அக்ஷயா பதில் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் ஜப்பானில் சுற்றுலா சென்றிருந்த நெப்போலியன் குடும்பத்தினர் இப்போது அங்கிருந்து கிளம்பி சிங்கப்பூர் வந்திருக்கின்றனர்.

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு அவர்கள் வீட்டில் எளிமையாக காதலர் தினத்தை கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது நெப்போலியனின் மகன் மற்றும் மருமகள் இருவரும் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள். அதை தொடர்ந்து நெப்போலியனும் அவருடைய மனைவியும் கேக் வெட்டி தங்களுடைய காதலை பரிமாறி இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனுஷ் மற்றும் அக்ஷயா தம்பதி இதுபோல சந்தோஷமாக வாழ வேண்டும் என்று பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications