காப்பிரைட் பிரச்சனை.. தேவா சொல்வது பொய்! நடப்பது இதுதான்! திடீரென ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவு
சென்னை: இசையமைப்பாளர் தேவா தன்னுடைய பாடல்களுக்கு தான் காப்பிரைட் கேட்கப்போவதில்லை என்று சொன்னதாக செய்திகள் வைரலானதை தொடர்ந்து, ஜேம்ஸ் வசந்தன் அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் இசை அமைப்பாளர்களின் காப்பி ரைட் பற்றிய விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பிரபலமான ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணயம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து இசை அமைப்பாளர் அவதாரமும் எடுத்திருந்தார். அதுபோல "ஓ அந்த நாட்கள்" என்ற திரைப்படத்தை இயக்கியும் இருக்கிறார். அதுபோல சமூக வலைத்தளத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து அடிக்கடி பதிவு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதிலும் இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கு காப்பிரைட் கேட்டது குறித்து அதிகமாக ஜேம்ஸ் வசந்தன் பேசியிருந்தார். அதுபோல சில நாட்களுக்கு முன்பு இசை அமைப்பாளர் தேவா, என்னுடைய பாடல்களுக்கு நான் காப்பி ரைட் கேட்க மாட்டேன். என்னுடைய பாடல்கள் மீண்டும் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுவதை இப்போது உள்ள 2k கிட்ஸ்களும் கேட்டு ரசிக்கிறார்கள்.
இது கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம். எனக்கு பணத்தை விடவும் இப்போது உள்ள ரசிகர்கள் என்னுடைய பாடலை கேட்பதுதான் மகிழ்ச்சி என்று பேசியதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இது பற்றி ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய facebook தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில்,
"என் பாடல்களுக்கு நான் Copyright கேட்கமாட்டேன்" என இசையமைப்பாளர் தேவா அண்மையில் சொன்னதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வலம்வருகிறது. அப்படி அவர் சொல்லியிருந்தால் அது அவரது அறியாமை அல்லது உண்மையற்ற கூற்று.
ஏனெனில் இந்தியாவிலுள்ள எல்லா இசையமைப்பாளர்களைப் போலவே (இளையராஜா தவிர) அவரும் ஒரு IPRS உறுப்பினர்தான். நீங்களே அந்த இணையதளத்தில் போய் பார்த்துக்கொள்ளலாம். இது ஒன்றும் ரகசியமெல்லாம் அல்ல. யார் வேண்டுமானாலும் யாரெல்லாம் அதில் உள்ளனர் என்பதைக் காண இயலும். உறுப்பினர் பெயர்கள் எல்லாமே அதில் உள்ளன. DEVA - COMPOSER - 00254161291
நாம் இதில் உறுப்பினராக இணைந்துவிட்டால், நம் பாடல் ஒன்று வெளியாகி விட்டால், அதை ரசிகர்கள் கேட்கக் கேட்க அதற்கான ஆதாய உரிமைத்தொகை நம் கணக்கில் சேர்ந்துகொண்டே இருக்கும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாளில் நம் கணக்கிலிருக்கும் தொகையை நமக்கு அனுப்பிவிடுவார்கள்.

இப்படி அவருக்கும் எல்லாருக்கும் இது வந்துகொண்டேதானிருக்கும். எங்கள் எல்லாருக்கும் வந்துகொண்டுதானிருக்கிறது. இதன் பின்னணி தெரியாத பலர் அவரைப் பாரட்டியும் இளையராஜாவை இகழ்ந்தும் பேசிவருதால் இதனை எல்லோரும் அறிந்துகொள்வது நலம் என்று இந்த விளக்கம் என ஜேம்ஸ் வசந்தன் விளக்கம் கொடுத்து இருக்கிறார். ஏற்கனவே சில நாட்களாக தேவா காப்பிரைட் நான் கேட்க மாட்டேன் என்று சொன்னதாக செய்திகள் வெளியானதில் இருந்து அதிகமான ரசிகர்கள் இளையராஜாவை திட்டி வருகிறார்கள்.
இன்னும் ஒரு சில ரசிகர்கள் தேவா போடுவது காபி பாடல் அதனால் அவர் காப்பிரைட் கேட்கவில்லை என்று கிண்டல் செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் இப்போது ஜேம்ஸ் வசந்தன் புது விளக்கம் கொடுத்திருக்கிறார். இதற்கு தேவா தரப்பில் இருந்து என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications