வீழ்ந்தது போர்ச்சுகல்.. வீழ்த்தியது ரொனால்டோவின் சுயநலம்! 2026 உலகக்கோப்பையின் ஆகப்பெரும் துரோகம்
நியூயார்க்: 2026 உலகக் கோப்பை முழுக்க சுயநலமாக ஆடுகிறார்.. அதீத சுயநலத்துடன் தான் மட்டுமே கோல் அடிக்க வேண்டும் என்று ஆடுகிறார் என ரொனால்டோ மீது புகார்கள் வைக்கப்பட்டன. கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது வைக்கப்பட்ட இந்த புகார்களை மெய்ப்பிக்கும் விதமாக அவரின் மோசமான ஆட்டம் காரணமாக அவரின் போர்ச்சுகல் அணியே தற்போது தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
விளையாட்டு உலகம் எத்தனையோ துரோகங்களையும் ஏமாற்றங்களையும் பார்த்திருக்கிறது. ஆனால், ஒரு ஒட்டுமொத்த தேசத்தின் கனவையும், ஒரு தலைமுறையின் அசாத்திய உழைப்பையும், ஒரே ஒரு மனிதனின் சுயநலம் எப்படிப் பலிகடா ஆக்கும் என்பதற்கு நேற்று நடைபெற்ற போர்ச்சுகல் ஆட்டமே உதாரணம்!

ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் தோற்று போர்ச்சுகல் வெளியேறிய கணத்தில், உலகமே அழுதது ரொனால்டோவிற்காக அல்ல.. அந்த ஒரு மனிதனின் அகந்தையால் சிதைந்துபோன போர்ச்சுகல் நாட்டின் கனவுக்காக!
ரொனால்டோ செய்த துரோகம்!
போர்ச்சுகல் என்றாலே கிறிஸ்டியானோ ரொனால்டோ தான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்தப் பெருமையே அந்த அணிக்கு ஒரு சாபக்கேடாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. புருனோ பெர்னாண்டஸ், விடின்ஹா, பெர்னார்டோ சில்வா, ரஃபேல் லியோ என தற்போதைய கால்பந்து உலகின் மிக உன்னதமான, அசுர வேகம் கொண்ட வீரர்களை கையில் வைத்திருந்தது போர்ச்சுகல்.
ஆனால், இத்தனை பேரின் திறமையும், வியர்வையும் களத்தில் ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டும் அடகு வைக்கப்பட்டது.. அது, ரொனால்டோவை எப்படியாவது கோல் அடிக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே! அதுவே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
ரொனால்டோ மோசம்
2016 உலகக்கோப்பை டி 20 செமி பைனல் ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் மோசமான ஆட்டத்தால் இந்திய கிரிக்கெட் அணி மிக மோசமாக தோல்வி அடையும். அப்படி ஒருவரின் ஆட்டம் எப்படி நாட்டின் வெற்றியை பாதித்ததோ அதேபோல் இந்த தொடர் முழுக்கவே ரொனால்டோவின் ஆட்டம் போர்ச்சுகல் அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
கால்பந்து என்பது 11 பேரின் கூட்டு முயற்சி. ஆனால், போர்ச்சுகல் ஆடிய ஆட்டத்திலோ 10 பேர் உழைக்க, அந்த உழைப்பின் பலனைத் தன் தனிப்பட்ட கணக்கில் வரவு வைக்கும் வகையில் ரொனால்டோ செயல்பட்டார். வயது முதிர்வின் காரணமாக அவரால் ஓட முடியவில்லை, பந்தைப் பின்தொடர்ந்து எதிரணியை முடக்க முடியவில்லை. முக்கியமாக தனது சொந்த அணி வீரர்களே கோல் அடித்தால் அதற்கு சந்தோசப்படாமல்.. அவர் எப்படி கோல் அடிக்கலாம் என்று ரொனால்டோ சண்டைக்கு செல்லும் நிலை கூட இருந்தது.
இவருக்கு இருக்கும் பிரபலம் காரணமாக.. பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ் கூட அவரிடம் ஒரு அடிமையைப் போல களத்தில் நின்றார்.
சொந்த அணிக்கு உள்ளேயே மோதல்
தொடரின் ஆரம்பத்திலிருந்தே ரொனால்டோவின் இந்த சுயநல ஆட்டம் அணியின் ஆன்மாவைக் கொன்றது. காங்கோ அணிக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில், இளம் வீரர்கள் மிக நேர்த்தியாகப் பந்தை எடுத்து கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறிய போதெல்லாம், ரொனால்டோ அவர்களுக்கு வழிவிட மறுத்து, பந்து தனக்குத் தான் வரவேண்டும் என்று அடம்பிடித்தார்.
பல பொன்னான வாய்ப்புகள் ரொனால்டோவின் கால்களில் பட்டு திசைமாறின. முன்னாள் ஜாம்பவான்கள் பலர்.. அணிக்கு கோல் தேவை, உங்களது தனிப்பட்ட சாதனை முக்கியம் அல்ல என்று ரொனால்டோவின் முகத்தில் அடித்தாற்போல் விமர்சித்தார்.
புருனோ பெர்னாண்டஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள், தாங்கள் கோல் அடிக்க வாய்ப்பு இருந்தும் ரொனால்டோவிற்கு பந்தைக் கொடுக்காவிட்டால் என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே விளையாடினர். ஒரு ஜாம்பவான் இளைய தலைமுறையை வழிநடத்த வேண்டும், ஆனால் ரொனால்டோவோ அவர்களின் சிறகுகளை ஒடித்து, தன் நிழலில் அவர்களை முடக்கி வைத்தார்.
நாக் அவுட்
ஸ்பெயின் அணிக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில் போர்ச்சுகலின் இந்த பலவீனம் அப்பட்டமாக அம்பலமானது. ஸ்பெயினின் இளம் மிட்பீல்டர்கள் மைதானமெங்கும் பறந்து விளையாடிய போது, 41 வயதான ரொனால்டோ ஒரு கல்லை போல பாக்ஸிற்குள் நின்று கொண்டிருந்தார்.
அவர் ஓடாததால், ஸ்பெயின் அணி மிக எளிதாக ஆட்டத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது. 91-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மெரினோ கோல் அடித்து போர்ச்சுகலின் கதையை முடித்தார்.
போட்டி முடிந்ததும் ரொனால்டோ வழக்கம் போலக் கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். ஊடகங்கள் அதை சோகமாக சித்தரிக்க முயன்றன. ஆனால், போர்ச்சுகல் நாட்டு ரசிகர்களுக்குத் தெரியும், அது சோகத்தால் வந்த கண்ணீர் அல்ல.. தனக்கு கோல் போட வாய்ப்பு இல்லையே என்ற சுயநல ஏக்கத்தின் வெளிப்பாடு!
ஒரு நல்ல தலைவன் என்பவன் அணிதான் முதல்.. தான் பின்னால்தான் என்று நினைத்திருப்பான்.. ரொனால்டோ அப்படி நினைக்கவே இல்லை.. ரொனால்டோ சிறந்த வீரராக இருக்கலாம்.. ஆனால் சிறந்த தலைவன் இல்லை!














Click it and Unblock the Notifications